முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆப்பிளும் மார்புகளும்

Dear Abilash sir. 
"Kadavul Irukiraraa" is a nice article in Uyirmmai. May god bless you.
The bible says it is tree and we say it is a apple tree. I hope u know this. Kindly make a note of it.
Regards
jerin
நன்றி ஜெரின். ஒரு சின்ன விளக்கம். நீங்கள் சொல்வது சரி தான். அது fig மரம் என்றும் படித்திருக்கிறேன்.
ஆனால் என் கேள்வி இது: விவிலியம் மனிதனால் எழுதப்பட்டது. அது நூற்றாண்டுகளாய் பல சேர்க்கைகளை பெற்று வளர்ந்துள்ளது, மாறி உள்ளது. இன்றுள்ள விவிலியம் மக்கள் தமக்காய் தாமே எழுதிக் கொண்டது. இங்கு தான் ஆப்பிளும் வருகிறது.
ஆப்பிள் ஒரு பிரமாதமான குறியீடு. அதன் சிவப்பும் வழவழவென்ற உருளை வடிவமும் காமத்தின் குறியீடு. ஆபத்தின, அழகின் குறியீடு. அதன் வழியே தான அது் பாவத்தின், விலக்கப்பட்ட செயலின் குறியீடும் ஆகிறது. அதனால் தான் தமிழில் ஏவாள் கடித்தது ஆப்பிள் எனும் எண்ணம் எழுத்தாளர்களிடம் குறிப்பாய் பரவலாய் உள்ளது. வெறும் விலக்கப்பட்ட கனி என்பதை விட ஆப்பிள் எனும் போது ஏற்படும் அகச்சித்திரமும் உணர்வுகளும் தனித்துவமானவை.
தகவலின் சரித்தன்மையா மொழியின் குறியீட்டுத்தன்மையா? எது முக்கியம்?

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் ஒரு தோழி கோபமாய் கேட்டார்: ஏன் கண்ணகி மார்பை பறித்து எறிந்ததாய் சொல்கிறார்கள்? பெண்களின் அந்த உறுப்பை தவிர்த்து வேறு எதிலும் ஆண்களின் கவனம் செல்லாதா!
பெண்ணிய கோணத்தில் அவர் கேள்வி முக்கியமே. ஆனால் ஒற்றை முலை எனும் சொல் நம் கற்பனையில் தீக்கனலாய் மிளிர்ந்து கொண்டே இருக்கிறது. நூற்றாண்டுகளாய்! எத்தனையோ தாய்களின் கோபத்தை நாம் அந்த சித்திரம் மூலம் மட்டுமே உணர்ந்து கொள்கிறோம். கண்ணகியின் சிலையை ஜெயலலிதா அகற்றிய போது பலர் வெகுண்டெழுந்ததற்கு காரணம் அதில் நம் நூற்றாண்டுகளின் உணர்வுகள் படிந்துள்ளது, அதில் நாம் கண்டுள்ள அநீதியால் கொதிப்புறும் அத்தனை பெண்களையும் கண்டறிந்தோம் என்பதால் தான்.
ஆப்பிளும் மார்புகளும் வெறும் ஆப்பிளும் மார்புகளும் அல்ல.
ஜெரின் உங்கள் அவதானிப்பு சரியே. ஆனால் உணர்வுகளின் தடத்தில் பயணிக்கையில் எழுத்தாளனுக்கு தகவலின் சரித்தன்மையை கடந்து பேசும் சுதந்திரம் உண்டு என நினைக்கிறேன்.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...