முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படம் முடிந்து விட்டது, நீங்கள் வீட்டுக்குள் போகலாம் - மோடிஜி



விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் சில நல்ல முடிவுகளை மத்திய அமைச்சரவை இன்று அறிவித்துள்ளது. (பார்க்க: https://www.hindustantimes.com/india-news/summer-crop-prices-hiked-between-50-80-for-farmers-in-big-cabinet-decision/story-djDKt1eN44jXrR8H3ka7fO.html) இது பாராட்டத்தக்கது. ஆனாலும் மோடிஜியின் அரசு இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது, எத்தனையோ உயிர்கள் பசியிலும் களைப்பிலும் போகாமல் காத்திருக்கலாம். இந்த லாக் டவுனால் கொரோனா ஒழியவில்லை, அதன் பரவல் நிற்கவும் இல்லை. வேகம் மட்டும் குறைந்து இப்போது அதிகரித்திருக்கிறது. இவ்வளவு நாட்கள் மக்களை வீட்டுக்குள் பூட்டி வைத்து நோய்ப்பரவலின் வேகத்தை மட்டுப்படுத்தியது இப்போது லாக் டவுன் நீக்கப்படுவதால் வீணாகி விட்டது.


 எந்த தெளிவான திட்டமும் இல்லாமல் நாடடங்கை கொண்டு வந்ததும் சரி இப்போது நீக்குவதும் சரி மோசமான விளைவுகளையே தந்திருக்கிறது. மோடிஜி நிர்வாகத்தை ஒரு பிரம்மாண்டமான மசாலா படமாகக் காண்பவர்; அப்போக்கின் மற்றொரு அத்தியாயம் இந்த கொரோனா நாடடங்கு.படம் முடிந்து விட்டது எல்லாரும் வெளியே வாருங்கள், வேலைக்கு செல்லுங்கள், கோயில்களில், மால்களில் குழுமுங்கள், பேருந்தில், ரயில்களில், விமானத்தில் பயணியுங்கள் என்கிறார்; கொரோனாவில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது இதன் மறைமுக சேதி. பிக்பாஸ் நம்மை வைத்து நாடகமாடுவாரே தவிர நம்மைப் பாதுகாக்க மாட்டார் என மக்களில் ஒரு சிலருக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
இதற்குப் பதிலாக அவர் கொரோனா நோய் கண்டறியும் கருவிகளை பரவலாக மருத்துவமனைகளில் கிடைக்க, பரிசோதனைகள் அதிகமாக நடக்க, அதைக் கொண்டு நோய்த்தொற்றியவர்களை மட்டும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திருக்கலாம். ஆனால் அவர் சங்கரின் படத்தைப் போல பிரம்மாண்டமாக வண்ணமயமாக ஒரு ராணுவ அணிவகுப்பைப் போல இந்தகொரோனா ஒழிப்பைநிகழ்த்தினார். இப்போது படம் முடிந்து விட்டது, எல்லாரையும் அவர் வீட்டுக்கு அனுப்புகிறார்.
ஆனால் தற்சமயம் விவசாயிகளுக்கு அவர் கொடுத்திருக்கும் இந்த சலுகைகளை, நிவாரணங்களை நான் வரவேற்கிறேன். தன் பிம்பம் சற்றே அடிவாங்கியுள்ளதை அவர் உணர்ந்திருக்கிறார். பணத்தை அள்ளிக்கொடுத்து தற்காலிகமாக அவர்களை வயிற்றை நிறைய வைத்து பின்னர் கைவிட்டு விடுவார் என நினைக்கிறேன். ஏனென்றால் மோடியின் கொள்கை என்றுமே விவசாயிகளை முன்னெடுக்கிற ஒன்றல்ல; அது கார்ப்பரேட்டுகளை கால்பிடித்து விடும் கொள்கை
இப்போது விவசாயிகளுக்கான நிவாரணத்துடன் அவர் அறிவித்துள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான சுமார் 70,000 கோடிப் பணமும் வெறும் கானல் நீராக முடியுமா, நிஜமாகவே வேலைவாய்ப்புகள் மோடிஜி சொல்வது போல அதிகரிக்குமா அல்லது வெறும் புள்ளிவிபரமாக பத்திரிகை அறிக்கையாக முடிந்து போகுமோ தெரியவில்லை. நம்பி வைப்போம். நமக்கு வேறு வழியில்லையே!

கருத்துகள்

Senthilkumar இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent & valid points

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...