முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோனியுடன் ஒரு உரையாடல்


நிருபர்: இந்த தோல்வியை பத்தி என்ன நினைக்கிறீங்க?

தோனி: நான் கேப்டன் ஆனதில இருந்து எத்தனையோ தோல்விகள் பார்த்திட்டேன். அதனால புதுசா ஒண்ணும் நெனக்கல

நிருபர்: ஆனாலும் ரொம்ப கேவலமா தோத்திட்டீங்க. உங்களுக்கு அசிங்கமா இல்லியா?

தோனி: நான் உலகப் பணக்காரர்களில் ஒருத்தன். எங்க அணியில் ஒவ்வொருத்தரும் கோடிஸ்வரர்கள். அவங்களும் சீக்கிரம் உலகப் பணக்காரர்கள் ஆகிடுவாங்க. நாங்க ஏன் அசிங்கப்படணும்? நீங்க இந்த கேள்வியை டாட்டா பிர்லாவை நோக்கி கேட்பீங்களா?


நிருபர்: இந்த மேட்சில இஷாந்த் ஆடாதது தான் தோல்விக்கு காரணமா?
தோனி: ஆக்சுவலி அவர் ஆடினா எங்களுக்கு அனுகூலம். அவரை எல்லாரும் திட்டுவாங்க. இப்போ அவர் இல்லாததினால நாங்க எல்லாரும் திட்டு வாங்குறோம்

நிருபர்: நீங்க வெறும் மூணு பவுலர்ஸோட போனீங்க. ஆனா பவுலிங் வீக் ஏரியான்னா அதிகமான பவுலர்ஸ் தானே அணியில் எடுக்கணும்?

தோனி: அப்பிடீன்னா 8 பவுலர்ஸோட ஆட்டடுமா?

நிருபர்: அப்போ பேட்டிங்கை பலப்படுத்த நீங்க 11 பேட்ஸ்மெனோட ஆடுவீங்களா?

தோனி: நான் தான் குண்டக்காமண்டக்கான்னு பதில் சொல்லுவேன். நீங்க அப்பிடி கேள்வி கேட்கக் கூடாது. BCCI  விதிமுறைகளில் அப்பிடி இருக்கு.

நிருபர்: ரோஹித் ஷர்மா பத்தி சொல்லுங்க. அவர் ஏன் இப்பிடி கேனத்தனமா அவுட் ஆகுறாரு? நீங்க ஏன் அவரை விடாப்பிடியா சப்போர்ட் பண்றீங்க?

தோனி: ரோஹித் ரொம்ப நல்லா ஆடுனாரு. ஆனா அவுட் ஆகிட்டாரு.
நிருபர்: அதெப்டீங்க முடியும்? மோசமா ஆடுனா தானே அவுட் ஆவாங்க?

தோனி: ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் டெட்னு கேள்விப்பட்டதில்லையா அது மாதிரி

நிருபர்: இந்த மேட்சில இந்தியாவுக்கு சாதகமான அம்சம்னு, அதாவது நாம இன்னின்ன விசயங்களில நல்லா பண்ணி இருக்குமோன்னு எதை சொல்லுவீங்க?

தோனி: குக், பேலன்ஸ் ரெண்டு பேரும் பிரமாதமா பேட்டிங்க பண்ணுனாங்க. ஆண்டர்ஸன் வழக்கம் போல கலக்கிட்டாரு, அந்த மோயின் அலி குட்டிப்பையன் ரொம்ப அட்டகாசமா பவுலிங் போட்டு ஆறு விக்கெட் எடுத்தான். மொத்தத்தில நாம் ரொம்ப திருப்தியா இருக்கேன்.

நீருபர்: இவங்க எல்லாம் இங்கிலாந்து வீரர்கள்!

தோனி: கிரிக்கெட்டில எல்லாருமே ஒண்ணு தான். அவங்க ஒரு மோசமான பால் போட்டா தான் தான் நான் நாலு ரன் அடிக்க முடியும். அது மாதிரி நான் ஒரு கேட்ச் பிடிச்சா தான் அவுங்க அவுட்டாக முடியும். அதனால எல்லாருடைய சாதனைகளிலும் நமக்கு பங்கு இருக்கு. இப்பிடி பிரிச்சு பாக்காதீங்க. அது நல்லா இல்ல சொல்லீட்டேன்.

நிருபர்: சரி கடைசியா சொல்லுங்க. நீங்க ஏன் தோத்தீங்க?

தோனி: நாங்க எங்க தோத்தோம்? நாங்களும் நல்லா ஆடுனோம். இங்கிலாந்தும் நல்லா ஆடுனாங்க. இங்கிலாந்து ஜெயிச்சாலும் நாங்க ஜெயிச்சாலும் ஒண்ணு தான். என்னோட CSK அணிகிட்ட நான் அடிக்கடி ஒரு பழமொழி தமிழ்ல சொல்லுவேன். யாதும் ஊரே யாவரும் கேளிர். அப்புறம் இன்னொண்ணு கூட சொல்லுவேன். அது ஸ்ரீனி மாமாக்கு ரொம்ப பிடிக்கும்.

நிருபர்: என்னது?


தோனி: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் போடு!

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
//சரி கடைசியா சொல்லுங்க. நீங்க ஏன் தோத்தீங்க?//
போன டெஸ்டுல அவங்க தோத்தாங்க.அவங்களுக்கு மட்டும் என்ன ரெண்டு கொம்பா மொளச்சிருக்கு?.அவங்களால தோக்க முடிஞ்சா எங்களால தோக்க முடியாதா?.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...