தோனிக்கு ஸ்ரீனிவாசனுடன் உள்ள அணுக்கம், அவரது சிமிண்ட் கம்பெனியில்
தோனியின் பங்கு மற்றும் சூப்பர் கிங்ஸ் தலைமை காரணமாய் இந்திய கிரிக்கெட் ஒரு எலிப்பொறியில்
மாட்டி இருக்கிறது. தொடர்ந்து நான்கு வெளிநாடுகளில் நாம் படுதோல்வி
அடைந்திருக்கிறோம். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் இதற்கு முன்
பெரும் மாற்றங்களை கொண்டு வந்திருக்கும். எந்த அணியும் இந்தளவுக்கு தோல்விகளை
பொறுக்காது. வங்கதேசம் ஆசியக்கோப்பையின் நடுவில் பாதிக்கு மேல் வீர்ர்களை
மாற்றியது. ஒரு ஆட்டம் தோற்றாலே பாகிஸ்தான் வாரியம் மொத்த அணியையும் தூக்கி
கடாசும். ஆனால் இந்திய அணிக்கு மட்டும் ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த
உலகக்கோப்பை வரை எவ்வளவு ஆட்டங்களை நீங்கள் இழக்கலாம், நாங்கள் யாரையும் மாற்ற
மாட்டோம் என்று. ஏனென்றால் இங்கே பணம் தான் முக்கியம். வென்றாலும் தோற்றாலும் பணம்
குவிகிறது. பின் இருக்கவே இருக்கிறது ஐ.பி.எல். அடுத்த உலக்க் கோப்பையில் நாம்
கால் இறுதியை தாண்டப் போவதில்லை (சூதாட்டக்கார்ர்கள் நினைத்தால் ஒழிய). தோற்றுத்
திரும்பும் தோனிக்கு இன்னும் ஆறு மாதங்கள் வழங்கப்படும். அப்போது இங்கு மே.இ
தீவுகள், நியூசிலாந்து போன்று சோனி அணிகள் அழைக்கப்பட்டு சுழலும் ஆடுதளங்களில்
தோற்கடிக்கப்படுவார்கள். இதன் மூலம் தோனியின் பெயர் கொஞ்சம் காப்பாற்றப்படும்.
அதன் பிற்கு இந்தியா ஒரு சிரம்மான வெளிநாட்டு பயணம் போவதற்கு சில வாரங்கள் முன்
தோனி ஓய்வு பெறுவார். சச்சினைப் போல அவருக்கு ஏதாவது ஒரு சப்பை அணியை இந்தியாவில்
தோற்கடிக்க வைத்து அந்த தருணத்தில் பிரம்மாண்டமான farewell கொடுப்பார்கள்.
அதுவரை இந்த அணியின் மகாசொதப்பலான ஆட்டங்களை, அரசு ஊழியர் போன்ற நிரந்தரத்தன்மையை,
தொடர் தோல்விகளை நாம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பிணத்தை நடுவீட்டில்
வைத்து உறவினர் வருகைக்காக நாட்கணக்காய் காத்திருப்பது போல் உள்ளது இது. கடவுளே
என்ன சோதனை இது
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கருத்துகள்