முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னோடி

 ஜெயமோகனின் ஆளுமையைப் பற்றி ஒரு நண்பரிடம் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அவர் தன் காலத்துக்கு வெகு முன்னதாகவே இப்போதை இளைஞர்களிடம் காணப்படும் மிகையான தன்மதிப்பையும், தன்னை மையமாக்கி உலகைப் பார்க்கும் போக்கையும் கொண்டிருந்தார் என்று சொன்னேன். எழுத்தாளரின் ஆளுமையே அவரது எழுத்தின் ஆதாரம், அவரது ஆளுமை அவனது கற்பனையின் புறவடிவம், அது இந்த உலகின் ஆதார இயக்கவிசை என ஜெயமோகன் நம்புகிறார். இது வெர்ட்ஸ்வொர்த்தும் கால்ரிட்ஜும் தாரோவும் ஏற்கனவே 19ஆம் நூற்றாண்டில் சொன்னதுதான். இந்த சிந்தனைக் கோணம் நவீனத்துவ இயக்கத்தில் கடுமையாக மறுக்கப்பட்டது. நவீனத்துவத்தில் எழுத்தாளர் என்பவர் மானுடப் பாய்ச்சலின் மிகச்சிறிய துளியாக மாறினார். நவீனத்துவ யுகத்தில் மட்டுமல்ல பொதுவாக பௌத்த சமண துறவற (தன்மறுப்பு) மரபின் தாக்கம் இன்னுமுள்ள இந்தியாவின் பெரும்பான்மை சமூகம் கூட ஒரு தனிமனிதன் பணிவும், விட்டுக்கொடுக்கிற பாங்கும் கொண்டவர்களையே கொண்டாடுகிறது. நமது சினிமா நட்சத்திரங்கள் கூட இப்படித்தான் தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள்.

ஆனால் இன்றைய பின்நவீன உலகில் எழுத்தாளர் தன்னை ஒரு பேராளுமையாக கருதுவதற்கு, தன்னுடைய மையத்தில் இருந்து உலகின் அத்தனை சிக்கல்களையும் உணர்ச்சிகளையும் பரிசீலிப்பதற்கு, புயலின் மையமாக அல்லாமல் புயலாகவே (ஒரே சமயம் நிஜமாகவும் அல்லாமலும்) இருப்பதற்கு இடமுள்ளது. இதை தொண்ணூறுகளிலேயே உணர்ந்துகொண்டவர்களில் ஒருவராக அவர் இருந்தார். மற்ற எழுத்தாளர்கள் மிகவும் தன்னடக்கமாக, கூச்சத்துடன், தன்மறுப்புடன் வாழ்ந்த காலத்திலேயே அவர் நேரெதிராக இருந்தார். அவ்விதத்தில் அவர் ஒரு ‘முன்னோடி’.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.