முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படம் முடிந்து விட்டது, நீங்கள் வீட்டுக்குள் போகலாம் - மோடிஜி



விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் சில நல்ல முடிவுகளை மத்திய அமைச்சரவை இன்று அறிவித்துள்ளது. (பார்க்க: https://www.hindustantimes.com/india-news/summer-crop-prices-hiked-between-50-80-for-farmers-in-big-cabinet-decision/story-djDKt1eN44jXrR8H3ka7fO.html) இது பாராட்டத்தக்கது. ஆனாலும் மோடிஜியின் அரசு இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது, எத்தனையோ உயிர்கள் பசியிலும் களைப்பிலும் போகாமல் காத்திருக்கலாம். இந்த லாக் டவுனால் கொரோனா ஒழியவில்லை, அதன் பரவல் நிற்கவும் இல்லை. வேகம் மட்டும் குறைந்து இப்போது அதிகரித்திருக்கிறது. இவ்வளவு நாட்கள் மக்களை வீட்டுக்குள் பூட்டி வைத்து நோய்ப்பரவலின் வேகத்தை மட்டுப்படுத்தியது இப்போது லாக் டவுன் நீக்கப்படுவதால் வீணாகி விட்டது.


 எந்த தெளிவான திட்டமும் இல்லாமல் நாடடங்கை கொண்டு வந்ததும் சரி இப்போது நீக்குவதும் சரி மோசமான விளைவுகளையே தந்திருக்கிறது. மோடிஜி நிர்வாகத்தை ஒரு பிரம்மாண்டமான மசாலா படமாகக் காண்பவர்; அப்போக்கின் மற்றொரு அத்தியாயம் இந்த கொரோனா நாடடங்கு.படம் முடிந்து விட்டது எல்லாரும் வெளியே வாருங்கள், வேலைக்கு செல்லுங்கள், கோயில்களில், மால்களில் குழுமுங்கள், பேருந்தில், ரயில்களில், விமானத்தில் பயணியுங்கள் என்கிறார்; கொரோனாவில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது இதன் மறைமுக சேதி. பிக்பாஸ் நம்மை வைத்து நாடகமாடுவாரே தவிர நம்மைப் பாதுகாக்க மாட்டார் என மக்களில் ஒரு சிலருக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
இதற்குப் பதிலாக அவர் கொரோனா நோய் கண்டறியும் கருவிகளை பரவலாக மருத்துவமனைகளில் கிடைக்க, பரிசோதனைகள் அதிகமாக நடக்க, அதைக் கொண்டு நோய்த்தொற்றியவர்களை மட்டும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திருக்கலாம். ஆனால் அவர் சங்கரின் படத்தைப் போல பிரம்மாண்டமாக வண்ணமயமாக ஒரு ராணுவ அணிவகுப்பைப் போல இந்த “கொரோனா ஒழிப்பை” நிகழ்த்தினார். இப்போது படம் முடிந்து விட்டது, எல்லாரையும் அவர் வீட்டுக்கு அனுப்புகிறார்.
ஆனால் தற்சமயம் விவசாயிகளுக்கு அவர் கொடுத்திருக்கும் இந்த சலுகைகளை, நிவாரணங்களை நான் வரவேற்கிறேன். தன் பிம்பம் சற்றே அடிவாங்கியுள்ளதை அவர் உணர்ந்திருக்கிறார். பணத்தை அள்ளிக்கொடுத்து தற்காலிகமாக அவர்களை வயிற்றை நிறைய வைத்து பின்னர் கைவிட்டு விடுவார் என நினைக்கிறேன். ஏனென்றால் மோடியின் கொள்கை என்றுமே விவசாயிகளை முன்னெடுக்கிற ஒன்றல்ல; அது கார்ப்பரேட்டுகளை கால்பிடித்து விடும் கொள்கை. 
இப்போது விவசாயிகளுக்கான நிவாரணத்துடன் அவர் அறிவித்துள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான சுமார் 70,000 கோடிப் பணமும் வெறும் கானல் நீராக முடியுமா, நிஜமாகவே வேலைவாய்ப்புகள் மோடிஜி சொல்வது போல அதிகரிக்குமா அல்லது வெறும் புள்ளிவிபரமாக பத்திரிகை அறிக்கையாக முடிந்து போகுமோ தெரியவில்லை. நம்பி வைப்போம். நமக்கு வேறு வழியில்லையே!

கருத்துகள்

Senthilkumar இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent & valid points

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.