Skip to main content

Posts

Showing posts from August, 2024

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மீண்டுமொரு விளக்கம்

நான் கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயமோகனின் கருத்துக்களுக்கு எதிர்வினைகள் எழுதுவதில்லை - அது ஒரு முடிவற்ற கருத்துச் சுழல், அவரது கருத்துக்களுக்கு பதிலெழுதுவது அவ்வளவு முக்கியமல்ல, அது என் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று ஒருநாள் என் மனதுக்குப் பட்டதும் நான் திருந்திவிட்டேன். இம்முடிவு எனக்கு நன்றாகவே பலனளித்தது. இன்னொரு விசயம், ஜெயமோகன் யாருடைய எதிர்வினையையும் பொருட்படுத்துவதில்லை, அவரை விமர்சிப்பது ஒரு மலையின் உச்சியில் போய் நின்று தனியாகப் பேசிகொண்டிருப்பதைப் போலத் தான். அவரை விமர்சிப்பதும், மறுப்பதும் மனித குலத்துக்கு அவசியமா என்றால் இல்லையென்பேன். ஆனால் இன்று அவரது இணையதளத்தில் அவர் தெரிவித்திருந்த ஒரு தகவலுக்கு நான் மறுப்பு சொல்ல வேண்டும். நான் செய்யும் காரியங்கள், எழுதும் சொற்கள் குறித்து வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்துவேன், ஆனால் நடக்காதவற்றைப் பற்றி விமர்சனம் எழும் போது அது ஏற்படுத்தும் தவறான மனப்பிம்பத்தை, அதன் நிழலை சுமக்க நான் தயாரில்லை. குறிப்பாக கடலூர் சீனு குறித்து அவர் இப்படி சொல்லியிருப்பது:  //சீனுவுக்கு இதெல்லாம் தெரியும். இன்று அபிலாஷ் அவரை ஏளனமும் நக்கலும் செய்யும்போத...

"ஏன் வாசிக்க வேண்டும்" - பாலா அறிமுகம்

"ஏன் வாசிக்க வேண்டும்?" நூலை இச்சிறு காணொளியில் பாலா அறிமுகம் செய்திருக்கிறார். அவருக்கு நன்றி.  பாலா அறிமுகம்

"கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்" - ஒரு பார்வை - ரமேஷ் மாணிக்கம்

// Ramesh Manickam 5.0 out of 5 starsVerified Purchase எனது பார்வையில்...... Reviewed in India on 14 October 2021 நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பர் அபிலாஷின் கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் நாவலை கிண்டிலில் படிக்க வாய்த்தது. இது ஒரு துப்பறியும் நாவல். துப்பறியும் நாவல் என்றாலே, வாசகனை துப்பறிவாளனாக்கி விடுவதில்தானே அதன் வெற்றியிருக்கிறது. அதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல துணிகிறேன். கதையை நீங்கள் இப்படி அணுகலாம்.இப்போது ஒரு பெரிய கேன்வாஷை கற்பனை செய்து கொள்ளுங்கள். கதையின் ஆரம்பத்தில் கை விரல்கள் காட்டப்படுகிறது. விரல்கள் ஒவ்வொன்றாய் வெட்டப்படுகிறது. தனித்தனியாக ஒவ்வொரு விரலும் வெட்டப்படுகிறது. அனைத்தும் வெட்டப்பட்ட பிறகு, வெட்டப்பட்ட இடத்தில் இருந்து இரத்தம் கசிவதை உணர்கிறீர்கள். ஆம் வெட்டப்பட்டவை உங்கள் விரல்கள் தான். அங்கு வழிவது உங்கள் இரத்தமேதான். இப்போது உங்களுக்கு ஒரு திறப்பு ஏற்படுகிறது. மீண்டும் மெல்ல நடந்ததை ஒரு முறை ஓட்டிப் பார்க்கிறீர்கள். நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் அடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதும் நீங்கள் கதையின் தலைப...

ஏன் வாசிக்க வேண்டும் நூல் குறித்து அன்புக்குமரன் எத்தியரசன்

புத்தகம்: ஏன் வாசிக்க வேண்டும்  எழுதியவர்: எழுத்தாளர்: Abilash Chandran  (ஆர். அபிலாஷ்) வாங்கிய இடம்: ஸிரா டிகிரி அரங்கு, சென்னை புத்தகக் கண்காட்சி வாங்கிய தேதி : 02 மார்ச் 2022   வாசிப்பது எப்படி என்ற புத்தகத்தை அண்மையில் வாசித்தபோது , அதன் தொடர்ச்சியாய் ஏன் வாசிக்க வேண்டும் என்ற புத்தகத்தையும் வாசிக்க நேரிட்டது. நம் வாழ்வாதாரத்தை முன் வைத்து வாசிப்பின் தேவை குறித்து புத்தகத்தின் வாசத்தை நுகராதவர்களுக்கு ஒரு அறிமுக நூலாக இருந்தது செல்வேந்திரன். அவர்களின் கட்டுரை தொகுப்பு.  ஆனால் எழுத்தாளர் அபிலாஷ் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை மிக விரிவாகவும் நேர்மையாகவும் (வாசிப்பும் ஒரு போதைதான் என்பது போன்ற கருத்துகள் ஊடாக ) தனது கருத்துகளை தனது பிரஞையினால்  நமக்கு கடத்தியிருக்கிறார். எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் முகப்புத்தக பதிவுகளை சில வருடங்களுக்கு முன்பாக பின்தொடர்ந்தேன். அதன் நீட்சியாக ஒரு நாள் ஹருதயம் திரைப்படத்தை பற்றிய இவரது கட்டுரையால் கவரப்பட்டேன். அப்படி ஒரு பகுப்பாய்வு. அவரின் அவதானிப்புகள் மிகவும் ஆழ் நிலையில் இருப்பதை உணர்ந்தேன். பின்பு பல கட...

ஊர் மனநிலை

  இம்மாத உயிர்மையில் வந்துள்ள என் நேர்முகத்தில் இருந்து: "நான் என்னை ஒருவித எதிர்விசையாக கருதுகிறேன். என்னை வலப்பக்கமாக திருகி விட்டால் நான் இடப்பக்கமாக இரட்டி வேகத்தில் சுழல்வேன். எனக்கு சதா எதிர்ப்பதற்கு, மறுப்பதற்கு எதாவது ஒன்று இருந்து கொண்டிருக்க வேண்டும். (...) பெரும்பான்மைத் தமிழக மாநிலங்களில் உள்ள உறவுகள் சார்ந்த செண்டிமெண்டுகள், அரசியல், சினிமா, கடவுள், மதம் சார்ந்த மிகையுணர்ச்சி எங்கள் ஊரில் இல்லை. எங்கள் மக்கள் கோயிலுக்குள் நின்றபடியே இயல்பாக பூசாரியையும் கடவுளையும் கலாய்ப்பார்கள், தேவாலயத்திற்குள் இருந்து போதகரை பகடியாக பார்ப்பார்கள்."

பகற் கொள்ளை

  மக்களால் நிலத்திலோ வங்கியிலோ பணத்தைப் போட்டு வைக்க முடியாதபடி பொருளாதாரம் வீங்கி விட்டது; எல்லா இடங்களிலும் வரியை அதிகரிக்கிறார்கள். ஓய்வூதிய திட்டமென ஒன்று அரசிலோ தனியார் நிறுவனங்களில் இன்று இல்லை. எதிர்காலம் குறித்த கவலைகள், நிலையாமை குறித்த பதற்றமும் சேர்ந்து மக்களை குழப்பமான நிலையில் தள்ளுகின்றன. மக்கள் பின்வாசல் வழியாகத் தப்பிக்கலாம் என்று போகும் போது அங்கு அவர்களை மடக்கிப் பிடிக்க போலி நிதி நிறுவனங்கள் நிற்கின்றன. 14, 346 கோடி என்பது சாதாரணத் தொகை அல்ல. நிச்சயமாக அதிகாரிகளின் (கூடவே 'அரசியல்வியாதிகளின்'), காவல்துறையின் அனுமதியுடனே, பங்களிப்புடனே இந்த முறைகேடுகள் நடக்கின்றன. இதுவரை தமிழ்நாட்டில் நடந்த மோசடிகளில் திருடப்பட்ட பதினாலாயிரம் கோடிகளில் ரெண்டாயிரம் கோடிகளையாவது அவர்கள் முழுங்கி இருப்பார்கள். நவீன இந்தியாவின் மிகச்சிறந்த தொழிலே நிதி மோசடி தான் - மக்களை ஏமாற்றிப் பறிப்பது, சவுக்கு ஸ்டைலில் தொழிலதிபர்களை மிரட்டிப் பறிப்பது, கறுப்புப் பணம், வங்கியில் இருந்து பல ஆயிரம் கோடிகளை சுருட்டுவது - இதற்கெல்லாம் பெரிய தண்டனைகளோ கட்டுப்படுத்த வலுவான சட்டங்களோ இல்லை. நிதி மோசட...

பாலுறவும் பாலியல் குற்றமும் ஏன் நிகழ்கின்றன?

அன்புள்ள அராத்து, வன்புணர்வுக் குற்றங்களை மட்டுமல்ல எந்தக் குற்றத்தையும் தண்டனைகளால், கடும் தண்டனைகளால் கூட, குறைக்க முடியாதென்றே நினைக்கிறேன். என்னை விடுங்கள், ஆய்வுகளும் இதையே சொல்கின்றன. சமூக வெறுப்பு, கூச்சத்தினாலும் முடியாது. தண்டனைகள் குற்றவாளியைத் திருத்தவோ எதிர்காலக் குற்றவாளியைத் தடுக்கவோ அல்ல, குற்றவாளி அல்லாதோரின் திருப்திக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. கடவுளுக்கு பலி கொடுப்பதன் நவீன வடிவமே இன்றைய நவீனத் தண்டனைகள். அவை இல்லாமல் போகும் போது சமூகத்துக்கே பைத்தியம் பிடிக்க ஆரம்பிக்கும். நம்மால் நம்மையே தண்டிக்க முடியாமல் போவதும் குற்றவாளியைத் தண்டிப்பதற்கு ஒரு காரணம். ஒவ்வொரு குற்றமும் நம் அந்தரங்கத்தைத் தீண்டுகிறது. அதனாலே ஆன்மீகப் பொது நிகழ்வைப் போலக் குற்றங்கள் ஒரே சமயம் பொதுவயமாகவும் அந்தரங்கமாகவும் நம்மிடையிலும் நமக்குள்ளும் நிகழ்கின்றன.  குற்றங்கள் நவீன மனிதனின் அந்தரங்க உலகம். அவனது பாழ்பட்ட ஆன்மீக உலகம். குற்றம் நிகழும் போது கடவுளுடனான உரையாடலைப் போன்றே பொதுசமூகம் இருப்பதில்லை. இது பாலியல், பாலியல் அல்லாத எல்லா குற்றங்களுக்கும் பொருந்தும். கு...

இலக்கிய அரட்டைக் குறிப்புகள் (2)

ஈழப் புலம்பெயர் / போர் இலக்கியங்களின் சிறப்பு என்னவென்பது எப்போதுமே எனக்குள் இருக்கும் கேள்வி - தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழத்தமிழரைப் போல போர் அனுபவம் இல்லையாகையால் ஈழ இலக்கியத்தாலே உலக இலக்கியத்திற்கு அருகில் போக முடியும், தமிழ்நாட்டு இலக்கியத்தால் முடியாது என்று ஏன் சிலர் கூறுகிறார்கள்? இந்த விசயத்தைப் பற்றி மொழியாக்கப் பதிப்புகள் உலகளவில் போவது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது தற்செயலாக ஜீவ கரிகாலனிடம் குறிப்பிட்டேன். ஈழத் தமிழரிடம் உள்ள ஒன்று தமிழ்நாட்டுத் தமிழரிடம் இல்லை. அது நிஜத்தில் போர் அல்ல. காப்காவின், ஜேம்ஸ் ஜாய்ஸின் புனைவுலகிலும் தான் போர் இல்லை. செர்வாண்டஸ் போரில் பங்கெடுத்தவர் என்றாலும் “டான் குவிக்ஸடோவில்” போர்க் காட்சிகள் இல்லை. ஆக, போர் இல்லாத மகத்தான நாவல்களை நம்மால் கணிசமாக குறிப்பிட முடியும். என்றுமே போர் அனுபவம் இலக்கியத் தகுதியாக அறியப்பட்டதில்லை. நோயுறுவது, விபத்துக்குள்ளாவது எழுத்தாளருக்கானது தகுதி என்பதைப் போன்றது இது. நிஜத்தில் நாம் சொல்ல வருவது போர் அனுபவத்தின் முக்கியத்துவத்தை அல்ல - போர் எதற்காக நடைபெறுகிறது? தேசத்துக்காக. தேசம் இல்லாத மக்களால் போர்...

ஊழல்

பதிப்பகங்கள் நூலக நூல் கொள்முதலுக்காக முறைகேட்டில் ஈடுபட்டு, அதற்கான கோடிக்கணக்கான பண மதிப்பிலான ஊழலை செய்யும் போது அதனால் எழுத்தாளர்களும் வாசகர்களும் லஞ்சம் கொடுக்க முடியாத சிறுபதிப்பகங்களும் முறையே பாதிக்கப்படுகின்றனர். எழுத்தாளர்களுக்கு ராயல்டி கிடைக்காது - இல்லாத புத்தகத்துக்கு பொய்யான தலைப்பில் ஆர்டர் கொடுத்தாலோ ஒரு பதிப்பகம் முறைகேட்டினால் ஆர்டர் பெற்றாலோ அது கறுப்புப் பணத்தை உற்பத்தி பண்ணும், கறுப்புப் பணத்தை எழுத்தாளருக்கு ராயல்டியாக கொடுக்க முடியாது, மேலும் இல்லாத எழுத்தாளருக்கு எங்கே போய் பணம் சேரும்? இந்த அபத்தமான சூழலை காப்கா கூட கற்பனை பண்ணியிருக்க முடியாது. வாசகர்களுக்கும் ஒரே நூலை இருபது முப்பது பிரதிகள் அலமாரியில் இருந்தாலோ அல்லது பொய்யான தலைப்பில் இருந்தாலோ பயனில்லை. சேக்கிழாரின் கம்பராமாயணம் என ஒரு நூல் பதிப்பிக்கப்பட்டால் அதை வைத்து வாசகருக்கு சேக்கிழாரையும் புரிந்துகொள்ள இயலாது, கம்பனையும் படிக்க முடியாது. பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும். அடுத்து, விலை. ஊழலினால் சரிசமமாக பதிப்பகங்களுக்கு நூலக ஆணை கிடைக்காமல் அவை நஷ்டத்தை சமாளிக்க புத்தக விலையை ஏற்றுவது வாசகரை பாதிக்...

இலக்கிய அரட்டைக் குறிப்புகள் (1)

புக் பிரம்மா இலக்கிய விழாவின் போது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை உணவகங்கள் இருந்த பகுதியில் நண்பர்களை சந்தித்து அரட்டையடிப்பது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அதாவது சென்னையில் அரங்கின் வெளியிலும் தேநீர்க் கடையிலும் நின்று பேசுவதை இங்கு ஆற அமர அமைதியான, வெக்கையற்ற இதமான சூழலில் இருந்து பேச முடிந்தது ஒரு செமையான அனுபவம். பதிப்பாளர்கள் தனியாக அங்கு நடந்த பதிப்புத்துறைக்கான அமர்வுகளில் கலந்துகொள்ள வந்திருந்ததால் அவர்களும் அரட்டையில் இணைந்துகொண்டார்கள். கிட்டத்தட்ட சென்னையில் இருப்பதைப் போன்றே உணர்ந்தேன். நான் அங்கு உரையாடியதில் சில பொதுவான விசயங்களை இங்கு சிறு குறிப்புகளாக பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். **** தெலுங்கு எழுத்தாளர் வோல்கா எனும் லலித குமாரி நாவல் குறித்த கலந்துரையாடலில் ஒரு சுவாரஸ்யமான வசனத்தை சொன்னார். அந்த சொற்றொடர் ஒரு பஞ்ச் டயலாக்கைப் போல இருந்தது. “கவிதைகளை கவிஞரின் பெயராலும் நாவல்களை தனிப்பட்ட படைப்புகளாலும் அடையாளப்படுத்துகிறோம், நினைவுகொள்கிறோம்.” அதாவது நாம் பாரதியின், ஆத்மாநாமின், நகுலனின் கவிதைப் பற்றிப் பேசும் போது அந்த படைப்பாளிகளின் குறிப்பிட்ட கவிதையை அல்ல அவர்களு...

இதற்காகத் தானா?

இதுதான் புக் பிரம்மா இலக்கிய விழா பற்றி என கடைசிப் பதிவு (என்று நினைக்கிறேன்). இன்று மாலையில் பென்யாமினுடனான உரையாடல் நிகழ்வு நடந்து கொண்டிருந்த போது போனேன். பென்யாமின் பதற்றமாக ஒரு எனெர்ஜி இல்லாம பேசிக்கொண்டிருந்தார். ஒருங்கிணைப்பாளர்கள் நேர விசயத்தில் ரொம்ப கறார் போல - அரங்குக்கான நேரம் முடிவதற்கு முன்பே டிங்டிங் என மணியடித்தார்கள். (அப்போதும் கூட சிலரது தூக்கம் கலையவில்லை.) ஆனால் பென்யாமின் வெளியே பார்த்த போது என்னிடம் உற்சாகமாகப் பேசினார். அரங்கில் கால்வாசி தான் கூட்டம். ஒரு தற்படம் எடுக்கலாம் என முயன்றால் எனக்குப் பின்னால் ஒருவர் மதிய ஆங்கிலப் படத்திற்கு வநதவரைப் போல தூங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த அனேகமானவர்கள் மந்திரித்து விட்டவர்களைப் போலத்தான் இருந்தனர். அங்கேயோ வெளியிலோ ஒரு பரபரப்பு, உற்சாகம் இல்லை. பொதுவாகவே பெங்களூர் மக்கள் எங்கு போனாலும் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமல் ஏ படம் பார்க்க சென்றதைப் போலத்தான் அதீத மெத்தனமாக இருப்பார்கள் என்றாலும் இந்த நிகழ்வு ஒரு மார்க்கமாகவே இருந்தது; ஏதோ மணப்பெண் ஓடிப்போன கல்யாண மண்டபத்தில் உணவுக் கூடத்தைப் போல. கிட்டத்தட்ட காலியாக இர...

ஜெயமோகனை விட அஜிதன் ஏன் மேலான எழுத்தாளர்?

கெ.என் செந்தில் புக் பிரம்மா இலக்கிய விழா பற்றி எழுதிய குறிப்பை படித்த போது இது தோன்றியது. எனக்கென்னவோ பிற விஷ்ணுபுரம் படைப்பாளிகளுக்குப் பதில் அஜிதனையே அழைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எனக்கு விஷ்ணுபுரத்தாரை தாஜா பண்ணி எதுவும் ஆகப் போவதில்லை, ஆகையால் இதை நான் சுயநல நோக்கிற்காக சொல்லவில்லை - ஜெயமோகனிடம் இல்லாத ஒரு மெய்யியல் போக்கு அஜிதனிடம் உள்ளது. ஜெயமோகன் தன் புனைவில் மதம் எனும் இயக்கத்தின் வெறுங்கூடான புற அமைப்பையும், அதன் சடங்குகள், நம்பிக்கைகள், கலாச்சார அரசியலையும் (முரணியக்கம் சார்ந்து) புனைவாக்கினால், அஜிதனோ அதன் சாரமாக உள்ள, ஆன்மாவாக உள்ள மெய்யியலைத் தொடுகிறார், அல்லது சில நேரங்களில் அதற்காக குறைந்தது முயல்கிறார். இது அவரது எழுத்துக்கு ஒரு வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஜெயமோகனுக்கு மதத்தில் உள்ள ஆர்வம் ஆன்மீகத்தில், மெய்யியலில் இல்லை. அவர் ஒரு லௌகீக எழுத்தாளர். எண்பதுகள் வரைத் தமிழ் எழுத்தாளர்கள் மெய்யியல் தன்மை கொண்ட புனைவுகளை எழுதினார்கள், அது எதார்த்தவாத, இயல்புவாத, இனவரைவியல் புனைவுகளின் பெருக்கத்தால் அழிந்து போய், எழுத்துலகமே ஏதோ காய்கறி சந்தை போல முழுக்க முழுக்க புறம் சார...

நம் காலத்தின் மாபெரும் தணிக்கை இயக்கம்

கெ.என் செந்திலின் ஒரு கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை - 90% விஷ்ணுபுரத்தார் புக் பிரம்மாவின் விழாவை கபளிகரம் பண்ணியிருப்பதாக சொல்வது நியாயமில்லை. நியாயமே இல்லை. 60% என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். வேறு முகாமை சேர்ந்த முக்கிய படைப்பாளிகள், பதிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலெல்லாம் பிரச்சினை இல்லை. உண்மையான பிரச்சினை மனுஷ்யபுத்திரன் சொன்னதைப் போல ஒரு விழாவில் அம்மொழியின் தலைசிறந்த படைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், அது நிகாழமல் போனதே அவலம். கெ.என் செந்தில் குறிப்பிடுவதைப் போல பா. வெங்கடேசனை நிச்சயமாக அழைத்திருக்க வேண்டும். சி.எஸ்.கெ, பாலசுப்பிரமணியம் பொன்ராஜ் போன்றோரும் இங்கே இருக்கும் நல்ல படைப்பாளிகள். தேவதேவனை எப்படி அழைக்காமல் விட்டார்கள் எனப் புரியவில்லை? இப்படி பல “ஆச்சரியங்கள்”. இன்னொரு பிரச்சினை கணிசமான படைப்பாளிகள் மீது பூஞ்சை போலப் படிந்துள்ள ‘இசைவு அழுத்தம்’. ஜெயமோகனுடன் இசைந்தோ போவதோ அவரைப் பகைத்துக் கொள்ளாமலோ இருந்தால் சில விருதுகள், வெளிநாடு போகும் வாய்ப்பு, சினிமா வாய்ப்பு, விஷ்ணுபுரம் பாராட்டு அரங்குகள், ஜெயமோகன் தம் படைப்புகளை சிலாகித்து எழுதும் கட...

பெரும் குறை - அ. ராமசாமி

பெங்களூரில் நடக்கும் - புக்பிரஹ்மாலிட் ஃபெஸ்ட்( BOOKBRAHMALITFEST) -இல் அழைக்கப்பட்டவர்களின் தகுதி, சிறப்பு போன்றவற்றைப் பற்றிய புகார்களை விடவும், பெங்களூரிலேயே இருக்கும் அபிலாஷ் சந்திரனையும் சரவண கார்த்திகேயனையும் அழைக்காததைப் பெரும் குறை என்றே சொல்வேன். இருவரும் அவர்களின் மனக்குறையைப் பதிவுகளாக எழுதிக் கடந்திருக்கிறார்கள்.  அபிலாஷின் எழுத்துப்பரப்பு விரிவானது. புனைவிலும் விமரிசனத்திலும் தத்துவம் இலக்கியத்தையும் இணைத்துப் பேசும் கோட்பாட்டு எழுத்திலும் இன்று எழுதும் எழுத்தாளர்களில் அபிலாஷின் பங்களிப்புகள் மறுதலிக்க முடியாதவை. இம்மாத உயிர்மையில் வந்துள்ள விரிவான நேர்காணலே அதற்குச் சாட்சி சிறுபத்திரிகை அடையாளத்தையும் வணிக எழுத்தின் தன்மையையும் இணைத்துவிட முடியும் என நம்பும் சரவணகார்த்திகேயனுக்கு ஜெயமோகனும் சுஜாதாவும் முன்மாதிரிகள்.  நடப்பியல் சிறுகதைகளில் ஆரம்பித்தவர் என்றாலும் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளில் பரிசோதனைகள் செய்து வருகிறார். எதையும் திட்டமிட்டு எழுதிவிட முடியும் என்பதற்கு தன்னை உதாரணமாக்கிவருகிறார்.   அவரது சமூக ஊடக நிலைபாடுகள்/ பெண்கள...

கடுப்பு

நிர்வாகிகள் தமக்குள்ள தொடர்புகளைக் கொண்டே எழுத்தாளர்களை தேர்வு செய்வார்கள். இதில் வியப்படைய ஒன்றுமில்லை. பரிந்துரை, செல்வாக்கு, அரசியல் என்றெல்லாம் குழப்பிக் கொள்ள ஒன்றுமில்லை. நான் இத்தனை ஆண்டுகளாக பெங்களூரில் இருக்கிறேன். அண்மையில் இங்கு நடந்து முடிந்த இரு தமிழ் இலக்கிய விழாக்களுக்கும் என்னை அழைக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்தெல்லாம் படைப்பாளிகளை பஸ் வைத்து, கார் வைத்து அழைத்தார்கள். இந்த பிரம்மா இலக்கிய விழா கூட என் வீட்டுக்கு ரெண்டு கிலோமீட்டர் தொலைவிலே தான் நடக்கிறது. அவர்களுக்கு என் பெயரில் ஒரு படைப்பாளி இருப்பதோ, நான் தேசிய விருது பெற்றிருப்பதோ, நாவல், கவிதைத்தொகுப்பு, சிறுகதைத்தொகுப்பு, மொழியாக்கம், உரைநடை என நாற்பதுக்கும் மேல் நூல்கள் வெளியிட்டுள்ளதோ அவர்களுக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொருட்படுத்தவே இல்லை. அதற்கு நான் ஒன்றுமே பண்ண முடியாது. அவர்களிடம் போய் என் ரெஸ்யூமை எல்லாம் கொடுக்க முடியாது. அவர்களுடைய தொடர்பு எல்லைக்குள் நான் இல்லாததால் நான் இல்லாமலும் போகமாட்டேன்.  எந்த வருத்தமும் இல்லை! கடுப்பு மட்டும் தான். பி.கு: அழைக்கப்பட்டுள்ள எழுத்தாள நண்பர்களுக்கு என் அன்பார...

விதி

  எப்போதுமே எழுதுவதற்கு போதுமான நேரமில்லை எனும் உணர்வு எனக்கிருக்கிறது. ஒரு நாவலை எழுதி முடித்து அதைத் திருத்துவதற்குள் இன்னும் நான்கைந்து நாவல்கள் எழுதக் கேட்டு கதவைத் தட்டுகின்றன. அவற்றை முடிக்காது பாதியில் விட்டுவிடும் போது அவை பேய்களாகி என் உறக்கத்தைக் கெடுக்கின்றன. அதனாலே வார இறுதி நாளை நான் பயணத்தில் செலவழிப்பதில்லை. எழுத்துக்குள் மூழ்கி விடுகிறேன். எங்காவது போவதென்றால், நண்பர்களை சந்திக்க நினைப்பதென்றால் அதற்கு அரைநாள் ஓடிவிடும். இன்னொரு பக்கம் வீட்டிலேயே இருந்தாலும் மனம் ஓய்வுக்காக ஏங்கும். ஞாயிற்றுக் கிழமையை உறக்கமும் வேடிக்கையுமாக கழிக்காவிடில் திங்கள் அன்று பெரும் சோர்வு தோளில் சாய்கிறது. பத்து, இருபது நாட்கள் விடுமுறை கிடைத்தால் உடனடியாக ஒரு நாவல் காத்து நிற்கிறது. எனக்கென்னவோ என்னைப் பற்றி யோசிக்க பழைய படங்களில் வரும் ஐந்து பெண்களை கரை சேர்ப்பதற்காக போராடும் அப்பா / அண்ணன் தனக்கென எதை யோசித்தாலும் ஒவ்வொரு பெண் குழந்தையின் / தங்கையின் முகமாக நினைவுக்கு வரும் காட்சி தோன்றுகிறது. இவ்வளவு புத்தகங்களையும் ‘கரை சேர்க்கும்’ போது இன்னும் பத்து எழுத்துத் திட்டங்கள் புதிதாதக் தோ...