முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா - இங்கிலாந்து உலகக்கோப்பை போட்டி - என் கணிப்பு


இந்தியா - இங்கிலாந்து போட்டி நடக்கும் ஏகனா மைதான ஆடுதளம் சற்று மெதுவானது, அதனாலே அதிகமாக சுழலக் கூடாது என எண்ணி ஆடுதள அமைப்பாளர்கள் அதில் சற்று புற்களை விட்டு வைத்து மேலே ஒரு நிலை மண்ணைப் போட்டு உருட்டியிருக்கிறார்கள். அதனாலே மிதவேக வீச்சாளர்களுக்கு தையலில் பட்டு அசையும் (seam movement). இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் இந்த ஆடுதளத்தில் வேகவீச்சாளர்கள் 7 போட்டிகளில் 52 விக்கெட்டுகளும், சுழலர்கள் 35 விக்கெட்டுகளும் எடுத்துள்ளது அதனால் தான். முதலில் மட்டையாடும் அணிகளின் சராசரி ஸ்கோர் 215. கடந்த முறை இங்கு ஆடிய போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மோசமாக பந்துவீசிய காரணத்தாலே முதலில் மட்டையாடிய தென்னாப்பிரிக்கா 311 அடித்தது; அடுத்து பந்துவீசிய தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 177க்கு சுருட்டியது. ஏனென்றால் அது 250 ஸ்கோருக்கான ஆடுதளம் தான். அதனாலே இன்றைய போட்டியில் இந்திய அணி மூன்று வேகவீச்சாளர்களை எடுத்திருக்கிறது. அது நல்ல முடிவுதான்.

என்னுடைய கணிப்பு இந்த ஆடுதளத்தில் இந்தியா 250-275 எடுத்தால் அது வெற்றி இலக்காக அமையும் என்பது. ஆனால் இந்திய மட்டையாளர்கள் இதுவரை 300ஐ இலக்காக வைத்து வேகமாக அடிக்க முயன்று ஒற்றை, இரட்டை இலக்கங்களை நாடாமல் பவுண்டரி அடிக்க முயன்று, குறிப்பாக இறங்கி வந்து தூக்கி அடிக்க முயன்று, பந்து மெதுவாக வருவதாக உள்வட்டத்துக்கு உள்ளாகவே கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார்கள். இப்போது கூட அவர்கள் சற்று பொறுமையாக ஆடி 240-250 இலக்கை எட்டினாலே வெல்ல முடியும். அப்படி இலக்கை எடுத்தால் முகமது ஷமி இந்த ஆடுதளத்தில் நன்றாக வீசி குறைந்தது 3 விக்கெட்டுகளும், ஜடேஜா குறைந்தது 2 விக்கெட்டுகளும் எடுப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் பந்து பெரிதாக பவுன்ஸ் ஆகவில்லை, கொஞ்சமாக ஸீம் ஆகிறது, மெதுவாக வருகிறது என்பதால் இவர்கள் இருவருடைய பந்துவீச்சு பாணி எடுபடும் என நினைக்கிறேன்.

ஆனால் பெரிய இலக்கை எடுக்க முயன்று (இரவில் பனி அதிகமாக விழும் எனும் பயத்தில்) இந்தியா 220க்கு கீழே சுருண்டு விட்டால் இங்கிலாந்து சுலபத்தில் வெல்லும் என கணிக்கிறேன்.

இந்தியாவின் இலக்கு இப்போதைக்கு 40 ஓவர்களில் 180-200 என்பதாகவும், கடைசி பத்து ஓவர்களில் 7 விக்கெட்டுகள் வரை கொடுத்து 60-80 வரை எடுப்பதுமே நோக்கமாக இருக்க வேண்டும். அதுவே போதும் என நினைக்கிறேன். ரோஹித் பொறுமையாக 40 ஓவர் வரை நின்று ஆட வேண்டும். பவுண்டரிகளுக்காக அதிகம் முயலக் கூடாது. சுழலர்களை ஸ்வீப் பண்ணாமல் மிட் ஆப், மிட் ஆனை நோக்கி நேராக அடிக்க வேன்டும்.

என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.