முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மம்முட்டி

என் அம்மா மம்முட்டியின் அதிபயங்கர விசிறி. டிவியில் மம்முட்டி வந்தால் அவர் உலகையே மறந்து விடுவார். அதனால் என் அப்பா மம்முட்டியை திட்டுவதையே வீட்டில் வழக்கமாய் வைத்திருப்பார். இன்று அம்மாவுக்கு மம்முட்டியை காட்டுவதற்காய் ”பேரன்பு” படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து சென்றேன். மம்முட்டியை கண்டதும் வெட்கத்துடன் கைகூப்பினார். எவ்வளவோ சொல்லியும் கூட படம் எடுத்துக் கொள்ள வெட்கி விலகி விட்டார். நான் மம்முட்டியிடம் என் அப்பாவின் பொறாமை பற்றி சொன்னேன். அவர் தன் ஸ்டைலில் வாயை திறந்து கண்ணை சுருக்கி சிரித்தார்.


அவரது எளிமை எனக்கு வியப்பாக இருந்தது. பொதுவாக நான் கண்ட திரை நட்சத்திரங்கள் மிக எளிமையாக, பிறரை மதிக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை அது ஒரு பாவனை என கருதினாலும் கூட புது மனிதர்களை இயல்பாய் உணர வைக்க அது அவசியம் தான்.


மம்முட்டி ஒரு மிகை இயல்பு நடிகர். தமிழில் சிவாஜி-கமல்-விக்ரம்-சூர்யா வரிசையில் நமக்கு மிகை-இயல்பு நடிகர்களுக்கு ஒரு மரபே உண்டு. ஆனால் மலையாள சினிமாவில் மம்முட்டி தனித்து நிற்பவர். படப்பிடிப்பு துவங்கியதுமே அவர் தனது பாத்திரத்தின் இறுக்கத்துக்குள் சென்று விடுகிறார். அவரது உடல் மொழியே மாறி விடுகிறது. காட்சி முடிந்த பின்னரும் கூட அவர் அதே பாவனையுடன் தான் உலவுகிறார். ”பேரன்பின்” பாத்திரத்திற்காக அவர் தோள்களை இறுக்கி, கைகளை ராணுவ பாணியில் நீளத் தொங்க விட்டு ஒரு உடல் மொழியை பயன்படுத்தி இருக்கிறார். ஒரு சங்கடமான காட்சியில் மற்றொரு பாத்திரம் வசனம் பேசுகிறார். மம்முட்டிக்கு அப்போது வசனம் இல்லாத போதும் பலவித பாவனைகளை வெளிப்படுத்துகிறார். இதுவே மோகன்லால் என்றால் தலையை குனித்து கண்களை தாழ்த்தி வெறுமனே நின்று தன் எளிய சைகைகள் மூலம் மட்டுமே உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார். இரண்டு மாறுபட்ட நடிப்புப் பள்ளிகளை சேர்ந்தவர்கள் இருவரும்.
 மம்முட்டியால் ஒரு காட்சியில் மற்றொரு பாத்திரத்தை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க முடியும். அந்த பணிவு அவர் என்றும் தன்னை ஒரு திரை மாணவனாய் கருதுகிறார் என்பதில் இருந்து வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...