முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்றாவது நபர்



நான் உன்னிடம்


ஒரு எதிரியாக

முழுமையாக ஒப்புக் கொண்ட போது

உன்னிடம் பேச வார்த்தைகளே

இருக்கவில்லை


உன்னிடம் காட்ட

உணர்ச்சிகளே இல்லை

எதிரியை இவ்வளவு

நெருக்கமாய் பார்ப்பதைப் போல்

திக்குமுக்காட செய்வது

வேறொன்று இல்லை என்கிறாய்

புணர்ச்சியின் போது

சட்டென்று ஒளியின் பிம்பம் விழுவது போல்

நீ என்னை அவ்வளவு

சந்தேகமாய் பார்க்கிறாய்.

என்னிடம் பேச நினைத்தது அத்தனையும்

வேறொருவருக்கானது

என்று உணர்கிறாய்

ஒரு குழந்தையின் பழுதான பொம்மைகளைப் போல

உனது ஆயுதங்களை மறைக்கிறாய்

உனது கூர்நகங்கள் நெகிழ்ந்து

என் மயிர்க்கால்களை மிருதுவாக ஸ்பரிசிக்க

நான்

ஒரு பனிப்பிரதேசத்தை போல விரிசல் காண்கிறேன்.



பிறகு

என் கையை பிடித்துக் கொண்டு

விறுவிறுவென்று

என்னை அழைத்துச் சென்று நிறுத்துகிறாய்

துலங்கும் ஒரு கண்ணாடி முன்பு

நான் சொன்னேன்

“இந்த கண்ணாடி ஒரு குறியீடு

இந்த கண்ணாடி காட்டுவது

என்னை அல்ல

உனது பிம்பத்தை தான்”

நீ சொன்னாய்

”நான் அதைப் பார்க்க

உன்னை அழைத்து வரவில்லை”

அப்போது சட்டென்று நீ

என் கையை விடுத்து

விலகிச் செல்கிறாய்

காலதாமதித்த ஒரு பனித்திரையைப் போல.



உற்றுப் பார்க்க

அக்கண்ணாடியில் மூவர் இருப்பது

புலப்படுகிறது

நீ என்னை தனியே விட்டுப் போன

பின் இத்தனைக் காலமும்

நான் இங்கெயே தான்

நிற்கிறேன்

அந்த மூன்றாவது நபரின்

அடையாளம் தேடியபடி.

ஒருநாள் எதேச்சையாய்

நீ

கடந்து சென்ற போது கேட்டேன்

மூன்றாவது நபர் யாரென்று

கண்ணாடியை பார்ப்பவன் முதலாவது ஆள் என்றாய்

கண்ணாடியில் பார்க்கப்படுபவன் இரண்டாவது ஆள் என்றாய்

கண்ணாடியை குறியீடாய் பார்ப்பவன் மூன்றாவது ஆள்

ஒரு எதிரியை

இவ்வளவு பக்கத்தில் வந்து

அறிந்து விட்ட

உன்னை

மூன்றாவது நபரைக் கொண்டல்லாவது

வேறு எப்படி கொல்வது என்றாய்.

கருத்துகள்

அனைவருக்கும் அன்பு  இவ்வாறு கூறியுள்ளார்…
உணர்வுகளில் வெளிபாடு

அருமையாக இருக்கிறது ..........

உள்ளத்தின் ஓசை அதிர்வுகளை ஒளிகிறது

என் தளத்திலும் உண்டு கவிதைகள் ...
http://kovaimusaraladevi.blogspot.in/
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
தேசாந்திரி தொடரின் ஆரம்பத்தில் குட்டி குட்டியாக வந்த கவிதைகளை படித்தேன். நன்றாகவும் எளிமையாகவும் இருந்தன. மற்றபடி பெரிய கவிதைகளை நான் படிப்பதில்லை. கவிதை எழுதுபவர்கள் லூசு என எனக்கு ஒரு எண்ணம். அவர்களைப் பார்த்தால் எனக்கு பயம். அலர்ஜி. உங்களைச் சொல்லவில்லை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
http://www.imdb.com/title/tt1650407/

fa meg pa for faen

இப்படத்தில் அங்கங்கே ரிப்பீட்டாக ஓர் அருமையான பின்னணி இசை வருகின்றது.
Sai Ram இவ்வாறு கூறியுள்ளார்…
நான் உன்னிடம் ஒரு எதிரியாக முழுமையாக ஒப்புக் கொண்ட போது உன்னிடம் பேச வார்த்தைகளே இருக்கவில்லை
உறவுகளில் எப்போதுமே 'ஒப்பு கொள்ளுதலும்' 'பணிதலும்'இருந்தால் ஒழிய அந்த உறவு தடங்கல் இன்றி நீடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.ஆனாலும் வெளிப்படையாக/உண்மையைக் காட்டுதல் ஒரு ரிஸ்க்கான விஷயம் தான். உயிர் பிழைத்தவன் மீணடும் ஒரு சாகசத்தில் மாட்டி கொள்ளவது போல தான்.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கோவை மு சரளா
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் சாய்ராம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...