முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோமதி மாரிமுத்து சர்ச்சை: இரண்டு தேசியவாதங்களின் மோதல் (2)

Image result for pt usha and other athletesImage result for indian army
ஜார்ஜ் ஆர்வல் சொன்னது போல விளையாட்டு என்பது ஒரு தேசியவாத பெருமித குறியீடு. பெருமாள் முருகனின் நாவல்கள் இன்று உலகம் முழுக்க படிக்கப்படுகின்றன. ஆனால் யாரும் அவரது எழுத்தை தேச பிரதிநுத்துவமாய் பார்க்க மாட்டார்கள். ஆனால் விளையாட்டு வீரன் தனது விருப்பத்துக்காக, பெருமைக்காக ஆடி சாதித்தால் அது தேசத்தின் சாதனையாய் பார்க்கப்படும். ஏன் என்பதை ஆர்வல் விளக்குகிறார். 

முந்தைய காலத்தில் ஒரு தேசத்தை பிரநித்துவபடுத்தியது அதன் ராணுவம். ஆனால் ஜனநாயக யுகத்தில், இரண்டு உலகப்போர்களுக்குப் பிறகு, நிலைமையே வேறு. ஓர் அளவுக்கு மேலாக நீங்கள் ராணுவத்தை முன்னிறுத்த முடியாது. ஆக இரண்டு தேசங்கள் குறியீட்டு ரீதியாய் மோதி தமது முன்னிலையை சித்தரிக்க விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பெரிய ஆட்ட அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டு அங்கு மக்கள் குழுமி தங்கள் தேசத்துக்காக கூவி கூச்சலிட்டு ஆதரவு தெரிவிக்க வசதிகள் பண்ணப்படுகின்றன. இப்படித் தான் ஜனநாயக நாடுகளில் தேசியம் கட்ட்டமைக்கப்படுகிறது. ராணுவத்துக்கு அடுத்தபடியாய் விளையாட்டு வீரர்கள் அரசின் ஏஜெண்டுகளாய் காணப்படுகிறார்கள். ஆகையால் சர்வதேச அரங்கில் ஆடப்படும் ஒரு விளையாட்டில் பங்கேற்கும் ஒருவர் புறக்கணிக்கப்படுகிறார் எனும் வாதமே அபத்தமானது. அவர்கள் சற்று குறைவாக பாதுகாக்கப்படலாம், ஆனால் அரசு ஒருபோதும் தன் ஏஜெண்டுகளை முழுக்க கைவிடாது. புதுமைப்பித்தனை அரசாங்கம் சாக விட்டது போல பி.டி உஷாவையோ கர்ணம் மல்லேஸ்வரியையோ சாக விடாது. அரசு மட்டுமல்ல நாமும் கூட நமது தேசியவாத உணர்வின் வடிகாலாகத் தான் விளையாட்டு வீரர்களைக் காண்கிறோம். இந்தியா கோமதியை கண்டுகொள்ளவில்லை என்று சொல்லும் போதே ஒருவித எதிர் உணர்வின் வழி நாம் முன்னெடுப்பது நமக்கான ஒருவித தேசியவாதத்தையே.
 இதை ஏன் சொல்கிறேன் என்றால், அசோகமித்திரன் அனுபவித்த பசிக்கொடுமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்றாவது ஊடகத்தில் இந்தளவுக்கு சர்ச்சிக்கப்பட்டதுண்டா? அவரைப் போன்ற கலைஞர்கள் இதே தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்காகத் தானே தம்மை தாரை வார்த்திருக்கிறார்கள்? ஆனால் ராணுவத்தின் பதிலியாக விளையாட்டை பார்ப்பது போல நம்மால் கலையை பார்க்க முடியாது. ஏனென்றால் கலை என்றுமே அதிகாரத்துக்கு, தேசியவாத இறுமாப்புக்கு எதிரானது. கலை கலகம் செய்யும். விளையாட்டு வீரர் யாருக்கு எதிராகவும் கலகம் பண்ண மாட்டார். விராத் கோலியோ சச்சினோ பி.வி சிந்துவோ ஒருநாளும் மோடியையோ இந்துத்துவாவையோ விமர்சிக்க மாட்டார்கள். கோமதியும் பண்ண மாட்டார்.  
கடைசியில் கோமதிக்கு செருப்பு வாங்கித் தரவில்லையே என்ற அத்தனை ஒப்பாரிகளுக்கும் பொருள் இதுவே –சச்சின், கோலி, மல்லேஸ்வரி, சிந்து, சானியா, பி.டி உஷா, மேரி கோம் என ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தேசிய பிரதிநிதி உள்ளது போல தமிழகத்துக்கு இதுவரை இல்லை, இப்போது ஒருவர் வந்து விட்டார், அவரை விட்டு விட மாட்டோம். மத்தியின் வடக்கை ஒட்டிய அரசியலுக்கு எதிரான ஒரு தமிழ் தேசியவாதமாய் இக்கதையாடல் ஆரம்பத்தில் தோன்றினாலும் அடிப்படையில் “எங்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள்” எனும் இறைஞ்சலாகவே இது படுகிறது.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த பதிவை ஒரு எழுத்தாளர் தனக்கு ஏன் இவைகள் கிடைக்கவில்லை தனது துறையை ஏன் இவ்வளவு பேர் கவனிக்கவில்லை என்பதன் வெளிப்பாடு. இந்த நாட்டில் கையால் மலம் அள்ளும் முறை இன்றும் உள்ளது, அவர்களுடன் ஏன் யாரும் தங்களை ஒப்பிடுவதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...