Skip to main content

ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிக்கலாமா?

நண்பர்களே, ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன் - சினிமா, அரசியல், சாப்பாடு என்றெல்லாம் கும்பலோடு கோவிந்தாவாக அது இருக்காது. இலக்கியம், தத்துவம், நான் வாசித்த சிறந்த நூல்களின் அறிமுகம், (அவ்வப்போது மட்டும்) சமூக அரசியல் விசயங்களில் என்னுடைய பார்வை, கூடவே அன்றாடம் என் மனத்தில் உதிக்கிற எண்ணங்களை விவாதிப்பது என காணொலிகளைப் பதிவேற்ற உத்தேசம்.

 பல்லாயிரம், பல லட்சம் பார்வையாளர்களைப் பெறுவதோ, மூட்டை மூட்டையாய் சம்பாதிப்பதோ உத்தேசம் அல்ல; என்னால் இந்த பிரேக்கிங் நியூஸ், கேளிக்கையாள யுடியூபர்களால் போட்டியிட முடியாது. சுதந்திரமாக சொந்த விருப்பப்படி இயங்கினால் ஒருவருக்குக் கிடைக்கிற வியூஸ் எனக்கும் போதும் என நினைக்கிறேன். 


எதற்கு ஒரு யுடியூப் சேனல்?


மக்கள் படிப்பதில் ஆர்வம் இழந்து கொண்டே வருகிறார்கள். ஒன்றை காட்சிபூர்வமாய், பேச்சாய் கொண்டு சேர்க்கும் போது அழுத்தமாய் அவர்கள் மனத்தில் பதிகிறது.

மேலும் ஒரு கருத்தை வாசகர்களை விட பார்வையாளர்களிடம் பரவலாக வேகமாய் கொண்டு சேர்க்க முடிகிறது. காணொலி வழியாக வெளியாகும் போது, எழுத்தை விட, குறைந்தது பத்து மடங்கு அதிகமாய் நம் கருத்துக்கள் போய் சேர்கின்றன. திறமையான பேச்சாளர்களால் நூறு மடங்கு அதிகமாய் கூட போய் சேர முடியும்.


 பிளாகில் இருந்து பேஸ்புக்குக்கு வந்ததைப் போல யுடியூபுக்குப் போகிறோம். எப்படி பேஸ்புக்கில் பிரபலமாக முயல்வில்லையோ யுடியூபிலும் மாட்டேன். அதனால் லைக் பண்ணுங்க, ‘சர்ப்ரைஸ்’ பண்ணுங்க என்றெல்லாம் ஒவ்வொரு முறையும் உங்களை டார்ச்சர் பண்ண மாட்டேன். வழக்கமாய் பார்க்கிறவர்கள், பார்க்க வேண்டியவர்கள் மட்டும் பார்த்தால் போதும். வனிதா சேனல், சினிமா விகடன் பேட்டிகள், சமையல் வீடியோக்களை, செலிபிரிடி விளாகுகளைப் பார்க்கிறவர்களிடம் ஒரு தீவிரமான கருத்தை சுலபத்தில் கொண்டு சேர்க்க முடியாது என அறிவேன். என்னைப் போல யோசிக்கிற ஒரு சிறுபான்மையைத் தான் இலக்காக வைத்துள்ளேன். 


உங்கள் அறிவுரைகளை, கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

Comments


உங்களைப் போன்றவர்களிடம் உள்ள எழுத்தின் வீச்சு யூடியுப்பின் பேச்சில் வராது.. அப்படியே ஆரம்பித்தாலும் ஒரு வீடியோவில் ஒரு செய்தியை மட்டும் பகிருங்கள் அதுவும் 10 நிமிடங்களுக்கு மேல் செல்ல வேண்டாம்
Costal Demon said…
கண்டிப்பாக ஆரம்பியுங்கள். உயிர்மையில் கிரிக்கெட் பற்றி நீங்கள் பேசுவதைக் கேட்ட பின் தோன்றியது, உங்களுக்கு நன்றாகப் பேசவும் வருகிறது. வாழ்த்துக்கள்!
Unknown said…
நிச்சயம் ஆரம்பியுங்கள்.
Senthil Prabu said…
I'm with you Nanbarae:)
Manimaran J said…
உங்களுடைய எழுத்தும் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுடைய பயணத்திற்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் அபிலாஷ்.
உங்கள் எண்ணங்களுக்கு காட்சி வடிவம் கொடுக்க முடியுமானால் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் உயிர்மையில் எழுதிய ‘புரூஸ்லீ’ பற்றிய கட்டுரைக்கு அப்படி ஒரு வடிவம் கொடுக்க உங்கள் அனுமதியுடன் நினைத்திருந்தேன். ‘முகமூடி’ படம் பற்றிய கருத்துக்களுடன் மாறுபட்டாலும். சீக்கிரமே உங்களை யூ-ட்யூப் காணொளிகள் மூலம் சந்தித்து இணைப்பில் இருக்க ஆவல்.
மீண்டும் வாழ்த்துக்களுடன்
ஆத்மாநாம்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...