முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மலையாள மரபும் அஜீத் மாம்பள்ளியின் தொப்பியும்

அஜீத் மாம்பள்ளியின் ” லாட்ஜ்” மறைந்த மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான பி.பத்மராஜனின் ”கோர்ட் விதிக்கு சேஷம்” (நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு) என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டது. இது ஒரு மலையாளப் குறும்படம். இப்படத்தின் கதை ஒரு குறும்படத்துக்கு சிக்கலானது. ஆனால் அஜீத் மாம்பள்ளி மிக சாமர்த்தியமாகவும், திறமையாகவும் கதைசொல்லலை கையாண்டுள்ளார். உதாரணமாக இக்கதை ஆரம்பத்தில் ஒரு ஆசாரியான காதலனை நமக்கு அறிமுகப்படுத்தி அவனை சுற்றியே மையம் கொள்கிறது. எளிய மனம் கொண்ட பத்தாம்பசலி அவன். ஒரு கொலைக் குற்றத்தில் வீணாக மாட்டி சிறைக்கு செல்கிறான். இந்த அநீதியை தான் கதை பேசப் போகிறது என்று நீங்கள் நினைத்தால் கதாநாயகி அறிமுகமாகி கதை ஓட்டத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்கிறாள். அவள் பாலியல் ஒழுக்கங்களுக்கு கட்டுப்படாதவள். “உலகின் மாபெரும் உணர்ச்சி பசி எனப்படுகிறது. அது உண்மையல்ல. உலகில் இரு உணர்வுகள் உள்ளன. ஒன்று சுகம். மற்றொன்று துக்கம்.” என்கிறாள். ஏறத்தாழ பத்மராஜனின் பெண் பாத்திரங்கள் இப்படி பாலியல் ஒழுக்கங்களை மீறி எழ எத்தனிப்பவர்களே. அவர்கள் ஆண்மையின் அதிகார தழலுக்குள் விழுந்து விடாமல் இருப்பதில் மிக கவனமானவர்...

கற்பழிப்பு சட்டத்தில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம்

கடந்த வருடம் நான் எழுதிய மனம் பிறழ்ந்தவரின் சட்டங்கள் கட்டுரையில் ஒரு முக்கியமான சட்டப்பிழையை குறிப்பிட்டிருந்தேன். ஒரு பெண் தான் கற்பழிக்கப்பட்டதாய் வழக்கு போட்டால் அதை சாட்சிகள் மூலமாக நீரூபிக்க வேண்டும் என்றொரு சட்ட கட்டாயம் இருந்தது. கற்பழிப்பாளர்கள் பொதுவெளியில் குற்றத்தை பொதுவாக நிகழ்த்துவது இல்லை என்பதே இந்த முறைமையை அபத்தமானது ஆக்குகிறது. தற்போது இந்த அசட்டு சட்ட நிபந்தனையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர் நீதிபதிகளான பி.சதாசிவம் மற்றும் ஆர்.எம் லோதா. கற்பழிக்கப்பட்ட பெண் கல்வியறிவு அற்றவர் என்ற பட்சத்தில் அவரது குற்றசாட்டை வெளிசாட்சியம் ஏதும் இன்றி நீதிமன்றம் ஏற்க வேண்டும் என்பதே அவர்களின் சமீபத்திய தீர்ப்பு. அவர்கள் இதற்கு கூறியுள்ள காரணம்: ”குற்றம் சாட்டும் எந்த பெண்ணும் பொய் சொல்லி தன் சுய-அபிமானத்துக்கு பங்கம் விளைவிக்க மாட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு பிறகு நீண்ட காலம் தயங்கிய பின்னரே அவர்கள் நீதி நாடி வருகிறார்கள். அவரிடம் ஆதாரம் கேட்பது மேலும் அவமானிப்பது போன்றதாகும்”. இந்த தீர்ப்பு கரநாடகாவில் இரு கல்வியறிவற்ற சகோதரிகள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு ஒன்றி...

மத்தியான காகம்

நியோன் விளக்குகளின் மேலே கவியும் நீலவானப் புகை புகை கக்கி அசையும் பேருந்துகள் பேருந்து வந்து விட்டதாய் கூட்டத்தில் இல்லாமலாகும் காதலி வேறெதுவும் கேட்பதற்கில்லை மத்தியான காகம் இப்போதும் கரைவதைத் தவிர

உறவு

ஆற்றோர நிழலுக்கும் நிலா வெளிச்சத்துக்கும் என்ன உறவு நிலவு புரளும்போது நிழல் துடிக்கிறது

விடிகாலைக் குளியல்

அதிகாலைக் குளியலின் இமைக்காத நிமிஷங்கள் சிலுவையில் இருந்து மிகச்சற்றே நழுவிய கிறிஸ்துவின் வெப்ப அலைகள் கலந்த வாசம் உறங்கும் காதலியின் மார்பு நுனியில் அரும்பி நிற்கும் நிறமற்ற பால்துளி மனதிற்குள் ஒலிக்கும் ஒலிநாடாவெல்லாம் அறுந்து போன பின்னும் நில்லாத பேரிசை குளியல் முடிந்து பற்றும் போது கல்லாய் குளிர்ந்த கிறிஸ்துவின் பாதங்கள்

நீயில்லாத அவ்விரவு

நீயில்லாத அவ்விரவு பனிப்பொழிவால் நிரம்பி இருந்தது அடிக்கடி ஜன்னலில் புலப்படும் வானம் தண்ணீரில் விந்து கரைவது போல் கோடுகளுடன் மெல்லமெல்ல விரியும் வானம் குப்பைத்தொட்டி நாய்க்குட்டியின் ஊதிப்போன செந்நிற வயிறு போல் ஜன்னல் கண்ணாடி எங்கும் கோடுகள் நீட்டி இணையும் ரத்தம் ஜன்னல் கண்ணாடி குருடாகிறது கனிந்த மாம்பழம் ஒன்று மஞ்சளாய் ஜன்னல் மேல் வழிந்து உருண்டு மறைந்த போது எட்டிப்பார்த்த என்னைச் சுற்றி எங்கும் கொழுத்துத் துணுக்குகள் பிசிபிசுப்பாய் படர்ந்த சிவப்புத் தோல்

கை நீட்டும் குழந்தை

நாலு வருடங்களுக்கு முன் உயிர்மையில் வெளியான என் முதல் படைப்பு ஒளி சிந்தும் மரங்கள் மின்னும் சாலையில் வழுக்கிப் போகும் கார்கள், பைக்குகள், ஆட்டோக்கள் சாலை ஓரமாய் கைக்குழந்தையுடன் நிற்கும் பிச்சைக்காரியின் உள்ளங்கைக்குள் மின்னும் ஒரு ரூபாய் நாணயம் கை நீட்டும் குழந்தையின் கையில் வழுக்கிப் போகும் கார்கள், பைக்குள், ஆட்டோக்கள் பிச்சைக்காரி சாலையை கடந்த பின்னும் தலை திருப்பி கைநீட்டும் குழந்தை