முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ.பி.எல் அலசல் பேஸ்புக் மற்றும் யுடியூப் நேரலையில்

ஆர்.அபிலாஷின் கிரிக்கெட் தொடர்பான எழுத்துக்களால்தான் ஆரம்பத்தில் அவரிடம் ஈர்க்கப்பட்டேன். மிகச்சிறந்த படைப்பூக்கமுள்ள நடையில் அவர் கிரிக்கெட் பற்றி ஆழமான பார்வைகளை தொடர்ந்து எழுதிவந்திருக்கிறார். அவரது கிரிக்கெட் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றும்உயிர்மையில் வந்திருக்கிறது. ஐ.பி.எல் பந்தயங்கள் இன்று தொடங்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் மேட்ச் முடிந்ததும் அன்றைய பந்தயம் பற்றிய அபிலாசின்  அலசலை உயிர்மை டிவியில் நேரலையாக வழங்குவது என்று முடிவு செய்தோம். அவரும் உற்சாகத்துடன் இணங்கியிருக்கிறார். இன்று மாலை 5 மணிக்கு  இந்த தொடர் நேரலை குறித்த ஒரு முன்னோட்ட உரையாடலை அவருடன் மேற்கொள்ளவிருக்கிறேன். 

தினமும் இந்த நேரலைகளை உயிர்மை டிவி மற்றும் உயிர்மை மீடியா முக நூல் பக்கங்களிலும் எனது முக நூல் பக்கத்திலும் நேரலையாகக் காணலாம்

- மனுஷ்ய புத்திரன்

https://www.facebook.com/uyirmmaimedia/
https://www.youtube.com/UyirmmaiTV/
https://www.facebook.com/manushya.puthiran/

கருத்துகள்