Skip to main content

Posts

Showing posts from August, 2021

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தனிமை எனும் மதிற்சுவர் - ஆர். அபிலாஷ்

இரவு முழுக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஸ்டார்ட் பண்ணப்படுகிறது ஏதோ ஒரு வீட்டில் குக்கர் விசில் பள்ளிக்குத் தயாராகிக் கிளம்பும் குழந்தைகளின் முட்டி வரை சரசரக்கும் பாவாடைகள் எங்கோ ஒரு தட்டு விழுந்து வட்டமடிக்கும் சப்தம் ஒரு காகம் கரைகிறது ஒரு தாத்தா சத்தமாக போனில் பேசிக் கொண்டிருக்கிறார் அவரைக் கடந்து செல்வோர் முணுமுணுக்கும் சப்தம் காலை அவசரத்தில் ஒரு இளம் ஜோடி ஏதோ விளையாட்டாகப் பேசி சிரித்துக் கொண்டு காரைத் திறக்கும் சிறிய ஒலி காலை அவசரத்தின் எரிச்சலில் ஒருவர் தன் மனைவியிடம் காலையுணவு வேண்டாம் என இரையும் போது சாவகாசமாக ஒரு நாளிதழ் வாசற்படியில் விழும் ஒலி ஒரு பெண் தாமதமாக பூஜையை ஆரம்பிக்கும் மணி ஒலி ஒரு பெண் சத்தமாக டிவியை வைத்துக் கொண்டு அதை விட சத்தமாக சிரிக்கிறார் இஸ்திரிக்கடைக்காரர் கிரக் கிரக் என ஓசையெழுப்பியபடி ஒவ்வொரு வீடாக நடந்து கொண்டிருக்கிறார் மழை சடசடவென வந்து குளிரை அதிகரிக்கிறது எதையும் கவனிக்காத ஒரு பூனை மஞ்சள் கண்களால் வெறிக்கிறது எதையும் கவனிக்கும் மற்றொரு பூனை வாலை அசைக்கிறது தெருமுனையில் இரண்டு அழுக்கான நாய்கள் ரோந்து போகின்றன குப்பையைக் கிளற வரும் ஒரு அழுக்கான ம...

(மன அழுத்தம் கொண்ட) அன்னையரிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றுவது!

மனப்பிரச்சனை உள்ள தாய்மார் குழந்தைகளை கவனிக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர். அவர்கள் தமது மன அழுத்தத்துக்கு குழந்தையை இலக்காக்கி கவனிக்காமல் சாப்பாடு கொடுக்காமல், குளிக்க வைக்காமல் விடுவது ஒரு வகை என்றால், அடித்து துன்புறுத்துவது மற்றொரு வகை. அடுத்து இவர்கள் சுயவதையிலும் ஈடுபடுவார்கள். தமது மன அழுத்தத்திற்கு புற உலகமே - கணவர், குழந்தைகள் - காரணம் என எண்ணி, அதற்கு தீர்வு இவர்களை ஒழிப்பதே என நம்பத் தொடங்குவர். தமது கடுங்கோபத்துக்கு வடிகாலாக குழந்தைகளை அடித்து சிதைப்பது, இப்போதெல்லாம் அதை காணொலியாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பிக் கொடுப்பது சாதாரணமாக நடக்கும் காரியங்கள். அந்த காணொலி ஆதாரத்தை வைத்து தான் இந்த பெண்ணிடம் இருந்து தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளார். மீண்டும் சொல்கிறேன், மனநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அன்னையர் குழந்தைகளை வளர்க்கும் தகுதி அற்றவர்கள். ஆனால் இதைப் போன்ற கொடூரங்கள் நிகழும் வரை சட்டமோ சமூகமோ இதை வலியுறுத்துவதோ தடுப்பதோ இல்லை. இதை நாம் சீரியஸாக ...

“ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” - ஆர். அபிலாஷ்

சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு கொலைவழக்கின் சாயலில் எழுதப்பட்ட உளவியல் துப்பறியும் நாவல் இது . அந்த கொலைவழக்கு பல சதிக்கோட்பாடுகள் நிறைந்ததாக ஆரம்பத்தில் இருந்தே இருந்தது . இவை பொதுமக்களால் உருவாக்கப்பட்டவை அல்ல , மாறாக வெளியில் இருந்து இந்த வழக்குவிசாரணையை கண்காணித்து வந்த சக்திகளால் உற்பத்தி பண்ணப்பட்டவை அவை . தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கோணம் இந்த வழக்குக்கு கிடைத்தது . சதிக்கோட்பாட்டுகளின் இடையே கொலைக்கான நடைமுறைக் காரணங்கள் எவை என அலசி கண்டெடுக்கிறது இந்நாவல் ; நிரப்ப முடியாத இடைவெளிகளை தன் கற்பனையால் உணர்ச்சிகளால் நம்பிக்கைகளால் அது நிரப்புகிறது .   குற்றவுணர்வு குற்றத்தில் இருந்து பிறக்காமல் , மாறாக அதுவே ஒரு மனிதனை எப்படி குற்றத்தை நோக்கி செலுத்துகிறது ? குற்றவுணர்வில் இருந்து விடுதலை என்பது சகமனிதனை அரவணைத்துக் கொள்ளும் போது கிடைக்குமா ? இந்நாவலின் நாயகன் குற்றவாளியைத் தேடிச் செல்லும் போதும் இந்த கேள்விகளே அவனுக்கு இக்குற்றத்தின் தீர்வுக்கான சாவியாக ...

சாய் வித் சித்ரா - எஸ்.ரா பேட்டி

கொஞ்சம் நெகிழ்ச்சி, நிறைய செண்டிமெண்ட், நிறைய சுவாரஸ்யமான கதைகள், தகவல்கள், அவதானிப்புகள் என கலவையான உரையாடல்.  எஸ்.ரா ரொம்ப கூர்மையான மனிதர். அதனாலே இலக்கியம், சினிமா குறித்த, குறிப்பாக narratology சார்ந்த அவரது அவதானிப்புகள் வெகுசிறப்பாக இருக்கும். ஆனால் தன் கட்டுரைகளில், உரைகளில் உணர்வுகளை , சம்பவங்களை சித்தரித்த அளவுக்கு அவர் தன் அவதானிப்புகளை சொன்னதில்லை. சொல்லப் போனால் எஸ்.ரா எனும் தனிப்பட்ட மனிதரின் பார்வையை தவிர்த்து விட்டு எஸ்.ரா எனும் பயணி, எஸ்.ரா எனும் வாசகர், எஸ்.ரா எனும் கதைசொல்லி, எஸ்.ரா எனும் சினிமா ஆர்வலர் என பல்வேறு பாத்திரங்களாக மாறிப் பேசவே அவருக்கு ஆசை அதிகம். தனிப்பட்ட முறையில் உரையாடும் போது அந்த தனிமனிதர் சட்டென வெளிப்பட்டு தன் கருத்துக்களால், பார்வையால் நிறையவே அச்சரியப்படுத்துவார்.  ஒருமுறை - இந்த பேட்டியில் அவர் சொல்லுகிற - ஒரு ரூபா விசயத்தை தனிப்பேச்சில் குறிப்பிட்டார். நான் நீண்ட நாட்கள் அதை மறக்கவே இல்லை. இந்தியர்களின் பேச்சில், சிந்தனையில் இயல்பாகவே ஒரு தத்துவார்த்தம் இருக்கிறது என அவதானித்தார் அன்று. இன்னொரு முறை தான் கதை எழுத ஆரம்பித்த காலத்தில்...

சிறைகளை எப்படி ஒழிப்பது?

பேரறிவாளன் தொடர்ந்து மூன்றாவது மாதமாக பரோலில் இருக்கிறார் எனப் படிக்கும் போது என்று அவரும் மிச்ச அறுவரும் விடுதலை ஆவார்கள் என ஏக்கம் வருகிறது. இதைப் பற்றி பேசும் போது நாம் எழுவருக்காக மட்டுமே பேசுவது, அவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்புவது நியாயம் அல்ல என்றும் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக சிறைகளை தகர்க்கும் நாள் ஒன்று வர வேண்டும். ஒரு நாகரிகமான சமூகத்தில் சிறை என ஒன்று இருக்கக் கூடாது. ஏன் எப்படி என்று சொல்கிறேன்: 1) சிறைத்தண்டனை சமூக ஒழுக்கத்தால், நீதியால் ஏற்க முடியாத செயலுக்கு அளிக்கப்படும் ஒன்று என்றால், அதற்காக ஒருவரை ஒரு ஆய்வக எலியைப் போல மாற்றி சமூகத்தில் இருந்து ஏன் விலக்கி வைக்க வேண்டும்? விலக்குதல் மட்டும் தான் தண்டனையா? சமூகத்தை காயப்படுத்திய ஒருவர் மன்னிப்பை எப்படி பெற முடியும், அச்சமூகத்துக்காக சேவை செய்யாமல் அன்றி? 2) தண்டனை எனும் பெயரில் சிறையில் பல லட்சம் பேரை அடைத்து வைத்து அவர்களுக்கு சமூக மன்னிப்பு, ஏற்பு கிடைக்காமல் பண்ணுகிறோம்.  3)சிறை எனும் பெயரில் லட்சக்கணக்கானோரின் மனித ஆற்றலை வீணடிக்கிறோம். சிறையில் இருந்து நேரத்தை வீணடிக்காமல் அவர்கள் சமூகக்கட்டுமானப் பணிகள...

“ஒரு முடிவற்ற துப்பறியும் கதை” - யாருடைய கதை?

 

என்னுடைய புதிய நாவல் - “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை”

 

மதன்-ராகவன் லீக்ஸ்: அண்ணாமலையின் மனப்பிரச்சனை

அண்ணாமலையின் பேச்சைக் கேட்கும் போது அவருடைய சொல்லுக்கும் மனதில் ஓடும் எண்ணங்களுக்கும் ஒரு இசைவின்மையை கவனிக்கலாம் - சற்று முன் என்ன பேசினோம் எனத் தெரியாமல் அடுத்ததாக சம்மந்தமில்லாத மற்றொன்றை சொல்லுகிறார். மதனை தான் மாவட்ட செயலாளராக ஆக்குவதாக சொல்லுகிறார், உடனே 2026இல் நீங்க எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கப் போறீங்க, அதுக்கான வேலைகளை இப்பவே ஆரம்பிங்க, இது ஒரு 5 வருட புரோஜெக்ட் பிரதர் என்கிறார். சற்று நேரம் கழித்து தமிழக ஊடகங்களை “நிர்வாகம்” பண்ணும் பொறுப்பு மதனுக்கு வழங்கப்படும், அவர் தமிழகத்தில் இருந்து மோடிஜியின் பிம்பத்தை உயர்த்தும் நோக்கிலான செய்திகள் தொடர்ந்து பேஸ்புக், டிவிட்டரில் வரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், அதற்காக அவர் கீழ் இயங்குவதற்கு நிறைய பேர் கொண்ட ஒரு சமூகவலைதள அணி உருவாக்கப்படும் என்கிறார். மதனுடைய வேலை தமிழக ஊடக முதலாளிகளிடம் பேசி மோடியின் பெருமையை மக்களிடம் கொண்டு செல்ல வைப்பதே. ஒவ்வொரு சேனலிலும் வேலையில் இருந்து துரத்தி விடப்பட்டு எங்குமே போக முடியாமல் வாசலில் நிற்கும் மதன் எல்லா ஊடக முதலாளிகளையும் அமர வைத்து டீல் பேசப் போகிறாரா? எம்.எல்.ஏ, மாவட்ட செயலாளர், ஒட்டுமொத்த...

ஓண சத்யா ஒரு நவீன தொன்மமா?

இந்த ஓண சத்யா எனப்படும் “சாப்பாட்டுக் களேபரம்” நான் ஊரில் இருந்த போது எளிமையாக வேறு விதமாக இருந்தது. அம்மா ஒரு பாயசம் வைப்பார். கூடவே பருப்பு, நெய், பப்படம், ஒரு அவியல். இப்படி எங்களுக்கு ஏற்றாற் போல அது இருக்கும். ஊரில் பெரும்பாலான வீடுகளில் அப்படித்தான் சாப்பிடுவார்கள். இந்த டிவியில் காட்டுகிறாரக்ளே அப்படி ஒரு பெரிய இலையில் இருபது, முப்பது பதார்த்தங்களை பரப்பி அதன் முன் ஒரு பெரிய அரவைக்கல்லைப் போல நாம் உட்கார்ந்து சாப்பிடுவது அதை ஓரளவு கல்யாண சாப்பாட்டின் போது மட்டுமே பார்க்கலாம். அதாவது பத்து பொரியல், கூட்டு, சாம்பார், புளிசேரி, இஞ்சிக்கறி, வாழைக்காயை பொடிசாய் நறுக்கி பொரித்து வெல்லப்பாகில் புரட்டி எடுத்து ரெண்டு துண்டுகள் வைப்பார்களே அந்த ஐட்டம், கடைசியாக போளி, பால் பாயசம். இது தான் எதார்த்தம். ஓணத்துக்கு புதிய துணி கூட நான் எடுத்ததாக நினைவில்லை. தீபாவளிக்கு எடுத்துக் கொள்வேன். நான் சென்னைக்கு வந்த பின் தான் ஓண சத்யாவை பெரிய அளவில் ஓட்டல்காரர்கள் புரொமோட் பண்ணுவதை கவனித்தேன். நானும் குமரொகோம் ஓட்டலுக்கு சென்று வருடத்திற்கு ஒருமுறை ஒரு கட்டு கட்டுவதை வழக்கமாக வைத்திருந்தேன். இப்போது...

தாலிபான்களும் நானும்

 எனக்கு இந்த டீலிங் பிடிச்சிருக்கு. UPSC எல்லாம் தேர்வாகி நம் ஆட்சியர்கள் என்ன கிழிக்கிறார்கள் எனத் தெரியாதா? பொதுப்பிரச்சனைகளின் போது கார்ப்பரேட்டுகள் பக்கமாக நின்று பொதுமக்களை சுடுவதற்கு ஆர்டர் போடுவது, அமைச்சர்களும் பிற அதிகார வர்க்கத்தினரும் திருட வழிவகை பண்ணிக்கொடுத்து தமக்கு வரும் கட்டிங்கைக் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் பல நூறு கோடிகளுக்கு பங்களாக்களாக கட்டுவது … இதைச் செய்ய எதற்கு ஒரு படிப்பு, தேர்வு மண்ணாங்கட்டி எல்லாம்? மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஒரு சிறுசொல்லாவது உதிர்ப்பார்களா? ம்ஹும். அதுக்கு தாலிபானின் படிக்காத தற்குறிகளே மேல். ஜாலியாக பொழுதுபோக்கு அரங்குகளில் சின்னக்குழந்தைகளின் விளையாட்டுக்கார்களை ஓட்டிப் பார்த்து விட்டு ஏக்கத்துடன் அதை இரவோடு இரவாக எரித்து விடுகிறார்கள். நம்முடைய ஆட்சியர்கள் என்றால் அந்த அரங்குகளைச் சுற்றி பெரிய மதில்கள் எழுப்பி சில பல பங்களாக்கள் கட்டி நாம் சொந்தமாக்கி விடலாம் ஐயா என அமைச்சரக்ளுக்கு ஐடியா கொடுத்திருப்பார்கள்.  எனக்கு தாலிபான்களின் பல செயல்பாடுகள் மீது விமர்சனம் உண்டு. ஆனால் இந்த பப்புகள், வெகுஜன சினிமா, சீரியல்கள்...

பவுன்சர்களால் ஏன் கலவரப்படுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்?

அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து முடிந்த இந்தியா-இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியைப் பற்றி யுடியூபில் ஒரு  காணொளியைப் பதிவேற்றி இருக்கிறேன். ஏன் பவுன்சர் பந்தை எதிர்கொள்வது இங்கிலாந்து அணி வீரர்களை உளவியல் ரீதியாக அதிகம் பாதிக்கிறது, ஏன் ஆண்டர்ஸன் விசயத்தில் சக வீரர்கள் இவ்வளவு overreact பண்ணினார்கள், இங்கிலாந்தினர் ஏன் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என அலசி இருக்கிறேன். பார்த்து விட்டு உங்க எதிர்வினையைக் கொடுங்கள், ஆதரளவு அளியுங்கள் நண்பர்களே!   காணொலிக்கான லிங்க்  

மனுஷ்யபுத்திரனுடன் ஒரு உரையாடல்

கடந்த 14 ஆண்டுகளாக மனுஷ்யபுத்திரனை நான் காணச்செல்லும் போதெல்லாம் இலக்கிய வாசிப்பு குறித்தும், கவிதையியல் குறித்தும் செறிவான பேச்சுக்கள் அவருடன் நிகழும். அவற்றை பதிவு செய்ததில்லை. யாருடனும் அதிகம் பகிர்ந்ததில்லை. ஆனால் நேற்று முதன்முதலாக அவரை கவிதையியல் குறித்து பேட்டியாகவே எடுத்து எடிட் செய்து யுடியூபில் வெளியிட்டேன். வம்புதும்பு, அரட்டை ஏதுமில்லாத, கவிதையை எழுதுவது, படிப்பது சம்மந்தமான மூன்றே கேள்விகள், உபகேள்விகள், விரிவான பதில்கள் என வித்தியாசமான ஒரு பேட்டி. கவிதைக்குள் ஆன்மீகம் செயல்படும் விதம் துவங்கி கவிஞனின் தன்னிலை என்பது வரை பேசி இருக்கிறோம்.   பார்த்து விட்டு உங்கள் எதிர்வினைகளை, எண்ணங்களைச் சொல்லுங்கள். பேட்டிக்கான லிங்க்

சங்கிகளின் விஷமப் பிரச்சாரம்

சங்கிகளின் விஷமப் பிரச்சாரம் அர்ஜுன் சம்பத்தைப் போன்ற இந்துத்துவ பாசிஸ்டுகளின் பிரச்சனை "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்" என நடைமுறைப்படுத்துவது திமுக, இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் கலாச்சார அதிகாரம் பெறுகிறார்களே எனும் பதற்றமே. பாஜக தொடர்ந்து பெயரளவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தோருக்கு சில பதவிகளை அளித்து tokenism செய்து சோஷியல் எஞ்சனியரிங் மூலம் ஏமாற்றி சம்பாதித்த பெயரை திமுக வாங்கிக் கொண்டு போய் விடுமோ எனும் அச்சமே! அதனாலே ஏற்கனவே பிராமணர் அல்லாதோர் தான் பெரும்பாலான கோயில்களில் பூசாரிகளாக உள்ளார்கள் என சங்கிகள் சப்பைக்கட்டு கட்டி கதறுகிறார்கள் - ஏற்கனவே உள்ள நடைமுறை தானே, அது சட்டமாகி நடைமுறைக்கு வந்தால் உமக்கு என்ன ஓய் கும்பி எரிச்சல்? அதிக பண வசூல் உள்ள கோயில்களில் இனி எந்த சாதியொனரும் பூசை செய்ய போட்டியிடுவார்கள், அது அந்தணர்களை பாதிக்கும் எனும் தவிப்பா? அல்லது சட்டம் தரும் ஆற்றலைக் கண்டு, சமத்துவமே இனி எதார்த்தம் என்பதைக் கண்டு அச்சமா? ஏன் சுற்றி சுற்றி வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள்? நேரடியா சொல்ல வேண்டியது தானே. மசூதிகளிலும் தமிழில் தொழுகை எனும் கோரிக...

“அவன் கண்ணில பயம் இல்ல!”

தற்போது லார்ட்ஸில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்றுள்ள வெற்றியை அனேகமாக 2001இல் கொல்கொத்தாவில் follow on பண்ணப்பட்டு, தோல்வியின் விளிம்பில் இருந்து லஷ்ம்ண-திராவிட் கூட்டணியால் மீண்டும் வந்து, ஹர்பஜனின் பந்துவீச்சு மேதைமையால் ஆட்டம் முடியும் தறுவாயில் நாம் பெற்ற வெற்றியுடன் ஒப்பிடலாம். நேற்று (4வது நாள்) முடிவில் இந்தியா ஜடேஜாவை இழந்த போது (175/6) 70 ரன்கள் கூடுதலாவது எப்படியாவது எடுத்து 220 இலக்கை அடைந்தால் மட்டுமே இந்தியா தப்பிக்க முடியும் எனும் நிலை இருந்தது. இன்று காலை இருபது சொச்சம் ஓட்டங்களுக்கு பண்டும், இஷாந்தும் ஆட்டம் இழக்க, 209/8 எனும் நிலையில் எல்லாம் முடிந்தது என்றே இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் தோன்றி இருக்கும். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்திருந்தால் 190 எனும் இலக்கை 90 ஓவர்களில் அடிப்பது என நிலைமை இந்தியாவுக்கு சிக்கலாகி இருக்கும்.  அதாவது ஓவருக்கு 2 ஓட்டங்கள் போதும். நான்கு விக்கெட்டுகள் இழந்து 100 ரன்கள் எடுத்தாலும் மிச்ச 90 ரன்களை அவர்களால் அடிக்க முடியும் எனும் நம்பிக்கை இருக்கும் போது கோலியால் தொடர்ந்து தாக்குதல் அணுக...

அப்கானிஸ்தான் குறித்த கவலைகள்

அப்கானிஸ்தான்-தாலிபான் பிரச்சனை முழுக்க அம்மக்களின் வரலாறு, உள்நாட்டுச்சிக்கல்கள், அமெரிக்கா, சோவியத் காலனிய ஆதிக்கம், பொருளாதார வளர்ச்சியின்மை, முன்னேற்றத்துக்கும் பழமைக்கும் இடையில் எங்கே போவதெனத் தெரியாத பழங்குடி இனங்கள் சம்மந்தப்பட்டவை. அதை இந்திய சூழலுடன் பொருத்துவதோ, அதை வைத்து பாஜகவை பகடி செய்வதோ, இந்திய இஸ்லாமியர்களுக்கு ஊமைக்குத்து விடுவதோ எல்லாம் அபத்தங்கள். இந்தியா இப்போது வெளியுறவுத்துறை சார்ந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்படி அப்கானிஸ்தானை நமக்கு சாதகமாக கையாள வேண்டும் என பரிந்துரைப்பதும் தவறானது - இன்னொரு மக்களின், தேசியத்தின் நெருக்கடியை, குழப்பங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்து உள்ளே நுழைவது கொள்ளிக்கட்டையால் முதுகை சொறிவது போல ஆகி விடும். அமெரிக்க அரசு இத்தனை ஆண்டுகளாய் அப்கானிஸ்தானை கைப்பிடிக்குள் ராணுவத்தின் மூலம் வைத்திருந்ததால் அந்நாட்டு ஆயுத வியாபாரிகள், கார்ப்பரேட்டுகளைத் தவிர அந்த சாமான்ய அமெரிக்கர்கள் எந்த பயனும் பெறவில்லை. இத்தனை லட்சம் மக்களை டுரோன்களால் போட்டுத்தள்ளியதிலோ, இப்போது அவர்களை தவிக்க விட்டு அலட்சியமாக வெளியேறியதாலோ அமெரிக்கா உண்மையா...

சச்சினின் சிட்னி உத்தி

2004இல் ஆஸ்திரேலியாவில் இந்தியா டெஸ்ட் தொடர் ஆட சென்ற போது சச்சின் மோசமான ஆட்டநிலையில் இருந்தார். ஐந்து இன்னிங்ஸ்களில் 82ஏ ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து ஸ்லிப்பில் அவுட் ஆகிக் கொண்டிருந்தார். ஆக சச்சின் சிட்னியில் டெஸ்ட் ஆட சென்ற போது ஒரு முடிவெடுத்தார். ஒரு பந்தைக் கூட கவர் திசையில், அடிக்க மாட்டேன். அநேகமாக எல்லா பந்துகளையும் ஒன்று விட்டார் அல்லது நேராக அடித்தார். மிட் விக்கெட், லாங் ஆனுக்கு மட்டும் பவுண்டரிகள் அடிக்க முயன்றார். முதலாவது நாள் காலையில் ஆட வந்தவர் மூன்றாவது நாள் வரை கிரீஸில் இருந்தார். கடைசியில் ஒருவழியாக இந்திய இன்னிங்ஸ் டிக்ளேர் ஆன போது சச்சின் 436 பந்துகளில் 241 ரன்களை அடித்திருந்தார். சச்சினின் இந்த அபாரமான சுயக்கட்டுப்பாடும் கவனமும் உலகம் முழுக்க பாராட்டப்பட்டது. நான் அப்போது சச்சின் தேவையில்லாத பிடிவாதம் பிடித்தார் என நினைத்தேன். முதல் 100 பந்துகளுக்கு ஓக்கே, அதன் பிறகு அவர் எல்லா ஷாட்டுகளையும் அடித்திருந்தால் அவருக்குள்ள திறமைக்கு 350 அடித்திருக்க முடியும் எனத் தோன்றியது. ஆனால் சச்சினின் சிறப்பு என்னவென்றால் அழகியலை பற்றி கவலைப்படாமல் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற...

விராத் கோலியின் தொழில்நுட்ப பிரச்சனையும் அதற்கான தீர்வும்

விராத் கோலியின் கால் பாடத்தில் உள்ள ஒரு முக்கியமான பலவீனத்தைப் பற்றி இன்று சுனில் கவாஸ்கர் விளக்கினார். பந்து நான்காவது பந்தில் விழுகிறது. மட்டையாளன் இப்போது தன் பின்னங்காலை நடுக்குச்சியிலும் முன்னங்காலை off குச்சியிலும் வைத்து ஒன்று அப்பந்தை அது வைடாக செல்லும் பட்சத்தில் விட்டு விட வேண்டும் அல்லது நேராக வந்தால் விரட்ட வேண்டும். விராத் கோலியின் பின்னங்கால் off குச்சிக்கு போகிறது. முன்னங்கால் நான்காவது, சில நேரம், ஐந்தாவது குச்சிக்குக் கூடப் போகிறது. விளைவாக 7வது, 6வது குச்சியில் விழுந்து நேராக வரும் பந்தை கோலி தன் கைகளால் ஆட முயன்று ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுக்கிறார். இது ஏன் நடக்கிறது? பந்து வெளிப்படும் போதே லைனை கணித்து பின்னங்கால் நடுக்குச்சிக்கு செல்லும் போது முன்னங்கால் off குச்சி எங்கிருக்கிறது என்பதை மட்டையாளனுக்கு உள்ளுணர்வால் உணர்த்தி விடுகிறது. அப்போது வெளியே செல்லும் பந்தை தடுப்பதோ விடுவதோ எளிதாகிறது. 7வது, 6வது குச்சியில் விழும் பந்து அப்போது ரொம்ப வைடாகத் தெரிகிறது. அப்பந்தை அடிக்காமல், அடித்து எட்ஜ் கொடுக்காமல் தப்பிக்கலாம். இந்த தப்பை திரும்பத் திரும்ப செய்யும் கோலி தொறந்த...

ஆண்டர்ஸனில் இருந்து ராகுல் வரை

லார்ட்ஸில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் நான் மிகவும் ரசித்த ஒரு விசயம் ஆண்டர்ஸனின் பந்து வீச்சு. அதற்கு அடுத்து ராகுலின் ரசிக்கத்தக்க, ரொம்ப ஸ்டைலான மட்டையாட்டம்.  1 ) ஆண்டர்ஸன் மிதவேக வீச்சாளர்களிடையே ஒரு உன்னதமான கலைஞன் என்று சொல்லலாம். அவரால் வழக்கமான seam up பந்து வீச்சில் ஈடுபட முடியும். குளிரும் மந்தமான வானிலையும் கொண்ட காலைப் பொழுதில், மாலை வேளையில் நான்காவது ஸ்டம்பில் போட்டு ஸ்விங் பண்ண முடியும். பகற்பொழுதில் ஐந்தாவது ஸ்டம்பில் பொறுமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்த முடியும். பேட்ஸ்மேனை வைடாக செல்லும் பந்தை துரத்த வைத்து அவுட் ஆக்க முடியும். உள்ளே வெளியே என்று இறுக்கமாக பந்தை வீசி எல்.பி.டபிள்யூ முறையில் தூக்க முடியும். இந்தியா போன்ற வறட்சியான ஆடுதளத்தில் பந்தை ஒரு பக்கம் சொரசொரப்பாக தக்க வைத்து சற்று கூடுதல் வேகத்தில், சரியான நீளத்தில் வீசி ரிவர்ஸ் பண்ணவும் முடியும்.  இப்போது நடந்து வரும் ஆட்டத்தொடரில் அவர் scrambled seam பந்து வீச்சிலும் கலக்குகிறார். பந்து உள்ளே வருவது போல மட்டையாளனுக்கு போக்கு காட்டி அதை அழகாக வெளியே எடுத்து சென்று விக்கெட் வீழுத்துகிறார். இது போக ...

பரோலில் வந்த இரு சிங்கங்கள்

(1) அவன்   நீண்ட   காலத்துக்குப்   பிறகு அவர்களின்   உலகத்துக்கு   மீண்டிருந்தான் கம்பிகளுக்கு   வெளியே வண்ணங்களும்   சப்தங்களும்   கைகுலுக்கும் வாழ்தலின்   நெரிசடி   மிகுந்த உலகத்துக்கு   திரும்பியிருந்தான் அவன்   இம்முறையும் பரோலுக்கு நீண்ட   நாட்கள்   காத்திருக்க   வேண்டி   இருந்தது அன்னையும்   உறவினர்களும்   நண்பர்களும் நம்பிக்கைகளை   புதுப்பித்தபடி   இருந்தனர் அரசியல்   வெளியில்   தொடர்ந்து கோரிக்கைகள்   புதுப்பிக்கப்படி   இருந்தன ஆயிரமாவது   தடவையாக   அவனுடைய விடுதலை   உறுதி   செய்யப்பட்டிருந்தது பல்லாயிரம்   தடவைகளாக   அவன்   கதவுகள்   மூடப்பட்டன பல   லட்சம்   முறைகளாக   அவனுக்கான   பிரார்த்தனைகள்   ஒலிக்கப்பட்டன அவன்   ஏனோ   ஒருநாள் இதற்கெல்லாம்   செவிடாகி   விட்டிருந்தான் அதிகாரத்தின்   வாயில்கள்   ஒவ்வொன்றாகத்   திறந்து உத்தரவுகள்   ஒவ்வொன்றா...