முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுத்த உலகக் கோப்பை வரை பிணம் காத்திருக்க வேண்டும்



தோனிக்கு ஸ்ரீனிவாசனுடன் உள்ள அணுக்கம், அவரது சிமிண்ட் கம்பெனியில் தோனியின் பங்கு மற்றும் சூப்பர் கிங்ஸ் தலைமை காரணமாய் இந்திய கிரிக்கெட் ஒரு எலிப்பொறியில் மாட்டி இருக்கிறது. தொடர்ந்து நான்கு வெளிநாடுகளில் நாம் படுதோல்வி அடைந்திருக்கிறோம். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் இதற்கு முன் பெரும் மாற்றங்களை கொண்டு வந்திருக்கும். எந்த அணியும் இந்தளவுக்கு தோல்விகளை பொறுக்காது. வங்கதேசம் ஆசியக்கோப்பையின் நடுவில் பாதிக்கு மேல் வீர்ர்களை மாற்றியது. ஒரு ஆட்டம் தோற்றாலே பாகிஸ்தான் வாரியம் மொத்த அணியையும் தூக்கி கடாசும். ஆனால் இந்திய அணிக்கு மட்டும் ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த உலகக்கோப்பை வரை எவ்வளவு ஆட்டங்களை நீங்கள் இழக்கலாம், நாங்கள் யாரையும் மாற்ற மாட்டோம் என்று. ஏனென்றால் இங்கே பணம் தான் முக்கியம். வென்றாலும் தோற்றாலும் பணம் குவிகிறது. பின் இருக்கவே இருக்கிறது ஐ.பி.எல். அடுத்த உலக்க் கோப்பையில் நாம் கால் இறுதியை தாண்டப் போவதில்லை (சூதாட்டக்கார்ர்கள் நினைத்தால் ஒழிய). தோற்றுத் திரும்பும் தோனிக்கு இன்னும் ஆறு மாதங்கள் வழங்கப்படும். அப்போது இங்கு மே.இ தீவுகள், நியூசிலாந்து போன்று சோனி அணிகள் அழைக்கப்பட்டு சுழலும் ஆடுதளங்களில் தோற்கடிக்கப்படுவார்கள். இதன் மூலம் தோனியின் பெயர் கொஞ்சம் காப்பாற்றப்படும். அதன் பிற்கு இந்தியா ஒரு சிரம்மான வெளிநாட்டு பயணம் போவதற்கு சில வாரங்கள் முன் தோனி ஓய்வு பெறுவார். சச்சினைப் போல அவருக்கு ஏதாவது ஒரு சப்பை அணியை இந்தியாவில் தோற்கடிக்க வைத்து அந்த தருணத்தில் பிரம்மாண்டமான farewell கொடுப்பார்கள். அதுவரை இந்த அணியின் மகாசொதப்பலான ஆட்டங்களை, அரசு ஊழியர் போன்ற நிரந்தரத்தன்மையை, தொடர் தோல்விகளை நாம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பிணத்தை நடுவீட்டில் வைத்து உறவினர் வருகைக்காக நாட்கணக்காய் காத்திருப்பது போல் உள்ளது இது. கடவுளே என்ன சோதனை இது

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
ஏனிந்த கொலைவெறி. சரி பரவாயில்லை.ஒன்றும் ஆகப்போவது இல்லை என்றாலும் ஒரு சுவராசியத்திற்காக சொல்லுங்களேன்.என்னென்ன மாற்றங்கள் செய்தால் இந்திய அணி பலமான அணியாக விளங்கும்?
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
தோனி, ஸ்ரீனிவாசன் இருவரும் நீங்க வேண்டும். கராறான ஆட்கள் வர வேண்டும். அது இப்போதைக்கு நடக்காது - பழைய அரசுருதீன் அணி போல் ஆகி விட்டது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.