முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (2)


 Image result for நகுலன்
Image result for மனுஷ்ய புத்திரன்

ஹைக்கூவின் தத்துவம்
ஹைக்கூ இவ்வாறு ஜப்பானுக்கும் ஜென் பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டோருக்கும் மட்டுமே உரித்தானதாய் இருப்பது அதை ஐரோப்பிய கவிதைப் பரப்பில் இருந்து துண்டு பட வைத்தது. நமது தமிழ் நவீன கவிதை ஐரோப்பிய நவீன கவிதையின் ஒன்று விட்ட தம்பியாக இருப்பதனால் அதற்கு ஜென் பௌத்த சாயலோ ஹைக்கூவின் தொடர்போ பெரிதாய் இல்லை. யுவன், மனுஷ்யபுத்திரன், தேவதச்சன் ஆகியோர் ஜென் தாக்கம் கொண்ட நவீன கவிதை எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஹைக்கூ கோரும் மனநிலையில் இருந்து இக்கவிதைகளின் மனநிலை மாறுபட்டது. அது என்ன வித்தியாசம்?

ஹைக்கூவுக்கும் நவீன கவிதைக்குமான வித்தியாசம்

நவீன கவிதை ஒரு தனித்த பார்வையை, சிந்தனையை, ஒருவித திறப்பை நோக்கி வாசகனை செலுத்துவது. உதாரணமாய், நகுலனின் இந்த பிரசித்தமான குறுங்கவிதையை பாருங்கள்:
ராமசந்திரா என்று கேட்டேன்
ராமசந்திரன் என்றார்
எந்த ராமசந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை
ஒரு பெயரை ஒருவரது பெயராக சுலபத்தில் எடுத்துக் கொள்வதன் அபத்தத்தை பகடி செய்கிறது இக்கவிதை. இது முழுக்க சிந்தனையின் தளத்தில் நிகழ்கிறது. ஆனால் அன்றாட சிந்தனையை கடந்த ஒரு தனித்த பார்வையும் இது அளிக்கிறது.
அடுத்து மனுஷ்யபுத்திரனின் சிறு கவிதை ஒன்று.

சிவப்புப் பாவாடை

சிவப்புப்பாவாடை
வேண்டுமெனச்சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலைக் கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி

இதுவும் மொழியின் அபத்தம் பற்றின கவிதையே. சிவப்பு எனும் நிறத்தைக் காட்ட அவள் ஏன் குறிப்பாய் தொண்டையை அறுப்பதாய் நடிக்க வேண்டும்? ஆனால் அப்படி நிகழ்கிறது அங்கு பெருகும் பாவனை ரத்தம் அன்றாட வாழ்வில் வன்முறை எவ்வளவு சாதாரணமான யாரையும் உறுத்தாத ஒன்றாய் வெளிப்பட்டு மறைகிறது என்பதைக் காட்டுகிறது. குறிப்பாய், அது எப்படி நம் மொழியில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, அதை இயல்பாய் நாம் எடுத்துக் கொள்வதில் எவ்வளவு அபத்தம் உள்ளது என இக்கவிதை பேசுகிறது. நகுலனின் கவிதை போல இக்கவிதை சிந்தனை வடிவிலானது அல்ல; காட்சிபூர்வமானது; ஆனாலும் இதுவும் நம் சிந்தனையை தூண்டுகிறது. இது நவீன கவிதையின் ஒரு மாறாத சுபாவம்: ஜராசந்தனைப் போல அதை எப்படித் தான் பிய்த்துப் போட்டாலும் அது நம் சிந்தனையை தூண்டியபடி இருக்கும்.


கருத்துகள்

Nagendra Bharathi இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...