முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொஞ்சமே கொஞ்சம் தாமதமாக!

இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்ட் ஆட்ட்த்தின் முதல் நாளான இன்று எல்லா மட்டையாளர்களை விடவும் எட்டாவதாக களமிறங்கிய அஷ்வின் தான் மிக சுலபமாக பந்து வீச்சை எதிர்கொண்டு நாற்பது சொச்சம் அடித்தார். அவர் ஆட்டத்தில் ஒரு ஸ்டைல், லாவகம், சிரமமின்மை தெரிந்தது. அதற்கு முக்கிய காரணம் அஷ்வின் அரை நொடி தாமதமாக பந்தை அடிப்பது.

மட்டையாட்டத்தின் அடிப்படை நுட்பம் பந்து விழும் அரைநொடி முன் தயாராவது, அதே பந்தை சற்றே, மிக சற்றே தாமதமாக அடிப்பது. ஸ்விங் ஆகும் பந்தை ஆட இது தான் சிறந்த முறை. அஷ்வினைப் பார்க்கையில் இதே போல் மணிக்கட்டு வளைத்து அசருதீன் ஆடுவது நினைவு வருகிறது. எவ்வளவு சிரமமான ஆடுதளத்திலும் அசரூதீன் சுணங்காமல் சரளமாக ஆடுவார். பவுன்ஸ் மட்டுமே அவரது ஒரே பிரச்சனை. மற்றபடி பந்தை தாமதமாக மீட் பண்ணி டைமிங்குடன் ஆடுவதில் கில்லாடி.

இன்று பிற மட்டையாளர்கள் பந்தை ஒன்று வேகமாய் அல்லது ரொம்ப தாமதமாய் மீட் பண்ணினார்கள். இங்கிலாந்து மட்டையாளர்களும் அஷ்வினை போல் 0.5 நொடி தாமதமாக தான் பந்தை தொடுகிறார்கள். அதனால் தான் அவர்கள் நம் வீரர்களைப் போல் மட்டையாடுகையில் பதறுவதில்லை. 

இந்தியாவில் சுழல் பந்தை இது போல் நம் வீரர்கள் சற்றே தாமதித்து மீட் செய்து ஆடுவார்கள். வெளிநாட்டு வீரர்கள் அவசரமாய் அடித்து சுழலையும் பவுன்ஸையும் சமாளிக்க முடியாமல் அவுட் ஆவார்கள். சுழலையும் சிறப்பாய் ஆடும் சூட்சுமமும் இப்படி மிக மிக கொஞ்சமாய் தாமதித்து பந்தை அடிப்பது தான். T20 ஆட்டம் இந்த கலைநுட்பத்தை நம் வீரர்களிடம் இருந்து பறித்து விட்டது. பந்து விழும் முன்னே அதை சந்திக்கும் ஒரு வேகத்துடன் நம் மட்டையாளர்கள் முன்னேறுகிறார்கள். தடுத்தாடும் போதும் இந்த ஒரு வேகமும் முனைப்பும் உள்ளது. இது தட்டையான ஆடுதளத்தில் ஐம்பது அல்லது 20 ஓவர் ஆட்டங்களில் பவுண்டரி ஷாட்கள் ஆட உதவும். ஆனால் இதுவே பந்து ஸ்விங் ஆகும் போது கடைசி கட்டத்தில் ஷாட்டை மாற்ற அவர்களை அனுமதிக்காது.

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
அரை நொடி என்ன மாற்றமெல்லாம் செய்கிறது?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...