முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் வாசிக்க வேண்டும் நூல் குறித்து அன்புக்குமரன் எத்தியரசன்

புத்தகம்: ஏன் வாசிக்க வேண்டும் 
எழுதியவர்: எழுத்தாளர்: Abilash Chandran  (ஆர். அபிலாஷ்)

வாங்கிய இடம்: ஸிரா டிகிரி அரங்கு, சென்னை புத்தகக் கண்காட்சி
வாங்கிய தேதி : 02 மார்ச் 2022 
 வாசிப்பது எப்படி என்ற புத்தகத்தை அண்மையில் வாசித்தபோது , அதன் தொடர்ச்சியாய் ஏன் வாசிக்க வேண்டும் என்ற புத்தகத்தையும் வாசிக்க நேரிட்டது. நம் வாழ்வாதாரத்தை முன் வைத்து வாசிப்பின் தேவை குறித்து புத்தகத்தின் வாசத்தை நுகராதவர்களுக்கு ஒரு அறிமுக நூலாக இருந்தது செல்வேந்திரன். அவர்களின் கட்டுரை தொகுப்பு.  ஆனால் எழுத்தாளர் அபிலாஷ் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை மிக விரிவாகவும் நேர்மையாகவும் (வாசிப்பும் ஒரு போதைதான் என்பது போன்ற கருத்துகள் ஊடாக ) தனது கருத்துகளை தனது பிரஞையினால்  நமக்கு கடத்தியிருக்கிறார்.
எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் முகப்புத்தக பதிவுகளை சில வருடங்களுக்கு முன்பாக பின்தொடர்ந்தேன். அதன் நீட்சியாக ஒரு நாள் ஹருதயம் திரைப்படத்தை பற்றிய இவரது கட்டுரையால் கவரப்பட்டேன். அப்படி ஒரு பகுப்பாய்வு. அவரின் அவதானிப்புகள் மிகவும் ஆழ் நிலையில் இருப்பதை உணர்ந்தேன். பின்பு பல கட்டுரைகளை வாசித்தேன். அண்மையில் தனது உடல் இடையை குறைக்கும் பொருட்டு அவர் மேற்கொண்ட சில வாழ்வியல் முறைகளை அறிவியல் பூர்வமாகவும் பல அளவுறுகளை முன்வைத்து எழுதியதை ஓர் அளவு பின்பற்றி நானும் என் இடையை குறைத்தேன். ஆக வாசிப்பில் தொடங்கி இவரது எழுத்துகள் என்னை ஓர் செயல் வீரனாகவும் மாற்றியிருக்கிறது.
ஏன் வாசிக்க வேண்டும் புத்தகத்தில் ஒரு பக்கம் கூட ....ஏன் ஒரு வரி கூட சோடை போகவில்லை. அத்தனையும் அறிவின் முத்துக்கள். அதுவும் நாம் பெருமளவு அறியாத அறிவுப்பண்டங்களை சுவைத்தபோது இருந்த ருசி இன்னும் என் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. எனது நீண்ட நாள் கேள்விகான  பதிலை நினைவுத் திறனும் வாசிப்பும் என்ற கட்டுரையில் காணமுடிந்தது. 
அசல் சிந்தனையாளருக்கான அனைத்து குணங்களும் இவரது எழுத்துக்களில் கண்டடையலாம். இலக்கிய வாசிப்பு என்ற இரண்டாம் பாகத்தில் இவர் யாருமே இதுவரை காணாத அல்லது உணராத வகையில் பல உளக்காட்சிகளை எனக்கு காண்பித்தபோது வியந்தேன். வாசிப்பது மூளையா மனமா என்ற ஒற்றை கட்டுரையிலேயே எனக்கு தெரிந்துவிட்டது. இரண்டாம் பாகம் மிகவும் உக்கிரத்துடன் version 2.0 வாக மிளிர்ந்தது . 
இந்த கட்டுரையில் நமக்கு கிடைக்கும்   அனுமானங்களை கிடப்பதே ஒரு தன் நினைவிழந்த நிலைக்கு சென்றது போலான அனுபவம். இதைத் தொடர்ந்து என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. ஆங்கிலத்தில் வாசிப்பது என்ற கட்டுரை மற்றும் ஒரு தலைசிறந்த (எல்லாமே நல்ல கட்டுரைதான்! ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல ) கட்டுரை. அயல் எழுத்தின் தாக்கம் நம் எழுத்தாளர்களின் எழுத்தின் மீது உண்டு என்பதை மிக அழகாக நிறுவியுள்ளார். உதாரணங்களை சுட்டிக்காட்டி சொற்றொடர்களின் வடிவத்தைக் கண்டுபிடித்து அந்த பாங்கு அவர்களின் எழுத்தை எப்படி தன சமகால எழுத்தாளர்களோடு தங்களை வேறு படுத்தியது என்பதையும் கச்சிதமாக சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார் (கையும் களவுமாகப் பிடித்தார் என்றும் சொல்லலலாம் ) . உதாரணம்: "கையைத் தேடிக்கொண்டு தயங்காமல் தன கையை நீட்டி குலுக்கினான் " என்ற சொற்றொடர் அமைப்பு ("Looking for the hand, he unhesitatingly extended his hand and shook it."). எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உரைகளில் வரும் சில வார்த்தைகளின் கட்டுமானத்தன்மையில் ஆங்கில தாக்கம் இருப்பதாக அவ்வப்போது உணர்ந்ததுண்டு. ஆனால் அபிலாஷ் அவர்களின் அவதானிப்பு மிக தீவிரமானதாக உள்ளது. தமிழர்கள் vs மலையாளிகள் என்ற கட்டுரையை மிகவும் ரசித்தேன். மறுபுறம் நாம் செல்லக்கூடிய பாதை மிகவும் தொலைதூரம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நான் இருப்பு உணர்வுக்கு திரும்பினேன். 
புத்தகத்தின் தலைப்பு சாதாரணமாக தட்டையாக இருக்கலாம். ஆனால் அதன் உள்ளடக்ககம் அனைத்திலுமே அவ்வளவு விவரக்குறிப்புகளுடன் விரிவான மற்றும் மறுக்க முடியாத ஞானத்தை கண்டடைந்து நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இந்த புத்தகம் ஒரு "Masterpiece". வாசித்தல் என்ற தலைப்பு இன்னும் பொருத்தகமாக இருக்கும்.
இவர் எழுதிய மற்ற புத்தகங்களை வாசிக்க ஆவலாக உள்ளேன்.
#readgasm

- அன்புக்குமரன் எத்தியரசன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.