முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எப்படி வாசிப்பது? (2)



5)   வாசிப்பு ஒரு பழக்கம். உடற்பயிற்சி போல. தினமும் குறிப்பிட்ட மணிநேரங்கள் படித்தால் சிரமம் தெரியாமல் படிக்க முடியும். ஆனால் அப்பழக்கம் விட்டுப் போனால் திரும்ப உட்கார்ந்து படிக்க முடியாது. கவனம் சிதறும். ஒரு நாளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசிப்புக்கென ஒதுக்குங்கள். அப்போது மட்டும் படியுங்கள். அப்போது படிப்பதை மட்டும் செய்யுங்கள்.

6)   வாசிப்புக்கு தனிமை அவசியம். அதாவது தனித்திருப்பதல்ல. (ரெண்டும் வேறுவேறு) தொடர்ந்து யாரிடமாவது உரையாட வேண்டும் என மனம் தவித்தால் வாசிப்பு தடைபட்டுப் போகும். பேஸ்புக்கில் தீவிரமாய் இருப்பவர்கள் தம்மால் புத்தகம் வாசிக்க இயலவில்லை என வருந்துகிறார்கள். இதற்காகவே பேஸ்புக்கை விட்டு வனவாசம் செல்கிறார்கள். திரும்ப வந்து தாம் வனவாசத்தின் போது இவ்வளவு நூல்களைப் படித்தோம் என கூறுகிறார்கள். நான் நீண்ட காலமாய் பேஸ்புக்கில் இருக்கிறேன். இதுவரை அது எனக்கு தொந்தரவாக இருந்ததில்லை. ஏனெனில் உறவுகளை உருவாக்கி தொடர, யாரிடமாவது அரட்டை அடிக்க நான் அதை பயன்படுத்துவதில்லை. பேஸ்புக்கை நான் ஒரு செய்தித்தாளை போல் பயன்படுத்துகிறேன். சமூக வலைதளமாக அல்ல. என்னால் இப்போதும் மணிக்கணக்காய் தனியாய் இருக்க முடியும். (என்னைச் சுற்றி மனிதர்களும் வேண்டும்.) இத்தனிமையை நான் ரசிக்கிறேன். இதை மேலும் ரசிக்க நான் புத்தக வாசிப்பை பயன்படுத்துகிறேன். பேசிக் கொண்டே இருப்பவர் வாசிக்க முடியாது. மனம் முதலில் ஓய வேண்டும். அதற்கு வாய் ஓய வேண்டும்.
7)    வாசிக்க வாசிக்க நமக்கென ஒரு ரசனை, தேர்வு, ஆர்வம், ஒருவித பட்டியல் உருவாகும். நமக்கென பிரியப்பட்ட எழுத்தாளர்கள் தோன்றுவார்கள். இப்போது நீங்கள் உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டும். புதுப்பிக்க வேண்டும். (அல்லாவிட்டால் வாசிப்பு தட்டையாகி விடும்.) உங்களுக்கு உவப்பிராது என நம்பும் ஒரு துறையில் இருந்து ஒரு நூலை வாங்கி படியுங்கள். நீங்கள் ஒரு இடதுசாரியா? அமெரிக்க ஏகாதிபத்யத்தை நியாயப்படுத்தும் ஒரு நூலை புரட்டிப் பாருங்கள். தத்துவம், இலக்கியம், கலைக்கோட்பாடுகள் மட்டும் படிக்கிறவரா? தோட்டக்கலை, சோதிடம், உடற்பயிற்சி, புவியியல், அறிவியல் நூல்களை தேடி படியுங்கள். ஆரம்பத்தில் கடுப்படித்தாலும் இந்நூல்களில் ஒன்று உங்களுக்கு சட்டென அபாரமான ஒரு மனவிரிவைத் தரும்.
8)   வாசிப்பு நம் அறிவு, நம்பிக்கைகள், நுண்ணுர்வு ஆகியவை ஏற்படுத்தின சட்டகங்களை நொறுக்குவதற்கான ஒரு காரியம். இவை உடையும் போது மனம் விரியும். அப்போது பரவசம் கிடைக்கும். இதுவே வாசிப்பின் இன்பம். ஒரு உதாரணம் தருகிறேன். இரண்டு வகையான பெண்ணிய எழுத்து உண்டு. ஒன்றில், பெண்கள் முழுக்க நல்லவர்களாகவும் ஆண்கள் ஒடுக்குமுறையில் ஈடுபடும் கொடூரர்களாகவும் இருப்பார்கள். அல்லது இப்பெண்களுக்கு உதவும் நல்லவர்களாகவும் சில சமயம் இருப்பார்கள். இந்த இருமை கொண்ட பெண் எழுத்து அம்பையுடையது. இதைப் படிக்கையில் ஒரு ஆரம்பநிலை பெண்ணியவாதி புளகாங்கிதம் அடையலாம். ஆனால் நம் கருத்தை இன்னொருவர் ஆமோதிக்கிறார் என்பதில் உள்ள ஒரு குழு அங்கீகார குதூகலிப்பு மட்டுமே இது. இன்னொரு வகையான பெண்ணிய எழுத்தில் பெண்ணுக்குள் இருக்கும் முரண்களும் பேசப்படும். சில்வியா பிளாத்தின் “தி பெல் ஜார்” (The Bell Jar) நாவலை சொல்லலாம். தன் உடல் மீது ஆணாதிக்க சமூகமும் குடும்பமும் செலுத்தும் அடக்குமுறையை இந்நாவலின் நாயகி எஸ்தர் கிரீன்வுட் சாடுகிறாள்; தன் தாய் அத்தகைய ஒரு அடக்குமுறையை தன் மீது ஏவுவதை அவள் எதிர்க்கிறாள். ஆனால் அதேவேளை உடலை சுதந்திரமாய் வெளிப்படுத்தி பார்ட்டி கொண்டாட்டம் என மகிழ்ச்சியாய் இருக்கும் மேற்தட்டு பெண்கள் மீது கடும் குரோதத்தையும் அவள் வெளிப்படுத்துகிறாள். அதாவது, எஸ்தர் தன் தாயிடம் இருந்து தப்பித்துச் செல்லும் அதே வேளை உள்ளுக்குள் தன் தாயாகவும் இருக்கிறாள். மனித மனம் எப்படி முரண்பாடுகளின் முடிச்சாக இருக்கிறது என்பதை சில்வியா பிளாத் தன் கவிதைகளில் தொடர்ந்து பேசுவதை இந்நாவலில் இன்னும் உக்கிரமாய் செய்கிறார். ஒரு பெண்ணியவாதிக்கு இந்நாவல் ஏற்படுத்தும் அதிர்ச்சிகளும் குழப்பங்களும் முக்கியமானவை. அம்பை இதை செய்ய மாட்டார். அம்பை உங்கள் பெண்ணிய கழுத்துக்கு மசாஜ் செய்வார். சில்வியா பிளாத் உங்கள் பெண்ணிய கழுத்தைப் பற்றி சடேரென உங்களை வாகனங்கள் விரையும் சாலை நடுவே தள்ளி விடுவார்.
நீங்கள் வாசிப்பது ஒரு நல்ல நூலா இல்லையா என அறிய ஒரே வழி தான்: அது உங்கள் கழுத்தை மசாஜ் செய்தால் நல்ல நூல் இல்லை; கழுத்தை உடைத்தால் மிக நல்ல நூல்.

அவ்வளவு தான்! இனி வாசியுங்கள்.


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை தான் சார் சில சமயம் ராஜேஷ்குமார் நாவல் கூட மன சோர்வை நீக்குகிறது
G. கோபி இவ்வாறு கூறியுள்ளார்…
தினமும் படிப்பது சுறுசுறுப்பான செயல். ஆனால் பணிச்சுமை காரணமாக உறக்கம் அதிகமாக தேவை என்பதால் திட்டமிட்டு தான் வாசிக்கிறேன். நாவல் போன்ற புத்தகங்களை விடுமுறையில் மட்டும்தான். சிறுகதை கட்டுரை போன்றவற்றை தினமும் நேரம் ஒதுக்கி வாசிக்கிறேன். வாசிப்பு பற்றி திட்டமிடலும் தேர்வும்தான் அவசியம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...