முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிகரெட் புடிங்க மாமா!

Image result for rasi ajith smokes

அஜித் மற்றும் ரம்பா நடித்த ராசிடிவியில் ஓடிக் கொண்டிருந்தது. தாய் மாமன்அவரை உயிருக்குயிராய் நேசிக்கும் மாமா மகள்குடும்பத் தகராறு, ஈகோ என பாரதிராஜா பாணியிலான படம். ஒரு காட்சியில் அஜித்தை அவரது ரம்பாவின் அப்பா அவமதித்து விட, அஜித் துண்டை உதறி வீட்டை விட்டு வெளியேற அவருக்குப் பின்னால் ஓடிப் போய் அமைதிப்படுத்த முயல்கிறார் ரம்பா. ஆற்றுப்படுத்தும் நோக்கில் ரம்பா அவருக்கு சிகரெட்டுகள் நீட்டுகிறார். சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என அஜித் மறுக்கிறார். உடனே ரம்பாஇல்லை மாமா ஆம்பளைன்னா ஒரு நாளைக்கு நான்கு சிக்ரெட்டாவது புகைக்கணும்என்று கெஞ்சுகிறார். அஜித்தும் நெகிழ்ந்து சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து ஊத முயன்று இருமி சிரமப்படுகிறார். அடுத்து ஒரு அழகான பிம்பம் வருகிறது. அஜித் தன் வாயில் இருந்து புகையை ரம்பாவின் முகத்தில் ஊதுகிறார். ரம்பா சிலித்து கிளர்ந்து நெளிகிறார். தமிழின் ஆக செக்ஸியான காட்சிகளில் ஒன்று இது எனத் தோன்றுகிறது.


Image result for rasi ajith movie

இதற்கு முன் இத்தகைய ஒரு ஆண்மையை வெளிப்படுத்திய நாயகன் எம்.ஜி.ஆர் ஒருவர் தான். அது போகட்டும்ரம்பா ஏன் ஆம்பளைன்னா சிகரெட் புகைக்கணும் என்கிறார்?
சிகரெட்டுக்கும் ஆண்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதாவது அறிவியல் ரீதியாய். ஆனால் சிகரெட் நிறுவனங்கள் ஆரம்பத்தில் இருந்தே சிகரெட்டை ஆண்மையின் குறியீடாகத் தான் விளம்பரங்கள் வழி கட்டமைத்தார்கள். அதுவும் சமூகத்தில் ஊருக்கு அடங்காத காளையாக திரியும் முரட்டு ஆண் தான் சிகரெட் புகைப்பான் எனும் சித்திரத்தை வெற்றிகரமாய் நிறுவினார்கள். சிகரெட் ஒரு எதிர்க்கலாச்சார சின்னமாகியது. அவ்வாறு தான் அது மைய நீரோட்ட கலாச்சாரத்தில் ஒரு முக்கிய இடம் பிடித்தது.
இப்படத்தில் அஜித் ஒரு அழகான ஆனால் களங்கமற்ற ஆண். அவரை சிகரெட் மூலம் ஆண்மை மிக்கவராக்க முயல்கிறார். பொதுவாக பெண்களுக்கு சிகரெட் வாசம் பிடிக்காது என்பார்கள், இப்படத்தில் ரம்பா தன்னை சிகரெட் வாசனை கிளர்ச்சி அடைய வைக்கிறது என சொல்கிறார்

ரம்பா இப்படி சிந்திப்பதற்கு மற்றொரு காரணம் உள்ளதுஅஜித்துடன் சதா முறைக்கும் ரம்பாவின் அப்பா ஒரு காட்சியில் சுருட்டுப் பிடிக்கிறார். சுருட்டு ஒரு மிகு ஆண்மைக் குறியீடு. தனக்கு வாய்க்கும் காதலன் தன் அப்பாவைப் போன்றே ஆண்மையாய், ஆனால் சற்றே மிதமாய் இருக்க வேண்டும் என ரம்பா விரும்புகிறார். அதனாலே சுருட்டு கொடுக்காமல் சிகரெட் கொடுக்கிறார்.
இந்த பெண்மை சித்தரிப்பு எவ்வளவு பாசாங்கற்றதாய், ரத்தமும் நிணமுமாய் உள்ளது பாருங்கள். இப்போதெல்லாம் இப்படியான பெண் பாத்திரங்கள் நம் சினிமாவில் வருவதில்லை. இப்போது அரசியல் சரித்தன்மையை இயக்குநர்கள் மிக முக்கியமாய் நினைக்கிறார்கள். ஆக, நம் படங்களைப் பார்க்கும் பெண்கள், தலித்துகள், ஊனமுற்றவர்கள், இஸ்லாமியர், ஆண்கள், அப்பா, தாத்தா, முதியோர், அம்மா, அத்தை, பாட்டி என யாருமே 'அசௌகரியமாய்' உணராதபடி, காயப்படாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். விளைவாக இப்போது வரும் மனிதர்கள் சுதந்திர தின ராணுவ அணிவகுப்பில் மிடுக்காய் வரும் சிப்பாய்கள் போல் இருக்கிறார்கள். இன்றைய படங்களில் நாயகன் பதற்றமாய் இருந்தால் மட்டும் சிகரெட் பிடிக்கிறான். காதலி ஏமாற்றினால் மட்டும் தண்ணி அடிக்கிறான். சிகரெட்டையும் மதுவையும் ஒருவித உதிரி தேவைகளாய் இன்றைய படங்கள் சித்தரிக்கின்றன

ஆனால் “ராசிமாதிரியான அந்த கால படங்களில் ஒரு கலப்படமில்லாத தமிழ் மனம் தெரிகிறது. இம்மாதிரி படங்களை இப்போது மிஸ் பண்ணுகிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...