முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிரமம் எனும் கற்பனை


இன்று காலையில் ஆந்தெனி ரோபின்ஸின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சில வேலைகளை சிரமம் என எண்ணி தள்ளிப் போடுகிறோம். ஆனால் சிரமம் உண்மையில் அவ்வேலை மீது ஒரு எதிர்மறை உணர்ச்சியாக திணிக்கப்படுகிறதே அன்றி எந்த வேலையும் அதன் அடிப்படையில் சிரமம் அல்ல. ஒருவேலையை எளிது, சுவாரஸ்யம் என யோசிக்க பழகிக் கொள்ளலாம். பிறகு மெல்ல மெல்ல அதை செய்வதற்கான தயக்கம் போய் விடும் என்கிறார். அவர் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ளது. இந்த விளம்பரங்கள் தேவையில்லாத எவ்வளவோ பொருட்களை நமக்கு தேவை என நம்ப வைத்து நம் மேல் திணிக்கவில்லையா? அப்படி இருக்க நாமே ஏன் நம்மை நம்ப வைக்க முடியாது? அதுவும் நமக்கு உபயோகமான விசயங்களுக்கு.


அதற்காக பிடிக்காத வேலையை பிடிக்கிறது என நம்ப வைக்க முடியாது. பிடிக்காத மனைவி அல்லது கணவனை பிடிக்கிறது என பிடிவாதமாய் ஏற்க முடியாது. ஆனால் பிடிக்காத விசயங்களை ஏன் தொடர்ந்து செய்கிறோம் என யோசிக்கலாம். அந்த முடிவை எடுக்க ஏன் தள்ளிப் போடுகிறோம்? ஏன் பயப்படுகிறோம்? முடிவெடுத்த பின் நம் நிலை இன்னும் மோசமாகாது, சிறப்பாகவே இருக்கும் என நம்மை நம்ப வைக்கலாம். அதன் மூலம் தயங்கி தயங்கி நரகத்தை அனுபவிக்காமல் அடுத்த அடியை எடுத்து வைத்து முன்னேறலாம்.

ஆந்தொனி ரோபின்ஸின் வாதம் ஒருவித கருத்துமுதல் வாதம். அதாவது எல்லாம் மனமே, மனம் நினைத்தால் எதையும் மாற்றலாம் எனும் நம்பிக்கை. இதில் மிகை உள்ளது தான். ஆனால் ஓரளவு உண்மையும் உள்ளது.


என்னுடைய ஒரு முக்கியமான ஆய்வுக் கட்டுரை ஒன்றை அதன் சிரமம் காரணமாய் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவரது பேச்சை கேட்ட பின் இந்த “சிரமம்” ஒரு கற்பனை தான் எனப் புரிந்தது. உட்கார்ந்து எழுதி விட்டேன். இன்றைய காலைப் பொழுது உபயோகமாய் ஆனது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...