முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“தவமாய் தவமிருந்து”


Related image

“தவமாய் தவமிருந்து” பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றரை மணி நேரப் படம். சோகத்தையும் செண்டிமெண்டையும் பிழிகிறார்கள். சண்டைக்காட்சி, நகைச்சுவை போன்ற திணிப்புகளோ வில்லனோ நாயகனுக்கான நேரடி சவால்களோ இல்லை. ஆனால் நேரம் போவதே தெரியாமல் பார்க்க வைக்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் சாமர்த்தியமான திரைக்கதை - பத்து நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு சிக்கல் வருகிறது – அதற்கான தீர்வு, அத்தீர்வு பயனளிக்கிறதா, இல்லையென்றால் வேறு என்ன தீர்வுகள் உண்டு என கதை நகர்கிறது.

 துவக்க காட்சிகள் ஒன்றில் ராஜ்கிரண் தன் பிள்ளைகளுக்கு தீபாவளி புதுத்துணி, பட்டாசு வாங்க வேண்டும். பணமில்லை. அப்போது ஒரு அரசியல் தலைவரின் வருகையை ஒட்டி போஸ்டர் ஆர்டர் வருகிறது. ராஜ்கிரண் அதை எடுத்து மும்முரமாய் செய்து முடிக்கிறார். இரவில் அதை ஒப்படைத்து பணம் வாங்க நினைக்கும் போது தலைவர் வரவில்லை, அதனால் போஸ்டர்கள் வேண்டாம் என மறுக்கிறார்கள். “இல்லை இந்த பணத்தை நம்பித் தான் இருக்கிறேன். தயவு செஞ்சு வாங்கிக்கிங்க” என கெஞ்சுகிறார். மறுதரப்பு மறுத்து போனை துண்டிக்கிறது. ராஜ்கிரண் தளர்ந்து போய் நாற்காலியில் சாய்கிறார். அப்போது நமக்கும் சேர்ந்து மனம் பதறுகிறது. எப்படியாவது அவருக்கு பணம் கிடைத்திடாதா என ஏங்குகிறோம். அடுத்து, ராஜ்கிரண் தன் பிரஸ் வேலையாளிடம் தன்னிடம் உள்ள சொற்ப பணத்தைக் கொடுத்து பண்டிகை கொண்டாட சொல்கிறார். ஆனால் அவரோ முதலாளியின் நெருக்கடியை உணர்ந்து பணத்தை திரும்பத் தருகிறார். ஆனால் இப்போது பிரச்சனை தீரவில்லை. இன்னும் பணம் வேண்டுமே! தெரிந்தவரிடம் போய் கடன் கேட்கிறார். “தீபாவளின்னா எல்லாருக்கும் செலவிருக்கும்ணே! இப்போ போய் கேட்கிறீங்களே” என்று மறுக்கிறார்கள். அப்போது ஒரு போன் அழைப்பு வருகிறது. போஸ்டர் ஒட்ட ஆள் வேண்டும். கூலி ஆயிரம் ரூபாய். அவர் சென்று வேலையாளை அழைத்து வந்து அந்த ஆர்டரை எடுத்துக் கொண்டு இரவெல்லாம் உழைத்து பணத்தைப் பெற்று புதுத் துணி எடுத்து, பட்டாசு வாங்கி வீட்டுக்குப் போய் பகலெல்லாம் அலுப்பு தீர படுத்துறங்குகிறார்.
இந்த காட்சித் தொடர் (sequence) நெகிழ்வாகவும் வேகமாகவும் போகிறது. ஒரு பிரச்சனை எழுந்து அதற்கு தீர்வு கிடைத்து விடும் போது பார்வையாளர்களும் சுலபத்தில் பாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார்கள்.
மற்றொரு அருமையான காட்சி பத்மபிரியா பிரசவமாகி ஆஸ்பத்திரியில் இருக்க, கட்டணம் செலுத்த பணமின்றி சேரன் அலைய, அவரது ராஜ்கிரண் வந்து பணம் செலுத்திப் போவது. ராஜ்கிரணுக்கு தன் மகனுக்கு திருமணமானது, குழந்தை பிறந்துள்ளது அதுவரை தெரியாது. ஆகையால் அவர் வந்து உதவும் சாத்தியம் உள்ளதாகவே நாம் எண்ண மாட்டோம். ஆனால் ராஜ்கிரண் உதவுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்து அழகான எதிர்பாரா திருப்பத்தை சேரன் தந்திருப்பார்.
இப்படி, காட்சிக்குக் காட்சி நம்மை வருந்திக் கலங்க வைத்து உடனே நிம்மதியாக பெருமூச்சு விடவும் வைக்கிறார்கள். “குக்கூ” போன்ற படங்களில் வருவது போல இதில் யாரும் தொடர்ந்து துன்பம் மட்டும் படுவதில்லை. அப்படி வந்தால் படம் இழுவையாகும். துன்பத்துக்கு அடுத்தபடியாய் அதில் இருந்து தற்காலிக விடுதலை. அதை அடுத்து இன்னொரு பிரச்சனை. இதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் எனும் கேள்வி…. இந்த பாணி காட்சி அமைப்பில் பாக்யராஜ் தான் உஸ்தாத். பாக்யராஜின் ஒரு படத்தில் அவர் வாழ்க்கை வெறுத்துப் போய் தற்கொலை பண்ணுவதற்காய் மலை மீது ஏறுவார். உண்மையிலேயே குதித்து விடுவாரோ என பார்வையாளர்கள் கையை பிசைவார்கள். மலை உச்சியை அடைந்து விடுவார். அடுத்த அடியை எடுத்து வைத்தால் பள்ளத்துக்கு போகாமல் நேராக ஒரு மேட்டுக்கு சென்று விடுவார். அந்த மலையின் அமைப்பு அப்படி. ஒரு துன்பியல் காட்சி சட்டென நகைச்சுவையாகி விடும். அதுவும் பாக்யராஜின் உடல்மொழிக்கு இது அசத்தலாக பொருந்தி விடும்.
காட்சி அமைப்பில் சேரனும் பாக்ய்ராஜுக்கு அடுத்தபடியாய் ஒரு சின்ன உஸ்தாத் தான்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I think the admin of this web site is truly working hard for
his website, as here every stuff is quality based stuff.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...