முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஷிக்கர் தவனின் அணித்தலைமை - மிக்கி மௌஸ்


அணித்தலைவராக தன் முதல் ஆட்டத்தில் ஷிக்கர் தவனின் தலைமை, செயல்பாடு எப்படி?


அகல விளிம்பு தொப்பியை மாட்டிக் கொண்டு ஜாலியாக சிரித்தபடி தோன்றினார். களத்தடுப்பாளர்கள் மெத்தனம் காட்டினாலோ, கவனம் சிதறினாலோ துள்ளிக்குதித்து கைகளை உதறி தன் கோபத்தைக் காட்டவில்லை. “மிக்கி மௌஸ்” கோலி தொடரில் டொனால்ட் டக்கைப் போல என்றால் தவன் மிக்கி மௌஸைப் போல.  



தவனின் களத்தடுப்பு அமைப்பைப் பொறுத்தமட்டில் சற்று எதிர்மறையாக இருந்தது என வர்ணனையாளர்கள் அபிப்ராயப்பட்டனர். எனக்கு முந்தைய தோனி ஸ்டைல் கள அமைப்புகளை நினைவுபடுத்தியது. ஒருநாள் ஆட்டத்தில் குறைவான ரிஸ்க் எடுத்து பந்து வீசுவதே உகந்தது, மட்டையாட்டத்தினால் தான் ஒருநாள் போட்டிகளை வெல்ல முடியும் என தவன் நம்புகிறார். ஒருவேளை தோனிக்கு அடுத்ததாக கோலிக்குப் பதிலாக தவன் தலைவராக தேர்வாகி இருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.


தவனுக்கு அளிக்கப்பட்ட முக்கிய கடமை எப்படியாவது குல்தீப், சஹலை திரும்ப நல்ல ஆட்டநிலைக்கு கொண்டு வருவது, ஹர்த்திக்கை முடிந்த அளவுக்கு வீச வைப்பது - இரண்டையும் முயன்றார். சாஹல் விக்கெட் எடுப்பதற்காக முழு பத்து ஓவர்களும் கொடுத்தார். குல்தீப் 2 விக்கெட்டுகள் எடுத்து செட்டில் ஆகும் வரை தொடர்ந்து ஓவர்கள் கொடுத்தது, அவர் சகஜமானதும், சாஹலை அவரிடத்தில் கொண்டு வந்தது, குரனால் பாண்டியாவை தொடர்ந்து நடுவே வீச வைத்தது, இறுதி ஓவர்களுக்கு ஹர்த்திக் பாண்டியாவை கொண்டு வந்தது என நிறைய விசயங்கள் தோனியை நினைவுபடுத்தின. இதுவே கோலி என்றால் விக்கெட் எடுக்க வேண்டிய நேரத்தில் குரனாலை கொண்டு வந்திருப்பார், குல்தீப்பை ரொம்ப லேட்டாக எடுத்து வந்திருப்பார். 10-20 ஓவர்களுக்குள் ஹர்திக்கையும், தீபக் சஹரையும்  அதிகம் வீச வைத்திருப்பார். இந்த தலைகீழாக்க குழப்பங்கள் இல்லாத எளிமையான பாணி தவனுடையது. அதனால் தான் அவர் தோனியை நிறைய நினைவுபடுத்துகிறார். தோனியின் எதிர்பாராமைகள், சுழலர்களை அறிவுரைத்து, மட்டையாளர்கள் எங்கு அடிப்பார்கள் என கணித்து வழிடத்துவதும் சாமர்த்தியம் தான் மிஸ்ஸிங்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.