முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” பற்றி அன்பரசன் செல்வராஜ்

”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” மற்றும் என் எழுத்து பற்றி முகநூலில் அன்பரசன் செல்வராஜ் எழுதியதன் மீள்பதிவு இது.

நீண்ட நாட்களாக இந்த புத்தகத்தை வாங்க நினைத்து தவறிகொண்டே இருந்தது திருச்சி புத்தக திருவிழாவில் வாங்கி 100 பக்கங்களையும் தாண்டியாகி விட்டது. Abilash Chandran, சுமார் மூன்று வருடங்களாக இவரை தொடர்ந்து வாசிப்பவன்.உயிரோசை கிரிக்கெட் கட்டுரைகளின் வழி அறிமுகமாகி இருந்தாலும் எழுத்தாளர் ஞாநி ஒரு முறை இவரது blog(http://thiruttusavi.blogspot.in/?m=1)-சுட்டி ஒன்றை பகிர்ந்திருந்த போது அவருடய Blog அறிமுகமானது. படிக்க படிக்க சுவாரசியமாகவும் எளிமையாகவும் தத்துவ பினைப்போடும் இருந்த கிரிக்கெட் தொடர்பான அவரின் பழைய பதிவுகளை அத்தனையும் எந்த சலிப்பும் இல்லாமல் அன்றே வாசித்து முடித்தேன்( இவைகள்கிரிக்கெட்டின் மாரும் நிறங்கள் என்ற புத்தகமாக உயீர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது) அதன்பின் அவரின் சினிமா(குறிப்பாக 127 Hours, Life of Pie,Raanjhana, 2000க்கு பிறகு தமிழ் சினிமா மாறி வருவது குறித்த கட்டுரைகள், ரஜினியை நமக்கு ஏன் பிடிக்கிறது மற்றும் இன்னும் நிறைய), காதல்(My fav இந்திய பெண்களின் உளவியல் குறித்த கட்டுரைகள்), சமூகம் பற்றின எல்லா பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பவனானேன்.கடவுளை மறுப்பவனாக இருந்தாலும் தத்துவங்களின்பால் ஆழ்மனதில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்டடைய செய்தவர்(ஜென்னையும், கீழைதத்துவங்கலையும் புரட்ட ஆரம்பித்திருக்கிறேன்). இவரோடு சேர்ந்து ஒரு முழு கிரிகெட் போட்டியை டிவி-ல் பார்க்க ஆவலுமுன்டு. கடந்த ஒரு வருடமாக நான் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம்.் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம்.நீண்ட நாட்களாக இந்த புத்தகத்தை வாங்க நினைத்து தவறிகொண்டே இருந்தது திருச்சி புத்தக திருவிழாவில் வாங்கி 100 பக்கங்களையும் தாண்டியாகி விட்டது. Abilash Chandran, சுமார் மூன்று வருடங்களாக இவரை தொடர்ந்து வாசிப்பவன்.உயிரோசை கிரிக்கெட் கட்டுரைகளின் வழி அறிமுகமாகி இருந்தாலும் எழுத்தாளர் ஞாநி ஒரு முறை இவரது blog(http://thiruttusavi.blogspot.in/?m=1)-சுட்டி ஒன்றை பகிர்ந்திருந்த போது அவருடய Blog அறிமுகமானது. படிக்க படிக்க சுவாரசியமாகவும் எளிமையாகவும் தத்துவ பினைப்போடும் இருந்த கிரிக்கெட் தொடர்பான அவரின் பழைய பதிவுகளை அத்தனையும் எந்த சலிப்பும் இல்லாமல் அன்றே வாசித்து முடித்தேன்( இவைகள்கிரிக்கெட்டின் மாரும் நிறங்கள் என்ற புத்தகமாக உயீர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது) அதன்பின் அவரின் சினிமா(குறிப்பாக 127 Hours, Life of Pie,Raanjhana, 2000க்கு பிறகு தமிழ் சினிமா மாறி வருவது குறித்த கட்டுரைகள், ரஜினியை நமக்கு ஏன் பிடிக்கிறது மற்றும் இன்னும் நிறைய), காதல்(My fav இந்திய பெண்களின் உளவியல் குறித்த கட்டுரைகள்), சமூகம் பற்றின எல்லா பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பவனானேன்.கடவுளை மறுப்பவனாக இருந்தாலும் தத்துவங்களின்பால் ஆழ்மனதில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்டடைய செய்தவர்(ஜென்னையும், கீழைதத்துவங்கலையும் புரட்ட ஆரம்பித்திருக்கிறேன்). இவரோடு சேர்ந்து ஒரு முழு கிரிகெட் போட்டியை டிவி-ல் பார்க்க ஆவலுமுன்டு. கடந்த ஒரு வருடமாக நான் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதானகாராணம்.் உயிர்மையை வாங்குவதற்க்கு இவரின் கட்டுரைகளும் ஒரு பிரதான காராணம்.

கருத்துகள்

Arun இவ்வாறு கூறியுள்ளார்…
You may want to check about the duplicate paste - the content comes twice

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...