முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழுக்கு சாக்ஸ்

Image result for அழுக்கு சாக்ஸ்
பெருந்தேவியின் மொழி எழுபதுகளின் கவிதைகளுக்கு உரியது. ஆனால் அவர் பேசுவது இக்காலத்தின் சிக்கல்கள்: குழப்பமான, இலக்கற்ற மனிதனின் குரல், சுயபகடி, அபத்தம் ஆகியவை.
”அழுக்கு சாக்ஸ்” தொகுப்பில் நான் ரசித்த மற்றொரு கவிதை “பிறழ் மனம்”. இது ஆத்மாநாமுக்கான ஒரு ஹோமெஜ். அதில் ஒரு வரியை திரும்ப திரும்ப மனம் மீட்டியது:
“எல்லா கிறுக்குகளும் நீட்சேயில்லை
ஆத்மாநாமில்லை
பைத்தியம் மருகுகிறது”

மனம் பிறழ்ந்தோரில் சிலருக்கு இந்த மாதிரி அடையாளக் குழப்பங்கள் ஏற்படும். தம்மை வித்தியாசமான மனம் பிறழ்ந்தவாய் காட்ட முயற்சி எடுப்பார்கள். கல்லூரியில் எனக்கு அப்படி ஒரு நண்பர் இருந்தார். தமிழில் எண்பது, தொண்ணூறுகளில் எழுத்தாளர்கள் சிலர் தாமே முன்வந்து தம் மன நலப்பிரச்சனைகளை வெளிப்படுத்தி ஒரு கிறுக்கு பிம்பம் தேடிக் கொள்வார்கள். அப்போது எழுத்தாளன் என்றால் மனச்சிக்கல் வேண்டும் எனும் நம்பிக்கை இருந்தது.
இத்தொகுப்பில் உள்ள சில மைக்ரோ மினி கவிதைகளில் இதை ரசித்தேன்:
“அறுபட்டதென்ன விடுபட்டதென்ன
ஒன்றாத சுவைக்கு ஓராயிரம் நாக்கு”
மனம் ஒன்றாத ஒரு விசயத்தை ஆயிரம் நாவுகளால் சுவைக்க நேர்கிற நிலை, அதன் அபத்தம், சுயசித்திரவதை. உங்கள் மனம் தறிகட்டு தன் போக்குக்கு சிந்திக்கிறதை விலகி நின்று கவனித்திருக்கிறீர்களா? இக்கவிதை அப்படியான ஒரு மன’நிலை’ குறித்தது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...