முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிலைகள் குறித்த விசாரணை - 4

 4. 

Power to act does not have conditions.

There is no power to act without conditions

There are no conditions without power to act.

Nor do any have the power to act.


ஒன்றை செயல்படுத்தும் ஆற்றலுக்கு நிலைகள் அவசியமில்லை [எனப்படுகிறது].

[ஆனால்] நிலைகள் இன்றி செயல்படுத்தும் ஆற்றலே இல்லை.

செயல்படுத்தும் ஆற்றல் இல்லாத நிலைகளே இல்லை.

அதேநேரம் செயல்படுத்தும் அதிகாரம் அவற்றுக்கு இல்லையும் தான்.”





கொஞ்சம் குழப்பமாகத் தெரியும், ஜாங்கிரி சுற்றுகிற ஸ்லோகம் இது என்றாலும் இதன் வாதம் எளிதானது, வலுவானது.

ஒரு விசயத்தை நிகழ்த்துவதற்கான ஆற்றல் அதிலேயே உள்ளது என பொதுவாக நம்பப்படுகிறது. ஒரு தேர்தலின் போது செலுத்தப்படும் வாக்கை எடுத்துக் கொள்வோம். மக்களின் வாக்குக்கு நாட்டின் அதிகாரத்தை மாற்றும் சக்தி உண்டு எனப்படுகிறது. ஆனால் அந்த ஆற்றல் வாக்குச்சீட்டின் ஆற்றல் அல்ல. வாக்கின் ஆற்றல் அதை பதிவு செய்வதில் மட்டுமே உள்ளது. அதைக் கடந்து நிகழ்கிற செயல்கள் தம்மளவில் அதிகாரம் பெற்றவை அல்ல. அவை பல உபநிலைகளை சார்ந்து ஆற்றல் பெறுபவை. ஒரு வாக்கு அதன் ஆற்றலைப் பெற அதை செலுத்துகிறவரின் அடையாளம், அவர் வசிக்கிற பகுதி, அவர் வாக்கை செலுத்துகிற காலம், அவர் வாக்கை சரியாக செலுத்துகிற பாங்கு, அவ்வாக்கு எந்திரத்தில் சரியாக பதிவாகி எந்த தில்லுமுல்லும் நடக்காதிருப்பது, மற்ற வாக்குகளின் ஆற்றல்கள், அதற்கும் பின்னால் மற்ற நேரங்களில் சாமான்ய அடையாளம் (வாக்களிக்காதவராக) பூணும் அவர் அப்போது தன்னை வாக்காளராக உணர்வது, வாக்கு செலுத்த வேண்டும் எனும் விருப்பத்தை அவர் கொள்வது பல நிலைகள் பின்னிருந்து இயக்கி அந்த அதிகாரத்தை தோன்ற செய்கின்றன. அதனாலே இரண்டாவது வரி ‘நிலைகளே நிகழ்த்தும் ஆற்றலின் காரணம் ஆகின்றன’ என்கிறது.


இந்த நிலைகளும் ஆற்றல் இன்றி வெற்றாய் இருப்பதில்லை. ஆனால் அதன் பொருள் இந்த நிலைகள் தம்மளவில் ஒன்றை இயக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன என்பதல்ல. அவை நிலைகளாக செயலைத் தூண்டுவதற்கு பல உபநிலைகள் பின்னிருந்து இயக்கியாகி வேண்டும். அதனாலே அவற்றுக்கு ஆற்றல் உண்டு, ஆனால ஆற்றல் இல்லை என முரணாகத் தோன்றுகிற இறுதி வரிகளை நாகார்ஜுனர் எழுதுகிறார் - அவரது அக்கறையெல்லாம் இந்த நிலைகளுக்கு தனிப்பெரும் முழுமுதல் ஆற்றல் உண்டு என எதிர்முகாமினர் புதிய கதையை கட்டக் கூடாது என அதற்கும் அவர் இங்கு ஒரு தடுப்பை வைக்கிறார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...