முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென்னாப்பிரிக்காவும் உலகக்கோப்பையும்

But Sohail Khan removed de Villiers in the 33rd over and swung the match back in Pakistan's favour

இன்று (7-3-15) நடந்த தென்னாப்பிரிக்கா-பாகிஸ்தான் லீக் போட்டி இந்த உலகக்கோப்பையின் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்று. பாகிஸ்தான் முதலில் மட்டையாடி 222 அடித்தார்கள். தடுக்கி தடுமாறி கூட அடிந்து விடக்கூடிய எளிய ஸ்கோர். ஆனால் தென்னாப்பிரிக்கா தடுமாறிக் கொண்டே இருந்தார்கள். எழவே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள்.
 ஒன்று ஏழடி உயரமுள்ள முகமது இர்பான், இடதுகை வீச்சாளர்கள் ரகத் அலி, வஹாப் ரியாஸ் ஆகிய மந்திரப் பந்து வீச்சாளர்கள். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின் தனித்தன்மை அவர்களால் மிகுந்த வேகத்தில் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்பது. அவர்கள் நன்றாக வீசத் தொடங்கினால் பாலைவனச் சூறாவளி அடிப்பது போலத் தான். எதிர்த்து நிற்க நீங்கள் திராவிடாகவோ காலிஸாகவோ இருக்க வேண்டும். இன்று தென்னாப்பிரிக்காவை அந்த புயல் அடித்து தூக்கி சென்றது. டிவில்லியர்ஸ் மற்றுமே சற்று நேரம் எதிர்த்து நின்று சுடர்ந்து விட்டு அணைந்து விட்டார்.

தென்னாப்பிரிக்கா ஒவ்வொரு நான்கு ஓட்டங்கள் அடிக்கும் போது பாகிஸ்தான் வேகவீச்சாளர்கள் அஞ்சாமல் தொடர்ந்து விக்கெட்டுக்காக முயன்று கொண்டே இருந்தார்கள். இது ஒரு கண்காணா காட்சி. சன்னதம் வந்தது போன்ற கவனத்துடன், மன ஒழுங்குடன் ஆவேசத்துடன் வீசினார்கள்.
இரண்டாவது காரணம் தென்னாப்பிரிக்காவின் பதற்றம். தோற்று விடுவோமோ என்கிற பயம். ஒரு இலக்கை விரட்டும் போது இரண்டு ஓவர்கள் அவர்களுக்கு எதிராக நன்றாக ஆடினால் சுணங்கி விடுவார்கள். பதற்றத்தில் தடுமாறியபடி ஆடுவார்கள். பிறகு அவர்களுடையது தற்கொலை ஆட்டமாகத் தான் இருக்கும். ஆங்கிலத்தில் choking என்கிறார்கள். இந்த பிரச்சனை தென்னாபிரிக்காவுக்கு முன்னர் முக்கியமான ஆட்டங்களில் மட்டும் இருந்தது. இப்போது லீக் போட்டிகளில் கூட அவர்கள் தம் மீது போடும் கொள்ளும் அழுத்தத்தினால் சோக் ஆக ஆரம்பித்து விட்டார்கள். ஒரே விதிவிலக்கு ஹஷிம் ஆம்லா தான். அவர் பந்தை சொடுக்கி விரட்டும் போது அசருதீன் நினைவுக்கு வருகிறார். பந்து மட்டையில் படும் போது ஒரு தனித்துவமான சத்தம் வரும். இது மணிக்கட்டை சுழற்றி அடிக்கும் மட்டையாளர்களுக்கே உரித்தானது. ஆம்லாவைத் தவிர பிற தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஒரு ஜென் மனநிலையுடன் ஆட வரவில்லை. டிவில்லியர்ஸுக்கு கூட. அவரும் பதற்றமானால் அடிக்க ஆரம்பித்து விடுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவரிடத்தில் தோனி இருந்திருந்தால் ஒற்றை, ரெட்டை ஓட்டங்கள் எடுத்தே வென்றிருப்பார். ஆனால் அவர் நான்காவது கியரில் ஆடி ஆட்டம் இழந்தார்.
டிவில்லியர்ஸ் ஆம்லாவுக்கு இன்னொரு துருவம். ஆம்லாவுக்கு மணிக்கட்டும் டைமிங்கும் பலம் என்றால் இவருக்கு சமநிலையும் அடிக்கும் வலுவும் தனிச்சிறப்பு. முன்பெல்லாம் கால் பக்கமாய் விலகி நின்று பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்துக் கொண்டிருந்தார். குச்சியை சுற்றி வந்து round the wicket வீசி அவரை கட்டுப்படுத்த முடிந்தது. இப்போது அம்முறையில் வீசினாலும் அதற்கும் ஒரு உபாயம் வைத்திருக்கிறார். Off குச்சிக்கு வெளியே வெகுவாக தள்ளி நின்று பந்து கால் பக்கமாய் அனாயசமாய் அடிக்கிறார். எப்படி நின்றாலும் அவரது சமநிலை குலைவதில்லை. அதனாலே அவரால் இஷ்டத்துக்கு ஆறு ஓட்டங்கள் அடிக்க முடிகிறது. அவரை இப்போது பார்க்க தொண்ணூறுகளில் சச்சினைப் பார்த்தது போல் இருக்கிறது.
டிவில்லியர்ஸ் இவ்வாறு அங்கும் இங்குமாய் தள்ளி நின்று அடிக்கையில் முழுநீளமோ யார்க்கரோ குட் லெங்தோ உதவாது. Short of the length தான் சரியான உபாயமாக இருக்கும். இன்று சொகைல் கான் அவரை அப்படித் தான் வீழ்த்தினார்.
இன்றைய ஆட்டம் பார்த்த பின்னர் தென்னாப்பிரிக்கா இந்த உலகக் கோப்பையை வெல்லும் எனும் நம்பிக்கை முழுமையாக போய் விட்டது. லீக் ஆட்டத்திலேயே இவ்வளவு கைநடுக்கம் என்றால் கால், அரை இறுதிகளில் அவர்களுக்கு பதற்றத்தில் ஜன்னியே வந்து விடும். தென்னாப்பிரிக்கா ஆடும் போது இரண்டு அணிகளுக்கு எதிராக போராட வேண்டும். ஒன்று எதிரணிக்கு எதிராக. அடுத்து தனக்கு எதிராக.

இம்முறையும் South Africa chokes again எனும் தலைப்பு செய்தி வரும் பாருங்கள். 

கருத்துகள்

Name : Rajesh RV இவ்வாறு கூறியுள்ளார்…
You exactly echoed whatever I felt too. They never tried to build an innings. Every one went to slog. Steyn out was for a wild slog. I felt like " adapavi gala, Intha team thaan world cup win pannumnu Evan data sonathu"
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
கடைசி நேரத்தில் சொதப்பல் நியுஜியும்...?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.