முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தொலைதூரம் செல்லாதே அன்பே - பாப்லோ நெருடா

ரொம்ப தூரம் போய் விடாதே, ஒரு நாள் ஆனாலும் கூட, ஏனெனில் – ஏனெனில் – எப்படி சொல்வதெனத் தெரியவில்லை: ஒரு நாள் என்பது ஒரு நாள் அல்ல; நான் உனக்காய் காத்துக் கொண்டிருப்பேன்; ரயில்கள் முழுக்க சென்று விட்ட பின் விழிப்பை இழக்கும் ஒரு காலியான ரயில் நிலையம் போல.

நான் உன்னை நேசிக்கவில்லை (XVII) - பாப்லோ நெருடா

நான் உன்னை நேசிக்கவில்லை ஒரு உப்பூநீர் இளஞ்சிவப்பு மலரைப் போன்றோ, புஷ்பராகத்தைப் போன்றோ அல்லது கார்னேஷன் மலர்கள் எய்யும் தீ அம்புகளைப் போன்றோ நான் உன்னை விரும்புகிறேன் வெறுப்பின் சில துளிகளைப் போல, ரகசியமாய், என் நிழலுக்கும் ஆன்மாவுக்கும் நடுவே.

உன் மார்புகள் போதாது எனக்கு - பாப்லோ நெருடா

உன் மார்புகள் போதாதடி எனதிந்த இதயத்துக்கு என் சிறகுகள் போதாதடி உன் கட்டறுதலுக்கு உன் ஆன்மாவின் மேலாக உறங்கிய ஒன்று என் வாய் வழி சொர்க்கத்துக்கு எழுந்து செல்கிறது.

நான்கு வர்ணங்கள் எனும் விசித்திரம் (1)

எனக்கு ரெண்டு நெருக்கமான நண்பர்கள் உண்டு . எல்லா விசயங்களிலும் ஒரே வகையான சுவை , நம்பிக்கை , ஆர்வம் . ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் முழுக்க வேறுபடுவார்கள் . ஒருவர் ” சாதியெல்லாம் இந்த காலத்தில் எங்க பார்க்கிறாங்க ?” என்றால் இன்னொருவர் இந்தியர்களின் அடிப்பனையான உளவியலே சாதியில் தான் இருக்கிறது என்பார் . சாதி என்பது பிறப்படிப்படையில் உருவானாலும் நாம் அதை தொடர்ந்து கடந்து சென்றபடி இருக்கிறோம் , ஆனால் அரசியல்வாதிகளும் குறுகின நோக்கம் கொண்ட சிந்தனையாளர்களும் சாதிப் பிரிவினையை நமக்கு நினைவூட்டியபடி இருக்கிறார்கள் என்பார் ஒருவர் . இன்னொருவரோ படிப்பு , வேலை , காதல் , திருமணம் , ரசனை , நட்பு , அன்பு என ஒவ்வொன்றிலும் நம் பார்வையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய நிறமியாக , நமது நிலைப்பாட்டை முடிவு செய்யும் ஒரு காரணியாக சாதி செயல்படுகிறது என்பார் .

இலக்கிய வாசிப்பில் இருந்து எதையாவது பெற முடியுமா?

எழுத்தாளன் ஏன் முரண்பட்டவனாய் இருக்க வேண்டும் என்பது குறித்த எனது முந்தைய பதிவை ஒட்டி முகநூலில் பிரகாஷ் கோவிந்தனுக்கும் எனக்கும் ஒரு நல்ல விவாதம் நடந்தது.  அது கீழ்வருமாறு: பிரகாஷ் கோவிந்தன்:  முரண்கள் அற்றால் விவாதங்கள் இல்லை.. முரண்கள் அற்றுபோனால் எழுத வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் முரண்களை இயல்பாய் அனுமதிப்பது வேறு.. ஒரு நோக்கத்துக்காக அனுமதிப்பது வேறு.. அது வெறுமனே மருள் வந்ததாய் நடிக்கும் சாமியாடியைப் போல.. ஆர். அபிலாஷ்:  முரண்கள் அர்த்தங்களின் அசுரப்பிடியில் இருந்து நம்மை விடுவிக்கும். ஒரு சர்வாதிகாரியிடம் இருந்து தப்பிப்பது போன்றது அது. இதுவே முரண்களை முன்னெடுப்பதன் நோக்கம்! பிரகாஷ் கோவிந்தன்:   இதெல்லாம் ஒரு எழுத்தாளன் தன்னுடன் ஆடும் அந்தரங்க ஆட்டம் மட்டுமே எழுத்து என்பதாக எண்ண வைக்கிறதே ? சமூகத்துக்கும் எழுத்தாளனுக்குமான தொடர்பு என்ன ?

பைன் மரங்களை குடித்துக் கிறங்கி - பாப்லோ நெருடா

பைன் மரங்களையும் உன் நீண்ட முத்தங்களையும் அருந்தி கிறங்கி, இந்த மெல்லிய பகலின் மரணத்தை நோக்கி, ரோஜாக்களின் வேகப்பாய்மரங்களை ஒரு கோடையைப் போல் செலுத்துகிறேன், இளகாத என் கடல் பைத்தியத்தால் கட்டுண்டு. பசி நாவுகளாய் துடிக்கும் எனது கடலுடன், வெளிறி, பிணைக்கப்பட்டு, இந்த நிர்வாண காலநிலையின் புளித்த மணத்துடன் நான் விரைகிறேன், சாம்பல் வண்ண, கசப்பான ஒலிகளை இன்னும் அணிந்தபடி கைவிடப்பட்ட அலைச்சிதறலின் துயர உச்சியில்.

வெள்ளை வண்டு - பாப்லோ நெருடா

வெள்ளை வண்டே, என் ஆன்மாவில் ரீங்காரமிடுகிறாய், தேனுண்டு மயங்கி, புகையில் மெதுமெதுவாய் சுழன்று இறங்குகிறாய். நானோ நம்பிக்கைகளை தொலைத்தவன், எதிரொலிகளால் கைவிடப்பட்ட ஒரு சொல்லானவன், எல்லாவற்றையும் இழந்தவன், எல்லாவற்றையும் கொண்டிருந்தவன். என் கப்பலில் இறுதி கம்பிவடமே, உன் முனகலில் உள்ளதடி என் கடைசி நம்பிக்கை. என் பாலை நிலத்தின் இறுதி ரோஜாவே.