முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெருச்சண்டை குறிப்புகள்


 

இன்று ஒரு தெருச்சண்டையை பார்த்தேன். ஒரு கடையின் அகன்ற வாசல், அதை ஒட்டிய அகலமான நடைபாதை. ஒரு  பக்கம் இருபது பசங்க. எதிரில் இன்னொரு கூட்டம் பசங்க. நடுவில் சண்டையிடும் ரெண்டு இளைஞர்கள். ஒரு பையன் புல் ஓவர் அணிந்திருக்கிறான். இன்னொருவன் பார்மலாக ஆடையணிந்திருக்கிறான். முதல் பையன் இவனை மூஞ்சியிலே நான்கைந்து குத்துகள் குத்துகிறான். இவனோ எகிறி எகிறி முன்னே போய் அடிவாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவனை இழுத்துக் கொண்டு போகிறார்கள். இங்கு ஒதுங்கி நிற்கும் போதும் அவனுடைய முகம் சிவந்திருக்க கையை முறுக்கிக் கொண்டு என்னை விடுறா என்று கூறுகிறான். "எதற்கு போய் திரும்பவும் முகத்தில் குத்து வாங்கவா?" என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன்.


நான் அந்த பையன் அடிவாங்காதிருக்க என்ன பண்ணியிருக்க வேண்டும் என யோசித்தேன்:

அவன் செய்த முதற் தவறு முன்னே முன்னே சென்று கொண்டிருந்தது. ஒருவர் நம்மை அடிக்க வரும் போது வலதுகாலை வலப்பக்கமாக நகர்ந்திட வேண்டும். இப்போது அடிக்கிறவரின் குத்துக்கள் மிஸ் ஆக அவர் தன் சமநிலையை இழப்பார். வேண்டுமென்றால் அவருக்கு ஒரு உதை கொடுத்து கீழே தள்ளலாம். அல்லது ஓடி வந்து விடலாம்.

அடுத்த தவறு முன்னே போகும் போது கைகளை தாழ்வாக வைத்திருந்தது. எப்போதுமே கைகள் தோள் அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அப்போதே - அவன் ஓரளவுக்கு பயிற்சி பெற்றவன் என்றால் - பிளாக் செய்தபடியே திரும்ப சில குத்துக்கள் கொடுத்திருக்க முடியும். கைகள் தாழ்வாக இருக்கும் போது அவனுடைய முகம் அடிக்க தோதாக தடுப்பின்றி இருப்பதுடன் திரும்ப அடிக்கணும் என இவன் நினைக்கும் போதே முகத்தில் குத்துக்கள் விழுந்து கொண்டே இருக்கும்.


மூன்றாவதாக அவன் வலப்பக்கமாக விலகி அந்த குத்துக்களை மிஸ் பண்ணி விட்டு ஒரு வலதுகை ஹூக்கை அடித்திருக்க வேண்டும். அப்போது எதிராளி சமநிலை இழந்து முன்னே தடுமாறிப் போயிருப்பான். அடி தலையின் வலப்பக்கமாக விழுவதால் லேசாக தலைசுற்றும். அந்த அவகாசத்தை பயன்படுத்தி அவனுக்கு முன்னே போய் - எதிராளியின் தலை அப்போது தாழ்வாக இருப்பதால் - ஒரு அப்பர் கட் அடித்து அவனுடைய தாவாக்கட்டையை தாக்கிட வேண்டும். அடுத்து உடனே மற்றொரு வலதுகை ஹூக். அவ்வளவு தான் அந்த பையன் அரைமயக்கத்துக்கு போய் விடுவான். 3-4 வினாடிகளுக்குள் நாக் அவுட் ஆகியிருக்கும். ஆனால் இந்த அடிவாங்கின பையன் அவமானத்தில் அடுத்த சில நாட்களுக்கு மறுகிக் கொண்டே இருப்பான். கோபத்தை தீர்க்கத் தெரியாமல் மனதுக்குள் பழிவாங்க கற்பனை பண்ணிக் கொண்டிருப்பான். சரக்கடிப்பான். ஆனால் இனி அதனால் என்ன பயன்?

சண்டை முடிந்த பிறகு அந்த முகத்தில் குத்தின பையன் எங்கே என்று பார்த்தேன். அவன் அடிகொடுத்த கிளர்ச்சியில், சிறிய பதற்றத்தில், சிரித்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.