முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மர்ம தேசம்

ஜூன் 4க்குப் பிறகு பாஜக எப்படி நடந்துகொள்ளும் என்பதைப் பற்றின கணிப்புகள் எனக்கு எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா-சஞ்சய் அணி காங்கிரஸ் கட்சியையும் ஊடஙகளையும் ஒரேயடியாக கட்டுப்படுத்தி எந்த உண்மை செய்திகளும் மக்களுக்கு போய் சேர விடாமல் தடுத்து ஒரு பூடகமான, மர்மமான சூழலை உருவாக்கியதை நினைவுபடுத்துகிறது. இந்திரா சட்டம் மூலமாக கடும் ஊடக தணிக்கையை கொண்டு வந்தார் எனில் மோடி-ஷா ஊடகங்களின் பங்குகளை விலைக்கு வாங்கி, அமலாக்கத் துறையை ஏவிய அச்சுறுத்தியும், ஓசி விளம்பரங்களைக் கொடுத்தும் அனேகமாக எல்லா ஊடகவியலாளர்களையும் ஊடக முதலாளிகளையும் மறைமுக தணிக்கை செய்துவிட்டார்கள். ஒட்டுமொத்த தேசமும் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனும் கையறு நிலையில் இருக்கிறது. வாக்களிப்பதுடன் மக்களின் பங்கு முடிவதில்லை, ஜனநாயக விழுமியங்கள் பேணப்பட்டு அடுத்த அரசு ஒழுங்காக அமைவதையும் உறுதிபடுத்த வேண்டும் என சில சிவில் அமைப்புகள் கோரும் நிலை வந்திருக்கிறது. ராணுவ ஆட்சி, வாக்கு எந்திரங்களை கைப்பற்றுவது போன்ற புரளிகளும் பரவுகின்றன. இந்திராவின் எமெர்ஜென்ஸியின் போது அவர் அமெரிக்க சதியுடன் தன்னைக் கொல்லும் சதித்திட்டம் உள்ளது எனத் தொடர்ந்து பேசி வந்ததுடன், தேர்தலிலும் எதிர்க்கட்சிகளுக்கு நிதியளிப்பது அமெரிக்க உளவுத்துறையே என்றார். இது போக தேர்தலில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்களை அவர் கடைசி சில வாரங்கள் வரும் வரை அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லா எதிர்க்கட்சியினரும் சிறையிலிருந்த நிலையிலே ஒரு அரசியல் எழுச்சி நிகழ்ந்து இந்திரா ஆட்சியை இழந்தார். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின் போது அங்குள்ள ஜெர்மானிய பிரஜைகளுக்கு இரண்டாம் உலகப்போரின் போது அவர்களுடைய தேசம் பல மாதங்களாக தோல்வியைத் தழுவி வரும் உண்மை தெரிவிக்கப்படவில்லை. ஹிட்லர் வீழ்ந்த பின்னரே அவர்கள் அதிர்ச்சியடைந்து என்ன நிஜமாகவே நாம் தோற்றுவிட்டோமா எனக் குழம்பியதாக சொல்வார்கள். கடந்த முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்ற பிறகும் அவரது ஆதரவாளர்களுக்கு அவர் வென்றுவிட்டதாகவே சொல்லப்பட்டது, அவர்கள் அதனாலே அவரது தோல்வியை ஏற்காமல் கலவரம் பண்ணினார்கள், டிரம்பும் கடைசி வரை அதை ஏற்க தலைப்படவில்லை. மோடி ஆண்ட் கோவின் நடவடிக்கைகளும் இப்படியே உள்ளன.
என்ன பிரச்சினையெனில் இந்திராவோ ஹிட்லரோ டிரம்போ இப்போது மோடியோ தோல்வியை ஒப்புக்கொண்டால் தலைபோகும் எனும் அளவுக்கு குற்றங்களை, மோசடிகளை இழைத்திருக்கிறார்கள், ஊழல் செய்திருக்கிறார்கள், தோல்வி என்றால் முடிவு எனும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். இது சர்வாதிகாரிகளின் உளவியல் மற்றும் நடத்தை. அவர்களுடைய உளச்சிதைவு ஒரு தேசத்தின் மனநிலையாகவும் பீதியாகவும் மாற்றப்படுவதே அவலம்.
வரலாற்றில் நாம் காணும் இன்னொரு வினோதம் சர்வாதிகாரிகளை வலதுசாரி நிறுவனங்களுடன் முதலீட்டாளர்களின் லாபி ஒன்றும் சேர்ந்தே எப்போதும் வளர்த்தெடுக்கிறது என்பது. (இந்திரா மட்டுமே இதில் விதிவிலக்கு; எதிர்க்கட்சிகளுக்கு நிதியளித்து அவரை வீழ்த்த முயன்ற இந்த லாபி மீதான அச்சத்தாலும் தன் பதவி ஆசையாலும் அவர் சர்வாதிகார லட்சணங்களை வெளிப்படுத்தினார்.) இந்த முதலீட்டிய லாபியும் ஸ்தாபனங்களும் இவர்களை தற்காலிகமாக கைவிட்டால் தோல்விக்குப் பின்னர் மக்கள் இவர்களை மன்னித்து ஏற்பதும் நடக்கவே செய்கிறது. ஹிட்லரை அவரது வீழ்ச்சிக்குப் பின்பும் ஜெர்மானியர்களில் பெரும்பகுதியினர் சுலபத்தில் வெறுக்கவில்லை. ஆனால் போகப் போக அவரை மறந்துவிட்டார்கள். அவர் இறந்து போகாமல் தேர்தலில் நின்றிருந்தால் ஜெயித்திருப்பாரா என்பதும் சந்தேகமே. ஆனால் இந்திராவும் மீண்டு வந்தார். அவர் உண்மையான தலைவர்.

டிரம்பு இப்போது முழுமையான காணாமல் போய்விடவில்லை. பாலியல் வழக்குகள், மோசடி வழக்குகளுடன் போராடிக்கொண்டு தன் ஆதரவாளர்களையும் அரவணைத்து தான் போகிறார். ஆனால் மோடிக்கு இந்த முதலீட்டாளர்கள், ஊடக, ஸ்தானப ஆதரவுக்கு வெளியே ஒரு மக்கள் ஆதரவு உண்டா என்று எனக்கு சந்தேகம் உண்டு. ஏன் பிரச்சினை வரும் போதெல்லாம் அவர் மக்களின் பிரச்சினையை பேசாமல் அம்பானி, அதானிகளுக்கு சாதகமான கூடுதல் முடிவுகளை எடுப்பது, கோயில் கட்டுவது, வேடம் போடுவது என மீண்டும் ஊடகங்களயே சார்ந்து நிற்க நேர்கிறது? அவர் ஹிட்லரைப் போல ஒரு வெற்று பிம்பமோ எனும் சந்தேகம் எழுகிறது? இல்லாவிடில் அவர் ஏன் உண்மையை (பணவீக்கம், வேலையின்மை, ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, அதிக வரிகள்) எதிர்கொள்ள விரும்பாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.