கல்லூரியில் எனக்கு சிறந்த ஆசிரியர்கள் சிலர் அமைந்தார்கள். ஸ்காட்டில் படிக்கும் போது ஜனார்த்தனன், ஜேம்ஸ் டானியல், செபாஸ்டியன், ரொசாரியோ என. எம்.ஸி.ஸியில் வி.ராஜகோபாலன், கணேஷ், செரியன் குரியன், நிர்மல் செல்வமணி போன்ற நட்சத்திர ஆசிரியர்கள். கிரைஸ்டில் நான் அடிக்கடி போய் அமர்ந்து பாடம் கேட்பது சமூகவியல் பேராசிரியர் ராஜீவின் வகுப்புகள். ராஜீவ் ஒரு சிறந்த ஆசிரியர் என்றாலும் என் நண்பர். ஆகையால் அவரைத் தவிர்த்து இந்த நல்லாசிரியர்களை இந்த நன்னாளில் நன்றி கூர்கிறேன்.
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...
கருத்துகள்