முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து எழுப்பாத கேள்வி

 ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணம் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்குவதா, அவருக்கு நியாயமான முறையில் அடக்கம் பண்ண விடாமல் திமுக பாகுபாடாக நடந்துகொண்டதா, ஆம்ஸ்ட்ராங் உண்மையில் ஒரு போராளியா, அரசியல் தலைவரா அல்லது தாதாவா, இது ஆருத்திரா மோசடிப் பண கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தின் போதான மோதலின் விளைவாக நடந்ததா போன்ற கேள்விகள் திட்டமிட்டு எழுப்பப்படுகின்றன என நினைக்கிறேன். இன்னொரு பக்கம், சூத்திரர்கள் vs தலித்துகள் எனும் முரணும் கூர்தீட்டப்பட்டு மக்களிடம் பிரிவினையை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. இதை வேறெவரையும் விட பாஜக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது - அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தலித்துகள் திமுக - அதிமுக என வாக்களிப்பது பாஜகவை மிகவும் சோர்வடைய வைக்கிறது (அண்மையில் நடந்த மக்களைத் தேர்தலிலும் இந்தியாவின் வேறு மாநிலங்களிலும் பழங்குடியினரைத் தவிர தலித்துகள் இவ்வாறே பாஜகவுக்கு எதிராக வாக்களித்தார்கள்.). இந்த களேபரத்தில் நாம் கேட்காத ஒரு முக்கிய கேள்வி உண்டு:

இந்த படுகொலை காவல்துறைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த படுகொலை என்றல்ல எல்லா முக்கிய பிரமுகர்களின் கொலையும் ஏற்கனவே தெரிந்துதான் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்ததும் காவல் துறை வந்து நிமிஷ நேரத்தில் லபக்கென்று குற்றவாளிகளைப் பிடிக்கிறது. ராஜீவ் காந்தி படுகொலையின் போதும் இது நடந்தது. இந்த துரிதமும் சுலபத்தன்மையும் இயல்புமீறியவை, சந்தேகத்துரியவை. அதுவும் குற்றவாளிகள் உடனே சரணடைவது எல்லாம் எதார்த்தத்தை மீறியது. ஏதோ போன் பண்ணி வரச்சொல்வதைப் போல இது நடக்கிறது.
சரி, தெரிந்தே நடந்தது எனில் ஏன்? எப்போதுமே இதற்கான பதில் பணம் மற்றும் அதிகாரத்துக்காக என்பதே. இதை குற்றவாளிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் கொடுத்தது - அதாவது குற்றத்திற்கு நிதியளித்தது - யார்? ஆனால் இந்த கேள்வியை யாருமே கேட்க மாட்டார்கள் (திருமா லேசாக இதை எழுப்பினார், ஆனால் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.). எந்த பத்திரிகையாளரும் சற்று விசாரித்து இதைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். ஸ்வாதி படுகொலையைப் போன்றே இந்த கொலையும் பல ஊகங்களுடன் முடிந்துபோகும்.
இதற்குப் பின்னிருக்கும் அந்த பெரிய கை இந்நேரம் இங்கு நடக்கும் விவாதங்களைப் பார்த்து கால் மேல் காலிட்டு சிரித்துக் கொண்டிருப்பார். பெரும் பணமும் அதிகாரமும் படைத்தவராக இருப்பது ரொம்ப ஜாலியானது தான் - நீங்கள் மனிதர்களின் சிந்தனையை, நடத்தையை கட்டுப்படுத்த முடியும். கிட்டத்தட்ட ஒரு கடவுளைப் போல.
அந்த கிட்டத்தட்ட கடளுக்காக நாம் நமது நேரத்தையும் ஆற்றலையும் ஏன் வீணடித்து முட்டாளாகிறோம்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.