முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சச்சினின் சிட்னி உத்தி



2004இல் ஆஸ்திரேலியாவில் இந்தியா டெஸ்ட் தொடர் ஆட சென்ற போது சச்சின் மோசமான ஆட்டநிலையில் இருந்தார். ஐந்து இன்னிங்ஸ்களில் 82ஏ ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து ஸ்லிப்பில் அவுட் ஆகிக் கொண்டிருந்தார். ஆக சச்சின் சிட்னியில் டெஸ்ட் ஆட சென்ற போது ஒரு முடிவெடுத்தார். ஒரு பந்தைக் கூட கவர் திசையில், அடிக்க மாட்டேன். அநேகமாக எல்லா பந்துகளையும் ஒன்று விட்டார் அல்லது நேராக அடித்தார். மிட் விக்கெட், லாங் ஆனுக்கு மட்டும் பவுண்டரிகள் அடிக்க முயன்றார். முதலாவது நாள் காலையில் ஆட வந்தவர் மூன்றாவது நாள் வரை கிரீஸில் இருந்தார். கடைசியில் ஒருவழியாக இந்திய இன்னிங்ஸ் டிக்ளேர் ஆன போது சச்சின் 436 பந்துகளில் 241 ரன்களை அடித்திருந்தார். சச்சினின் இந்த அபாரமான சுயக்கட்டுப்பாடும் கவனமும் உலகம் முழுக்க பாராட்டப்பட்டது. நான் அப்போது சச்சின் தேவையில்லாத பிடிவாதம் பிடித்தார் என நினைத்தேன். முதல் 100 பந்துகளுக்கு ஓக்கே, அதன் பிறகு அவர் எல்லா ஷாட்டுகளையும் அடித்திருந்தால் அவருக்குள்ள திறமைக்கு 350 அடித்திருக்க முடியும் எனத் தோன்றியது. ஆனால் சச்சினின் சிறப்பு என்னவென்றால் அழகியலை பற்றி கவலைப்படாமல் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப ஆடியது. ஒருவேளை சச்சின் இடத்தில் புஜாரா இருந்திருந்தால் 446 பந்துகளில் 105 அடித்திருப்பார், ஆனால் அதில் தப்பில்லை. சில நேரங்களில் அதிக பந்துகளை ஆடி ஆணியடித்தது போல ஒரே இடத்தில் ஒருநாள், இருநாட்கள் என இருப்பதில் நியாயமுண்டு. இப்போது நடந்து வரும் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாராவும், ரஹானேவும் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இருவருமே இப்போது முதல் 50-60 பந்துகளை தடுத்தாடி விட்டு 40, 50 ரன்களை அடுத்து ஆளுக்கு கிடைக்கும் 80 பந்துகளில் எடுத்தால் மொத்தமாக 160 + 120 = 280 பந்துகளை “வீணடிக்க” முடியும். அது ஓரளவுக்கு இன்றைக்கு இந்தியாவைக் காப்பாற்றும். ஆனால் நாளை காலை விடிந்ததும் இருவரும் முதல் 20 பந்துகளுக்குள் அவுட் ஆனால் மாலைக்குள் ஆட்டம் முடிந்து விடும். ஆகையால் ரன்களை மறந்து விட்டு பந்துகளை அதிகமாக ஆடுவதையே கணக்கில் கொள்ள வேண்டும். குறைந்தது 400 பந்துகள். அத்துடன் இங்கிலாந்தும் சோர்ந்து விடும். அதன் பிறகு இயல்பாக ஆடி என்ன இலக்கை கொடுத்தாலும் இங்கிலாந்து அதை விரட்டிட முடியலாது. டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்த தவறைத் தான் இந்தியா செய்தது - டிரா செய்ய வேண்டிய ஆட்டத்தை நியுசிலாந்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப பாஸிட்டிவ்வாக ஆடிய வெல்ல முயன்றால் அதனால் மொத்தமாக கோப்பையையும் இழந்தது. அத்தவறை திரும்ப செய்யக் கூடாது.


சுருக்கமாக சொல்வதானால் புஜாராவும் ரஹானேவும் வேகவீச்சாளர்களுக்கு எதிராக off, கவர் டிரைவுகள், பின்னங்கால் punch டிரைவுகளை மறந்து விட வேண்டும். ரன்கள் நேராகவோ கால்பக்கமாகவோ மட்டுமே அடிக்க முயல வேண்டும். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தே வெறுத்து பந்தை நேராக வீசும். அப்போது ரன்களை அள்ளிக்கொள்ளலாம். இனிமேல் வெற்றியே சாத்தியமில்லை, டிராவே இலக்கு எனும் நோக்குடன் ஆட வேண்டும். நல்லவேளை இந்தியா தடுத்தாட வேண்டியது 400-500 பந்துளே. ஆனால் மொயின் அலியை தடுத்தாடுவது ஆபத்தானது. அவரை அடித்தாடாவிட்டால் விக்கெட்டுகள் விழுவது உறுதி.


கண்ணை மூடி சச்சினை நினைத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.