முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விகடன் விருதுகள்



விகடன் விருது பெறும் ஷோபா சக்தி, யூமா வாசுகி, கார்த்திகைப்பாண்டியன், சபரிநாதன், கண்டராதித்தன், பாலு சத்யா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். நண்பன் லஷ்மி சரவண குமாருக்கு கூடுதல் அன்பும் முத்தங்களும். எப்போதும் விகடன் விருது பெறும் புத்தகங்களுக்கு புத்தகக் கண்காட்சியில் மவுசு கூடும். அதை மனதில் வைத்து மார்ச்சில் அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது மார்ச்சில் விகடன் வாசகர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டலாம். இம்முறை விருது பெறுகிறவர்கள் முக்கியமானவர்கள். தொடர்ந்து பங்காற்றி வருகிறார்கள். யூமா வாசுகியின் உழைப்பு திகைப்பூட்டுகிறது. எவ்வளவு முக்கியமான நூல்களை மலையாளத்தில் இருந்து மொழியாக்கி இருக்கிறார்! ஷோபா சக்தி நம் காலத்தின் ராக் ஸ்டார். அவருக்கான ஒவ்வொரு அங்கீகாரமும் நாம் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.


 மொழிபெயப்புக்காய் விருது வாங்கியுள்ளவர் கவிஞர் சபரிநாதன் தானே? அவர் கவிதைகள் படித்திருக்கிறேன். இளந்தலைமுறை கவிஞர்களில் மிக மிக முக்கியமானவர். அவர் தொகுப்பு பற்றி எழுத வேண்டும் என பல மாதங்களாய் எடுத்து வைத்திருக்கிறேன். லஷ்மி சரவணகுமார் நூறு வருடங்கள் கழித்தும் நம் மொழியின் கலாச்சார அடையாளமாய் நிலைக்க போகிற எழுத்தாளன். அதற்கான திறமையும் உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரிடம் உண்டு. ஒருவித self-obsessionஇன் உச்சம் அவர். அது நேர்மறையாக அவருக்கு எழுத்தில் பயன்படுகிறது.
சரி இவ்வளவு பேரும் சேர்ந்து எப்போது பார்ட்டி கொடுக்க போகிறீர்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.