முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாயைத் துரத்தும் முயல்


நிஷி எனு முயல் மற்றும் ஷிக்கி எனும் பூனை

முயல் நாயை துரத்துவதை பார்த்திருக்கிறீர்களா? என் வீட்டில் நடக்கிறது.
மனைவி கறிக்கடையில் வைத்திருந்த ஒரு முயல்குட்டியை இரக்கத்தினால் வீட்டிற்கு வாங்கி வந்தாள். மூன்று மாதம் வயதிருக்கும். வீட்டில் நாய் இருப்பதால் சின்னதாய் ஒரு பயம் எங்களுக்கு இருந்தது. ஆனால் முயலுக்கு இல்லை. அது வந்த அடுத்த நாளே நாயை தன் தாயாக பாவிக்க துவங்கி விட்டது.

 நாய் எங்கு போனாலும் கூடவே போகும். நக்கிக் கொடுக்கும். மூக்கை பின்புறத்தை முகரும். நாய்க்கும் அபார பொறுமை. பின்னர் ஒருமுறை நாய்க்கு பிஸ்கட் கொடுத்தேன். முயல் போய் அதன் வாயில் இருந்து பிஸ்கட்டை பறித்தது. நாய்க்கு கடும் கோபம். ஆனாலும் கடிப்பது போல் பாவனை செய்து துரத்தி விட்டது. பிறகு அது நாயை தூங்க விடாமல் செய்தது. நாய் தூங்கினால் அங்கு போய் மூக்கை நுகரும். நாய் எழுந்து வேறிடம் போகும். அங்கு போய் தொந்தரவு பண்ணும். நாலைந்து முறை தொடர்ந்து நடந்த பின் நாய் ரொம்ப எரிச்சலாகி உறும ஆரம்பித்தது. ஆனாலும் கடிக்கவில்லை. நாங்கள் தான் அதன் அவஸ்தை பொறுக்காமல் நாயைத் தூக்கி சோபாவில் தூங்க வைத்தோம்.
இந்த முயலுக்கு ரொம்ப இடம் கொடுத்து விட்டோம் என நாய்க்கு புரிந்து விட்டது. இப்போதெல்லாம் முன்பு போல் அது முயலிடம் குழைவதில்லை. கௌரவமாகத் தான் இருக்கிறது. முயலோ விடுவதில்லை. நாயின் கால்களுக்கிடையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறது.
நான் காலை எழுந்ததும் நாய் என்னை வரவேற்கும் விதமாக தன் கீக்கீ பொம்மையை எடுத்து வாயால் அழுத்தி ஆரவாரமாய் சத்தம் எழுப்பும். இன்று நாய் அப்படி செய்து முடித்ததும் முயல் வெளியே வந்து பார்த்தது. பிறகு ஓடிப் போய் கீக்கீ பொம்மை பக்கமாய் நின்று என்ன செய்வது என முழித்தது. நாய் தன் சாப்பாட்டு பக்கமாய் பூனைகள் போனால் அப்படி ஆவேசம் வந்தது போல் துரத்தும். ஆனால் முயலோ அசட்டையாய் நாய் சாப்பாட்டை உட்கார்ந்து மெல்லுகிறது. நாயும் போகட்டும் போ என அமைதியாய் பார்க்கிறது.
ஏற்கனவே இரண்டு பூனைகள் உண்டு. அவை முயலை ஜாதிபிரஷ்டம் செய்து விட்டன. பக்கத்தில் போனால் சீறுகின்றன. இதைப் பார்த்தால் வேறு அறைக்குள் சென்று விடுகின்றன. இதனால் முயலும் நாயைத் தான் எல்லாவற்றுக்கும் நம்பி இருக்கிறது. நாய் நடக்கும் போது கூடவே சென்று ஏதோ புற்தரையில் இரை தேடுவது போல் அது நடப்பது காண தாய்க்கோழியுடன் நடக்கும் கோழிக்குஞ்சைப் போல் உள்ளது.
நாய் முயலை வேட்டையாடும் என யார் சொன்னது? இருக்கிற இடம் பொறுத்து தலைகீழாகவும் ஆகும்.

கருத்துகள்

சர்வோத்தமன் சடகோபன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஜீனோ, இரண்டு பூனைகள் மற்றும் ஒரு முயல் வாழும் வீட்டில் அபிலாஷூம் அவரது துணைவியாரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...