முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்பேத்கரியத்தை திரித்து வைதீகத்தைக் காப்பாற்றும் கோவை ஞானி



//கோவை ஞானி: ஒவ்வொரு இந்திய உடலுக்குள்ளும் உறைந் திருக்கும் தீண்டாமையின் ஆகிருதியை நமக்கு உணர்த்துகிறார் அம்பேத்கர்.//

கோவை ஞானியின் இந்த வாக்கியத்தில் நாம் கவனிக்க வேண்டியது “இந்திய உடல்”. இதைப் பற்றியே நான் பேசப் போகிறேன்.
அம்பேத்கர் தன் கட்டுரைகளில் எங்குமே “இந்திய உடல்” எனச் சொல்வதில்லை. ‘இந்து’ சமூகம் பற்றியே, இந்து உடல் பற்றியே அதன் நோய்க்கூறான சாதியத்தைப் பற்றியே பேசுகிறார். அவர் கோவை ஞானியைப் போல இந்து என்றால் இந்தியா எனும் மையப்படுத்தலையும் ஏற்கவில்லை. இதற்கு ஒரு காரணம் உள்ளது:
 அம்பேத்கர் இங்குள்ள பூர்வகுடிகள் பௌத்தர்கள், வைதீக எதிரிகள் என Who Were the Shudras? நூலில் பேசுகிறார். வைதீக இந்துக்கள் பௌத்தத்தை முறியடித்த பின்னர் அவர்களை ஊரின் எல்லைக்கு வெளியே தங்க வைத்து, தாம் ஒரு காலத்தில் புசித்த மாட்டிறைச்சியை அவர்களை சாப்பிடச் செய்து அதைக் கொண்டே அவர்களை தீண்டத்தகாதவர்கள் ஆக்கினார்கள் என்கிறார் அம்பேத்கர். அப்படி வைதீக இந்துக்களே இங்கு சாதிய அமைப்பை உண்டு பண்ணினார்கள் என்கிறார். பிராமணர்களுக்கு தலித்துகளிடத்தும், தலித்துகளுக்கு பிராமணர்களிடத்தும் பல ஆயிரம் ஆண்டு பகை, அதனாலே அந்த சமூகம் மட்டுமே பிராமணர்களை தம் சடங்குகளில் பங்கேற்க அழைப்பதில்லை என்கிறார் (நிலைமை இங்கு மாறி விட்டது). இதன் விளைவாகவே கடுமையான பௌத்த வெறுப்பு சமிஸ்கிருத நாடகங்களில் காணப்படுகிறது என ஆதாரங்களைத் தருகிறார். இந்த மத வெறுப்பே இன்றுள்ள கொடுமையான சாதிய அடுக்குமுறைக்கு காரணமாகியது என்கிறார். அதாவது அம்பேத்கர் சாதியத்தை வைதீகம்-பிராமணீயம்-பௌத்த வெறுப்பு-சாதிய வெறுப்பு-தீண்டாமை என பகுத்து கொள்கிறார். 
 இயல்பாகவே நமது ஞானி ஐயா வைதீக மதத்தின் மீதான இந்த தாக்குதலை ஏற்க விரும்பவில்லை. ஆகையால் அவர் அம்பேத்கரின் சொற்களைத் திரித்து, தீண்டாமை வெறி உறைந்துள்ளது இந்து உடலில் அல்ல “இந்திய உடல்” என சாமர்த்தியமாய் உருமாற்றுகிறார். இப்படிக் கூறுவதன் மூலம் அவர் குற்றச்சாட்டுகளில் இருந்து இந்து மதத்தை, வைதீகத்தை தப்பித்துப் போக வழி செய்கிறார்.
குறிப்பு: இந்த மென் இந்துத்துவாவைத் தான் நான் சாடுகிறேன். எனக்கு மற்றபடி தனிமனிதர்களிடத்து எந்த வெறுப்பும் இல்லை. தனிமனிதர்களை காவடி எடுக்கும் செண்டிமெண்டுகள் மீது மதிப்பும் இல்லை. 

(“இந்தியாவின் மகத்தான இடதுசாரிகள் காந்தி, பெரியார், அம்பேத்கர்: கோவை ஞானி பேட்டி”, writersamas.blogspot.com)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Already told....I'm not able to see posts in mobile in 5his template...but it is clearly seen in computer...in phone only half part of every post only is shown.mஇதற்கு முந்தைய templettaiai போடவும்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...