முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழரின் துக்கம் மீதான மனச்சாய்வு

தமிழர் வாழ்வில் ஏன் துக்கம் (கூடவே எளிமையும்) ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது எனக் கேட்டு கார்ல் மார்க்ஸ் ஒரு அழகிய பிராயிடிய அலசலை செய்திருக்கிறார். பொருளாதார உயர்வை, பாதுகாப்பை இழந்து விடுவோமோ எனும் அச்சமே இதன் ஆதாரப்புள்ளி என அவர் கருதுகிறார். ஆனால் இது முழுக்க உண்மையா என்றும் தெரியவில்லை.

 மகத்தான மனிதனின் வீழ்ச்சி மேற்கில் கிரேக்க நாடகங்களில் துன்பியலின் இலக்கணமாக இருந்தது, இதுவே பின்னர் மகத்தான ஒன்றின் வீழ்ச்சி (குடும்பம், அன்பு, கற்பு, நம்பிக்கை) என நவீன சனநாயக மத்திய வர்க்கத்திடம் வந்ததோ? 
இன்னொரு பக்கம் வீழ்ச்சியின், துக்கத்தின் அழகியல் அது இருமைகளை உடைக்க உதவுகிறது என்பதாகவும் இருக்கலாம் - உ.தா., கைவிட்ட காதலிக்காக கண்ணீர் வடிப்பது. இழந்த குடும்ப மேன்மை, ஆதரவு, அன்புக்காக ஏங்குவது, வெதும்புவது, அதைப் போற்றுவது. "தேவதாஸ்", " பராசக்தி", "மூன்றாம் பிறை" என ஏகப்பட்ட உதாரணங்கள் தமிழ் சினிமாவிலும் "விஷ்ணுபுரம்", " நெடுங்குருதி" போன்று நாவல்களிலும் இத்ற்கு பல உதாரணங்கள் தோன்றுகின்றன. ஆங்கில நாவல்களில் "அன்னா கரெனினா", "போரும் வாழ்வும்", Catcher in the Rye, Great Gatsby, Great Expectations, Oldman and the Sea, Farewell to Arms, Norwegian Wood, The Windup Bird Chronicle, Kafka on the Shore போன்றவை உடனடியாய் மனத்தில் எழுகின்றன. ஹெமிங்வேயின் Farewell to Arms நாவலின் முடிவில் ஹென்ரியின் கைகளில் கேதரினும் அவர்களது குழந்தையும் மடியும் காட்சி எப்போது படித்தாலும் கண்ணீரை வரவழைப்பது.
 இழப்புணர்வு, அதன் துக்கம் மகத்தான உணர்வுகள் என நினைக்கிறேன். நமது மகாபாரதம் முழுக்க இவ்வுணர்வுகளால் ஆனது தானே. துக்கத்தை எடுத்து விட்டால் மகாபாரதம் குடும்பங்கள் இடையிலான ஒரு சல்லித்தனமான தன்னலப் போட்டி மட்டுமே. துக்கம் ஏன் மகத்தானதாக இருக்கிறது என்தற்கு ஒரு நடைமுறை காரணத்தை நம்மால் சுலபத்தில் கண்டறிய முடியாது, அது இருமையைக் கடந்து சிந்திக்க நமக்கு உதவுகிறது என்பதைத் தவிர.

கார்ல் மார்க்ஸின் இந்த பார்வை மிகச்சிறப்பாகப் பொருந்துவது தமிழ் நவீன கவிதைகளுக்கு எனத் தோன்றுகிறது. இந்த கோணத்தில், தமிழ்ப் புனைவுகளில் உள்ள வெள்ளாள இலக்கிய அரசியலைப் பற்றி, அது பிராமண-வெள்ளாள மோதலாக, இழப்பின் கசப்புணர்வாக வெளிப்படுவதைப் பற்றி ராஜ் கௌதமன் எழுதிய "புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்‌ஷஸ்" எனும் ஒரு முக்கியமான படைப்பையும் குறிப்பிட வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.