முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தப்பியோட்டம்


Related image
என் வாழ்வின் கணிசமான பகுதியை நான் பிரியமானவர்களுக்காக செலவழித்திருக்கிறேன். ஆனால் அவர்களில் எத்தனை பேர் இப்போது என்னுடன் இருக்கிறார்கள்? உறவுகளின் அழகு அதன் நிரந்தரமின்மை எனத் தோன்றுகிறது.

எத்தனை எத்தனையோ வேலைகள் செய்திருக்கிறேன். அந்த வேலைகளில் இருந்தும் ஒன்றும் பெற்று விடவில்லை. சம்பாதித்த பணமும் தங்கவில்லை. இனிய, கசப்பான நினைவுகள் மட்டுமே எஞ்சுகின்றன. கடந்த 11 ஆண்டுகளாய் நான் எழுதியவை மட்டுமே அவ்வளவு விசுவாசமாய் என்னுடன் ஒரு நிழலைப் போல வருகின்றன.
 இதுவே எல்லா படைப்பாளிகளுக்கும் நேர்வது. எழுத்து நிரந்தரமானது. நிரந்தரமான ஒன்றுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வே தனிமையை ஏற்படுத்துகிறது. இந்த தனிமையின் அழுத்தம் நம்மை நிரந்தரமற்ற துர்பலமான உறவுகள், அனுபவங்களை நோக்கி தள்ளுகின்றன. நிரந்தரத்தின் அழுத்தத்தில் இருந்து, தனிமையில் இருந்து விடுபட மீண்டும் உறவுகள், வேலைகள் என ஒரு சுழற்சிக்குள் போய் விழுகிறோம். அவை எதுவுமே இறுதியில் எஞ்சாது என அறிந்து கொண்டே தான் செய்கிறோம்.
கலை வாழ்வுடன் அணுக்கம் வரும் போதெல்லாம் ஒருவன் மிக மிக சாதாரணமான கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், சூது, காமம், மது, பணம், அதிகாரம், புகழுக்காக அதிகமாய் அலைகழிகிறான். இவை அவன் அழியக் கூடியவன் என அவனுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அதுவே அவனுக்கு வேண்டும். அது அவனுக்கு நிம்மதி கொடுக்கிறது.
கணிசமான கலைஞர்கள் தேவையற்ற சர்ச்சைகளில், சிக்கல்களில் மாட்டி அழிகிறார்கள். மதுவில், நோய்மையில், அன்பில் அழிகிறார்கள். கலை உலகில் ஒரு இடம் பெறுவதை விடவும் இந்த அன்றாட உலகில் தம் இடத்தை அழிப்பதே அவர்களுக்கு உவப்பாக உள்ளது.
ஒரு எழுத்தாளன் எதிர்பாராமல் மரிக்கும் போது அவன் தன் எழுத்து உருவாக்கிய நித்தியத்துடன் இணைகிறான். அவன் அதற்கு மேல் எதையும் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அப்போது அவனது வாசகர்கள் பரிதவிக்கிறார்கள். அவன் எழுத்துலகம் அழியாத இடத்தில் இருப்பது அவர்களை பதற்றப்படுத்துகிறது. அவர்கள் அஞ்சலிக் கூட்டங்களுக்கு குவிகிறார்கள். அவனைப் பற்றின நினைவுகளை தொகுக்கிறார்கள். சக எழுத்தாளர்கள் அஞ்சலிக் குறிப்புகளாக எழுதித் தள்ளுகிறார்கள். மீண்டும் அவனை நிரந்தரத்தில் இருந்து நிரந்தரமின்மை நோக்கி இழுத்துப் போடுகிறார்கள். அவனை கையைப் பற்றி தம் அருகே ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்த்தி, மாலை சார்த்தி, மூக்கில் பஞ்சு வைத்து, அவன் தம்முடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
நமது இந்த சின்ன வாழ்க்கை நிரந்தரத்தில் இருந்து நிரந்தரமின்மை நோக்கிய தப்பியோட்டமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.