முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பாவின் புலிகள் மற்றும் கதை முடிவுக்கு... பற்றி பேராசிரியர் மங்களம்

Image result for அப்பாவின் புலிகள்
Finished reading your novel, kadai mudivirku... and the collection of stories, appavin puligal. 
The novel made rapid reading but much of it, i felt, was similar to arushi murder case that rocked noida/delhi some years back. Is that a coincidence or a concious take-off? 
Your stories are amazing. A touch of magical realism in many, a few are surreal but enjoyed reading each one of them. Appavin puligal was a fascinating take on dealing with grief n difficult relationship with one's father. It touched a raw nerve in me. 
Thanks so much n best wishes. 
B Mangalam

உங்கள் நாவலான “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” மற்றும் சிறுகதைத் தொகுப்பான “அப்பாவின் புலிகள்” இரண்டையும் வாசித்து முடித்தேன்.
நாவல் வேகமாய் சென்றது; அதில் கணிசமான பகுதி ஆருஷி கொலை வழக்கை நினைவுபடுத்தியது. அது திட்டமிட்டே அவ்வாறு எழுதப்பட்டதா அல்லது எதேச்சையாய் அவ்வாறு அமைந்ததா?
உங்கள் கதைகள் அற்புதம். சில கதைகளில் மாந்திரிக எதார்த்தத்தையும், வேறு சிலவற்றில் சர்ரியலிசமும் கவனித்தேன்; ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்தேன். “அப்பாவின் புலிகள்” கதை அப்பாவுடனான ஒருவரின் உறவில் நேரும் இழப்புணர்வையும் சிக்கல்களையும் பேசும் மனதை ஆட்கொள்ளும் கதை. என்னை வெகுவாய் சலனமடையச் செய்தது அக்கதை. வாழ்த்துக்களும் நன்றியும்.

பி. மங்களம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Counterarts இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை

"There has always been a permanent child within Kafka. Society functions as an extension of the office and the family, constantly monitoring and evaluating people and subjecting them to the examination of its rules. In other words, even when Kafka leaves home to go to work, and even afterwards, he remains within the family. Within the family, he is always a son or a brother. The family preserves itself through continuous self-surveillance and mutual surveillance. The same thing happens outside it." https://medium.com/counterarts/kafkas-diaries-735b74cd0c44

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.