முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“அபுனைவு எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்” பாடத்திட்டம்



கட்டுரையின் அடிப்படைகள்:
1)வாக்கியம், பத்தி, அத்தியாயம்
2) திட்டமிடுதல்
3) ஆய்வு


அபுனைவின் வகைமைகள்:
1) விவரணை
2) விவாதம்
3) தர்க்கரீதியான எழுத்து
4) தகவல்பூர்வமான எழுத்து
5) தன்னெழுத்து
6) சுயபுனைவு - ஆட்டோபிக்‌ஷன்
7) வாழ்க்கை சரிதை
8) அறிமுக நூல்கள்
அபுனைவின் களங்கள்:
1) சமூக அரசியல் கட்டுரைகள்
2) அன்றாட செய்திக் கட்டுரைகள்
3) சினிமா விவாதம்
4) விளையாட்டு
5) கருத்துப் பதிவு
6) எதிர்-விவாதம்
7) கோட்பாடு, தத்துவம்
அபுனைவின் தளங்கள்:
1) அச்சிதழ் - இலக்கிய, நடுநிலை, வணிக இதழ்கள்
2) ஆய்வெழுத்து
3) நூல் பிரசுரம்
4) இணையதளம் - இணைய இதழ்கள்
5) சமூகவலைதள எழுத்து - பேஸ்புக், பிளாக்
அபுனைவின் அங்கங்கள்:
1) நடை
2) பேசுபொருள் - பேசுபொருளின் தீவிரமும் அடர்த்தியும் சிக்கல்களும் எழுத்தின் மொழியை மேலும் மேலும் தீவிரமும் அடர்த்தியும் கொண்டதாக்க அதை எப்படி முடிந்தளவுக்கு எளிதும் சுவாரஸ்யமும் கொண்டதாக்குவது? பேசுபொருளின் தீவிரமின்மை, மேலார்ந்த தன்மை, சிக்கலற்ற எளிமை எழுத்தை பலவீனமாக்கும் போது மொழியைக் கொண்டு அதை எப்படி தீவிரமும் அடர்த்தியும் கொண்டதாக்குவது?
3) சொல்வளம்
4) அங்கதம், நகைச்சுவை
5) உணர்வெழுச்சி
6) கதைகள்
அபுனைவின் உளவியல்:
1) பேச்சில் இருந்து எழுத்துக்கு - பேசுவதைப் போல எழுதுவது, எழுதுவதைப் போல பேசுவது, பேசுவதைப் போல யோசிப்பது, யோசிப்பதை, பேசுவதைப் போல எழுதுவது
2)கட்டுரையை விரித்து நூலாக்குதல்
3) புத்தகத்தை பிரசுரித்தல்
4) புத்தகத்தை சந்தைப்படுத்துதல்
5) எழுத்தாளரின் பிம்பத்தைக் கட்டமைத்தல்
வார இறுதிகளில் 4 மணிநேரங்கள், மொத்தமாக 32 மணிநேரங்கள் ஆன்லைன் வகுப்புகள்
தொடர்புக்கு: 9790929153; 8148387800
abilashchandran70@gmail.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...