முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உப்புமா ஆடுதளத்தில் இந்தியா தோல்வியின் விளிம்பில்


தற்போது ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா ஒரு மீளமுடியாத சிக்கலில் இருக்கிறது. இங்கிலாந்து மோசமாய் கட்டுப்பாடே இன்றி பந்து வீசினால் மட்டுமே இந்தியா தப்பிக்கும். மற்றபடி தோல்வி கிட்டத்தட்ட உறுதி.

ஆடுதளம் தான் முக்கிய காரணம். ராஜ்கோட்டில் நடக்கும் முதல் டெஸ்ட் இது. இந்த நவம்பர் டிசம்பர் காலத்தில் இந்தியா முழுக்கவே மந்தமான பருவச்சூழல் இருக்கும். ஆடுதளத்துக்கு போதுமான வெயில் கிடைக்காது. அதனால் உள்ளுக்குள் சற்று ஈரமாக இருக்கும் ஆடுதளத்தில் ரொம்ப மந்தமாய் மெதுவாய் தான் வரும். இதை சரி செய்ய ஆடுதள தயாரிப்பாளர்கள் தளத்தின் மீதுள்ள புற்களை முழுக்க கத்தரிக்காமல் விடுவார்கள். ஆனால் சரியாக காயாததால் ஆடுதளம் முழுக்க வெடிப்புகளுடன் இருக்கும். இது பந்தை ஏற்ற இறக்கத்துடன் எகிற வைக்கும். இந்த வெடிப்புகள் ரொம்ப விரியக் கூடாது எனும் பதற்றம் தான் ஆடுதள தயாரிப்பாளர்களுக்கு இருக்குமே தவிர ஒரு சிறந்த டெஸ்ட் ஆடுதளமாய் அதை மாற்ற தோன்றாது. தற்காலிக தேவைக்காக அவசர கதியில் பண்ணப்பட்ட இட்லி உப்புமா போன்றது இந்த ஆடுதளம்.
இதில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகாது. ஸ்பின் ஆகாது. ஆனால் புற்கள் இருப்பதால் கொஞ்சம் ஸ்விங் ஆகும். இந்த புற்களையும் ரோலர் மூலம் மண்ணுக்குள் அழுத்தி வைத்திருப்பதால் ஸ்விங் குறைவாக இருக்கும். ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். ஆனால் அதுவும் குறைவாகவே இருக்கும். வழக்கமாய் இந்திய ஆடுதளங்களில் முதல் நாள் ஸ்பின்னர்கள் ஓரளவுக்காவது பந்து வீச முடியும். இந்த ஆடுதளம் மிக மொட்டையாக இருக்கிறது. இதில் பவுலிங் போடவே இந்தியர்கள் விரும்பவில்லை. அவர்களின் ஏமாற்றம் முதல் நாளே தவற விட்ட காட்சுகளால் அதிகமானது. விரக்தியில் கோலி நிதானம் இழந்தார்கள். அவருடன் சேர்ந்து பிற வீரர்களும் தோல்வி பயத்தில் நடுங்கினார்கள். விளைவாக அடுத்த மூன்று நாட்களும் 600 சொச்சம் ரன்களை எப்படி எடுக்க போகிறோம் என யோசித்து தற்போதைய ஆட்டத்தில் கவனம் இழந்தனர். மேலும் கேட்சுகளை தவற விட்டனர். இன்னும் மோசமாய் பவுலிங் செய்தார்கள்.
மலையாக ரன்களை குவித்த நிலையில் இங்கிலாந்தால் இன்னும் கூலாக பொறுமையாக பந்து வீச முடியும். விரிசல்கள் அதிகமானால் பந்துகள் சிலர் தாழ்வாக செல்லும். நம்மை விட நன்றாக பந்தை ரிவர்ஸ் செய்யக் கூடியவரக்ள் இங்கிலாந்து வேகவீச்சாளர்கள். அவர்கள் நேராக பந்தை வீசினாலே (இப்போதைய விரக்தி மனநிலையில்) இந்தியர்கள் எல்.பி.டபிள்யோ மற்றும் பவுல்ட் ஆகி வெளியேறுவார்கள். மேலும் ஆடுதளத்தில் உள்ள புற்கள் தரும் கோஞ்ச நஞ்ச ஸ்விங்கையும் அவர்கள் நன்றாக பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஒருவேளை வெயிலில் தொடர்ந்து காய்ந்து ஆடுதளம் கொஞ்சம் வேகமெடுத்தால் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் உதவும். அதே போல் ஆடுதள விரிசல்களும் மோசமாகாமல் இருந்தால் உதவும். இந்தியா இப்போதைய இங்கிலாந்தின் ஸ்கோரை முறியடித்து லீட் பெற்று மீண்டும் இந்த ஆடுதளத்தில் ஐந்தாவது நாளில் நம் ஸ்பின்னர்கள் பந்து வீசி இங்கிலாந்தை இரண்டாவது இன்னிங்ஸில் சுருட்டுவார்களா? சாத்தியம் குறைவு தான்.
இந்த ஆட்டம் நிச்சயம் டிரா ஆகாது. அதே போல் இந்தியா வெல்லவும் வாய்ப்பு குறைவே. இங்கிலாந்து தாமாகவே இந்த ஆட்டத்தை நமக்கு பரிசளித்தால் தான் உண்டு.

இனிமேலும் இது போன்ற அவசர கதி உப்புமா ஆடுதளங்களில் நாம் ஆடாமல் இருக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...