முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசி (3)


Image result for city girls painting
இன்னும் அரைமணி காத்திருந்தான். சாப்பாட்டு இடைவேளை என்பதால் மனிதவளத் துறையினரும் மேலாளர்களும் வெளியே போயிருப்பதாய் செக்யூரிட்டி அடிக்கடி சொன்னார். அவனுக்கு அவர்கள் ஏன் சாப்பிடுகிறார்கள் என கோபம் ஏற்பட்டது. அவர் அவனைப் பார்த்து ஏப்பம் விட்டார்.


சற்று நேரத்தில் ஒருவர் வேகமாய் நடந்து அலுவலகம் நோக்கி சென்றார். சட்டென நின்று அவனைப் பார்த்தார். போன வாரம் மொட்டை போட்டிருக்க வேண்டும். குள்ளமானவர். டெடிபேர் கண்கள். நெற்றியில் அடிக்கடி சுருக்கங்கள் தோன்றி மறைந்தன. சட்டையை இன்செய்து மாட்டியிருந்தார். பளபப்பான ஷூ. பேண்டை பார்த்ததுமே ரெண்டாயிரம் ரூபாய் மேல் இருக்கும் எனத் தோன்றியது. ஒரு கையில் கடிகாரம். இன்னொரு கையில் பிரேஸ்லெட். செக்யூரிட்டியிடம் அவனைப் பற்றி விசாரித்தார். சி.வியை எடுத்துப் பார்த்தார். அவனிடம் கேட்டார்நீங்க முன்னாடி இங்க அப்ளை பண்ணி இருக்கீங்களா?”
அவருக்கு முன்னம்பற்களில் ஒன்று இல்லை. அதுவும் குறுகுறுவென கண்களும் சேர்ந்து அவரை ஒரு பெருச்சாளி போல் காட்டியது.
இல்ல சார்”, அவன் பாதி எழுந்த நிலையில் சொன்னான். அவன் அப்படி நின்ற நிலையை அவர் சந்தேகத்துடன் பார்த்தார். அவர் அவனது விபரப்பட்டியலுடன் உள்ளே போனார்.

சற்று நேரத்தில் வரிசை வரிசையாய் பெண் ஊழியர்கள் சென்றார்கள். ஒரு பூனையை போன்று தற்காப்பு உணர்வுடன் நடந்தார்கள். தோள்களை அசைக்கும் விதம் எந்திரமனிதனை ஒத்திருந்தது. யாராவது அடித்தொண்டையில் ஓசை எழுப்பினால் உடனே வரிசையில் திரளும் அளவுக்கு மிகுந்த பயமும் பதற்றமும் கொண்டவர்கள்.

 அடுத்து செக்யூரிட்டி போனில் பேசி விட்டு அவனை உள்ளே போக சொன்னார். அவன் ஒரு காலியான ஹாலில் ஒரு கணினி முன் சென்று அமர்ந்தான். சற்று நேரத்தில் மொட்டையடித்த மனிதர் அவனைத் தேடி கையில் காகிதங்களுடன் வந்தார்.
என்ன இங்க உட்கார்ந்திருக்கீங்க?”
அவன் உடனே எழுந்து நின்றான்.
பரவால்ல. உட்காருங்க
அவர் அவனிடம் காகிதங்களை நீட்டினார்.
ஆரம்பிக்கிற டைமை குறிச்சிக்குங்க. முடிச்சதும் அதையும் குறிச்சிக்குங்க. நானே வந்து வாங்கிக்கிறேன்.”
அவன் தலையாட்டினான்.
இது புரூப் ரீடிங் டெஸ்ட். தெரியுமில்ல?”
அவன் தெரியாது என தலையாட்டினான்.
இதுல மட்டும் தான் வேகன்ஸி இருக்கு. ரெண்டு பேப்பர்ல உள்ளதையும் ஒப்பிட்டு பார்த்து திருத்துங்க. என்ன?” பிறகு சட்டென அவர் தொனி மாறியதுதெரியாதுன்னா ஏன் வந்தீங்க? உங்களை யார் டெஸ்டுக்கு கூப்பிட்டது?”
அவன் பத்திரிகையில் பார்த்து தானே வந்ததாய் சொன்னான்அப்பிடியெல்லாம் வரக் கூடாது தெரியுமில்ல?”
இதற்கு எப்படி பதிலளிக்க என அவனுக்கு தெரியவில்லை.
பிரஷ்ஷர்ஸ் எடுக்குறீங்கன்னு கேள்விப்பட்டேன்
அதுக்குன்னு? நீங்களே நேரா நுழைஞ்சிடறதா?”
வாக்கின்னு போட்டிருந்தாங்க
அது டிகிரி முடிச்சவுடன் வர பசங்களுக்கு. உங்களுக்கு வேற ஏரியால அனுபவம் இருக்கு. நீங்க இதுக்கு ஓவர் குவாலிபைட். எதையும் விசாரிக்காம வந்திடறதா?”
சாரி சார். என்ன வேலைன்னாலும் பரவால்ல. அதான் சரியா கேட்காம வந்திட்டேன்
சரி பரவால்ல. சரி காலில என்ன? வரும் போதே கவனிச்சேன்
அவன் மீண்டும் அவரிடம் சொன்னான்.
ம்ம் அதுக்குத்தான் நீங்க எல்லாம் ஏன் இப்பிடி விசாரிக்காம வந்து சிரமப்படணும்னு கேட்கிறேன். உங்களுக்கும் கஷ்டம். அடுத்தவங்களுக்கும் சரி விடுங்க.”
தலையாட்டினான்.
உட்காருங்க
உட்கார்ந்தான். இரண்டு காகிதங்களையும் தன் முன் பரத்தி விட்டு தேர்வை ஆரம்பித்தான்.
 கண்கள் களைக்கும் போதெல்லாம் பக்கத்து அறையில் கணினியில் வேலை பார்க்கிறவர்களை வேடிக்கை பார்த்தான். அவர்கள் தேநீர் அருந்தியபடி கணினித் திரையில் பார்வையை ஓட்டினார்கள். பேசினார்கள். போனை எடுத்து படித்தார்கள். குறுந்தகவல் அனுப்பினார்கள். எல்லாமே திரையில் இருந்து கண்ணை எடுக்காமல் தான்.
ஒரு வெள்ளைக்காரர் வேகமாய் நடந்து சென்றார். முந்தின நாள் மாலை அவர்கள் உணவருந்திய இடத்தில் கடல் உணவு சிறப்பாக இருந்தாலும் காரம் தனக்கு ஒத்துக் கொள்ளவில்லை; அன்று மழை பெய்வதால் ஷாப்பிங் போகிற இடத்தில் கூட்டம் அதிகம் இருக்குமா? அவருடைய கெஸ்ட் ஹவுஸில் துவைக்க வேண்டிய துணிகள் வாளியில் உள்ளன. அவற்றை எடுத்துப் போக வேலையாள் வருவாரா அல்லது வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என அமெரிக்க ஆங்கிலம் பேசி தொடர்ச்சியாய் பேசினார். அவருக்கு பின்னால் ஒரு மத்திய வயது சிவப்பான பெண் பதில் சொல்லியபடி சென்றாள். அவள் புரோஜெக்ட் மேலாளராக இருக்கலாம். அவர் அவள் புரோஜெக்ட் சம்மந்தப்பட்ட மேல்நாட்டு நிறுவனத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். மழை காரணமாய் துவைக்க வேண்டிய பெண் வராமல் போய் விட்டாள் என்பதற்கு மன்னிப்பு கேட்டாள். தானே அந்த துணிகளை வந்து எடுத்துப் போய் துவைத்து தருவதாய் சொன்னாள். வெள்ளைக்காரர் அவளுக்கு நன்றி சொன்னார். அவருக்கான அன்றைய இரவுணவும் தன் வீட்டில் இருந்து கொண்டு வந்திருப்பதாய் சொன்னாள். நண்டு வறுவல், கோழி பொரித்தது, சப்பாத்தி என ஒரு சின்ன பட்டியல். அவர் அதைக் கேட்டு கண்களை விரித்து ஆர்வம் காட்டினார். ஜாக்புரூட் பாயசம் கூட உண்டு. மீண்டும் நன்றி சொன்னார். அவருக்காய் அவள் கணவர் மெனக்கெட்டு மழையையும் பொருட்படுத்தாமல் அசைவ வகைகளை வாங்கி வந்ததாயும் ஒரு புது ரெஸிப்பி படி அவள் எல்லாவற்றையும் சமைத்திருப்பதாயும் விளக்கினாள்.

 (தொடரும்)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
If you want to obtain a great deal from this paragraph
then you have to apply such methods to your won weblog.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...