முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்று தெய்வம்

 

There Is No God. This negation must be understood solely to affect a creative Deity. The hypothesis of a pervading Spirit co-eternal with the universe remains unshaken.

— Percy Bysshe Shelley, Queen Mab, Canto VII, Note 13

நம் ஊரில் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்று ஒரு பக்கமும் வலதுசாரி சிந்தனை, மதவாதம், கடவுள் நம்பிக்கை, தமிழ் தேசிய சைவம் என இன்னொரு பக்கமும் இரு முகாம்களாகப் பிரிந்து போனதில் தன் எதிரிலுள்ள உலகை, வாழ்வை எதிர்கொள்ளும் ஆற்றலோ முகமையோ இல்லாத தனிமனிதர்கள் கதிகெட்டவர்களாக, வழியற்றவர்களாக மாறினார்கள். இன்று அவர்கள் அதிகமாக கேளிக்கை, சுய அழிவு எனப் பயணிக்கிறார்கள். விஷ்ணுபுரம், ஈஷா போன்ற வசீகரமான முற்றதிகார அமைப்புகளை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். யோசித்துப் பாருங்கள் - பொருளாதாரம், அதை ஒட்டிய சமூக அமைப்புகள், அசைவுகள், தேசியம், அதன் பாலான அதிகாரத்துவம் எல்லாமே நம் எல்லையை மீறி உள்ளன. காலம் நமக்கு கைகூடாமல் நழுவிப் போய்க்கொண்டே இருக்கிறது. அப்போது நமக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தருவது அமைப்புகளோ, கருத்தியலோ, தத்துவமோ கூட அல்ல, படைப்பூக்கம் மட்டுமே.
படைப்பூக்கம், கற்பனை, தனித்துவ சிந்தனை, உள்-உலகம் இவை மகத்தானவை எனக் கருதுவதே இந்த காலத்தின் எதேச்சதிகார கலாச்சாரத்துக்கும் எதிரான நமது மிகப்பெரிய கருவி. கொள்கையை, சிந்தனையை, நிறுவனத்தை கடவுளாக்கினாலோ, ஆன்மீகம் பேசும் கடவுளைத் தேடி ஓடினாலோ நாம் கடுகைப் போல சிறுகியே போவோம். அதற்குப் பதிலாக நாம் நம்மையே கடவுளாக்குவதும், கற்பனையாலும் சொற்களாளும் உணர்ச்சிகளாலும் பலமடங்குப் பெருக்கிக் கொள்வதும், மாற்று உலகுகளைப் படைப்பதுமே சிறந்த பக்தி என்று கற்பனாவாதக் காலத்துக் கவி பெர்ஸி பைஸி ஷெல்லி சொல்கிறார்.

நமக்கு நாமே தெய்வம் என்பது எவ்வளவு மகத்தான வாக்கியம். பகுத்தறிவுவாதம், பக்தி இரண்டையும் விட மேலானது நாமே நாமான அத்தெய்வம். அத்தெய்வத்தை நாம் நிபந்தனைக்கு அப்பாலான சக்தியாகப் பார்க்கத் தேவையில்லை. அது நம் ஆற்றலுக்கு உட்பட்டு தோன்றும் தெய்வம். சமகாலத்தில் கற்பனாவாதத்தை மீள்நோக்குவது அவசியம் என இப்போது எனக்குத் தோன்றுகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...