Skip to main content

தேர்தல் முடிவுகள்: ஏமாற்றமும் எதார்த்தமும்


இத்தேர்தல் பற்றி ஒரு மாதத்திற்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் போட்டி கடுமையாக இருக்கும். அதிமுக சராசரியான வெற்றி பெறும். திமுக போதுமான இடங்கள் பெற்று எதிர்க்கட்சியாக மாறும் என கூறியிருப்பேன். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பு சட்டென ஒரு எதிர்-அதிமுக அலை கிளம்புவதை கவனித்தேன். எல்லா பத்திரிகை நண்பர்களும் திமுக தான் வெல்லும் என்றார்கள். Exit poll முடிவுகளும் அதையே உறுதிப்படுத்தின. ஆனால் நேற்று எனக்கு சற்று குழப்பமாய் இருந்தது. என் ஊகம் தவறாகுமோ என பட்டது. காரணம் அதிமுகவின் மௌனம். தேர்தலுக்கு முன்பாக இருநாட்களில் அவர்கள் நடத்திய பெரும் பணப்பட்டுவாடா. நேற்றிரவு ஒரு ஊடக நண்பரிடம் பேசினேன். (அவர் ஒரு செய்தி சேனலில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்.) ”என்ன நினைக்கிறீர்கள்?” அவர் சொன்னார் “அதிமுக வெற்றி பெறும். தேர்தலுக்கு சற்றும் முன்பு அவர்கள் விநியோகித்த பெருமள்வு பணம் மக்களின் முடிவை திசைதிருப்பி இருக்க கூடும். ஆனால் திமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாய் வெளிவரும்.” அதன் பிறகு அவர் மற்றொரு விசயத்தை ஊகித்தார். அது பா.ம.க ஒரு சிறிய வெற்றியை அடையும் என்பது. அன்புமணி நிறைய இளம் வாக்காளர்களை வசீகரிக்கிறார் என்றார். எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. ஆனால் இப்போது வரைக்கும் பா.ம.க ஐந்து இடங்களில் முன்னிலை வகிப்பது இதை உறுதிப்படுத்துகிறது. அந்த நண்பர் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தான்.
நேற்று கோட்டூர்புரத்தில் ஒரு ஓட்டலில் உணவருந்தி விட்டு கிளம்பும் போது அதன் உரிமையாளரிடம் தேர்தல் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். “திரும்பவும் அதிமுக வந்தால் அவங்க ரொம்ப ஆட்டம் போடுவாங்க. தட்டிக் கேட்க யாரும் இல்லேன்னு நினைப்பாங்க. அதனாலே அவங்க வரக் கூடாது. மத்தபடி நான் எந்த கட்சி ஆளும் இல்லை” என்றார். நானும் எந்த கட்சியின் அனுதாபியும் அல்ல. அதிமுக மீண்டும் வரக் கூடாது என வெளியில் நின்று விரும்பியவன் நான். அதனால் இத்தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றமே. ஆனாலும் தனிப்பெரும் வெற்றியை மக்கள் அளிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். திமுகவை ஒரு வலுவான எதிர்க்கட்சியாய் முன்னிறுத்தி இருக்கிறார்கள். கடந்த இரு வருடங்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் மக்கள் பா.ஜ.கவுக்கு விடுத்த செய்தி போலத் தான் இதையும் பார்க்க வேண்டும். ”நாங்கள் உங்கள் ஆட்சியில் அதிருப்தியாய் இருக்கிறோம். அதனால் ஒரு சிறிய அளவில் தோற்கடிக்கிறோம். ஆனாலும் மற்றொரு வாய்ப்பு தருகிறோம்” என்பதே மக்கள் இப்போது அதிமுகவுக்கு விடுக்கும் எச்சரிக்கை.
மிகப்பெரிய அடி மக்கள் நலக் கூட்டணிக்கு தான். அதிமுகவே இருக்கும் போது அதன் பி அணிக்கு எதற்கு தனியாய் வாக்களிக்க வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள் போல. மநகூ திமுகவை தாக்கும் முனைப்பை குறைத்து தம்மை உண்மையிலேயே ”மாற்றாய்” முன்வைத்திருக்க வேண்டும். அடுத்தமுறை வை.கோ போன்று காழ்ப்புணர்வு மிக்க ஒரு குழப்பவாதியுடன் கட்சிகள் இணையக் கூடாது. அவர் இக்கூட்டணியின் தொனியையே தவறாக மாற்றி விட்டார். அவர் திமுக தெமுதிகவுக்கு பணம் கொடுத்து இழுக்கப் பார்த்தது என பேசியிராவிட்டால் அவருக்கு அதிமுகவால் கொடுக்கப்பட்ட கோடிகளின் கதை வெளியே வந்திருக்காது.
விஜயகாந்தின் பொழுதுபோக்கு பேச்சை மக்கள் பெருமளவில் ரசித்தார்கள். ஆனால் அவருடைய உடல்நலம், அவர் பேச்சில் உள்ள தடுமாற்றம், குழறல், மேலும் கட்சிக்குள் அவரது நிர்வாகிகள் இடையில் உள்ள் அதிருப்தி என பலவிசயங்கள் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தி இருக்கலாம். வி.சி.க அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. விஜயகாந்துடன் திருமா கைகோர்த்தது அவரது கட்சியினருக்கே அதிருப்தி ஏற்படுத்தி இருந்ததை கவனித்தோம். வி.சி.க இப்போதைக்கு தன்னை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக முன்வைக்காமல் வேர்களுக்கு திரும்புவதும், மக்களோடு தோள்கொடுத்து பணியாற்றுகிற தலைவர்களை உருவாக்குவதும் முக்கியம்.


அடுத்த தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு இவ்வளவு கருணை காட்ட மாட்டார்கள்! 

Comments

KARMA said…
கருணாநிதி குடும்பம் ஆடாத ஆட்டமா ???
எவ்வளவு துரோகம் ?

மதுவிலக்கு - நாடகம்
மீதேன்
ஈழம் - நாற்காலியை பிடித்துகொண்டு இந்த சனியன் ஆடிய ஆட்டம், தன குடும்பத்திற்காக டெல்லி போய் தவங்கிடந்து வாங்கிய பதவிகள்
அழகிரியின் வெறியாட்டம் - பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு
2G -Scam

இன்னும் எத்த்கனை சொல்ல ???

மக்கள் எதையும் மறக்கவில்லை, ஒரு வேளை நீங்கள் வெளிநாடு சென்றிருந்திருக்கலாம் இவைகள் நடந்த காலங்களில் ...

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...