ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் நூலுக்காக சாகித்ய அகாதமியின் மொழியாக்க விருது மாலனுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக பதிவுகள் பார்த்தேன்.
சாகித்ய அகாதமி குழுவில் இருந்து கொண்டே விருது பெற்றுக் கொள்வது அசிங்கம் இல்லையா என்றும் சில பதிவுகள் பார்த்தேன்.
சாகித்ய அகாதமியில் முக்கியமானவை நான்கு குழுக்கள். நிதிக் குழு தனி. அதை விட்டு விடலாம். இதர மூன்று குழுக்கள் - பொதுக்குழு, நிர்வாகக் குழு, ஆலோசனைக் குழு
ஜெனரல் கவுன்சில் எனப்படும் பொதுக் குழுவில் தமிழ்நாட்டின் பிரதிநிதி - மாலன்.
ஜெனரல் கவுன்சில் எனப்படும் பொதுக் குழுவில் தமிழ் மொழிப் பிரதிநிதி - கார்லோஸ்
நிர்வாகக் குழுவில் தமிழுக்குப் பிரதிநிதி - சிற்பி பாலசுப்பிரமணியன்
தமிழ் மொழிக்கான ஆலோசனைக் குழுவில் உள்ளவர்கள் - மாலன், சுந்தரமுருகன், ஆனந்தகுமார், எஸ். பாலசுப்பிரமணியன், ஆன் ஜோஸஃபின். புதுவை யுகபாரதி (கோபாலன்), வி. அரசு, சிற்பி,
சாகித்ய அகாதமி மொழியாக்க விருதுகளின் விதிகளின்படி, நிர்வாகக் குழுவில் இருப்பவர் விருதுக்குத் தகுதி பெற மாட்டார்.
அதாவது, மாலன் பொதுக்குழு, ஆலோசனைக் குழு ஆகிய இரண்டிலும் இருந்தாலும், நிர்வாகக் குழுவில் இல்லை என்பதால், அவருக்கு விருது தர விதிகளில் தடையில்லை.
விதிகளின்படி தடையில்லை என்றாலும், அறத்தின்படி சரியா என்று நீங்கள் கேட்பீர்களானால்... அதற்கு என்னிடம் பதில் இல்லை.
பொன்னீலன், பாவை சந்திரன், சிவசங்கரி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்ததாக செய்திகள். தகுதியுள்ள நூலைத்தான் தேர்வு செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போது வாங்கி வாசிக்க வேண்டும்.
- முகநூலில் Shajakan R
# அவ்வளவு தாங்க. அரசாங்க அமைப்பினர் இது போன்ற விதிமுறை விசயங்களில் வெளிப்படையாக பிழை செய்ய மாட்டார்கள் என்றே நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட என ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு! இனிமேலாவது தீர விசாரித்த பின் அடியுங்கள்!
Comments