"பணம் கொடுக்காமல் தேர்தலை நடத்துவது தான் தேர்தல் அரசியலின் அச்சாரம்!"
- அண்ணாமலை
சரி, ஒத்துக்கிறேன். ஆனால் பணம் கொடுத்து ஊடகங்களை விலைக்கு வாங்கி மக்களை மூளைச்சலவை செய்வது? அதே பணத்தால் ஊடக தரகர்களை வைத்து வலையொளிகளில் பலரை அவதூறு செய்து, சிலரை ஊதிப்பெருக்குவது? அதே பணத்தால் கே டி ராகவன், கேசவ வினாயகம் போன்றோரை ஸ்டிங்கில் சிக்க வைத்து கட்சியில் இருந்து ஒதுக்குவது? இதெல்லாம் தேர்தல் ஊழலில் வராதா மிஸ்டர்? கடைசியாக தேர்தல் செலவுக்காக பாஜக பல மாநிலங்களில் ஒவ்வொரு தேர்தலிலும் இறக்கும் பணம் எவ்வளவு? தமிழகத்தில்? அதெப்படி மாவட்ட அளவில் புதிதாக பதவி பெறும் பாஜக நிர்வாகிகள் பணத்தில் கொழிக்கிறார்கள்? இப்பணம் எங்கிருந்து வருகிறது? அப்பணத்துக்கான கணக்கு என்ன? நீங்க பெரிய உத்தமர் என்றால் 2024 தேர்தலுக்கான உங்க பட்ஜெட் என்னவென்று சொல்லுங்க? கணக்கு கொடுங்க!
கடைசியா உங்க பிரச்சினை அதிமுக முழுக்க உங்க கட்டுப்பாட்டுக்கு வரணும், எடப்பாடி மண்டியிடணும். அதானே? உங்க வீட்டுப் பிரச்சினைக்காக தில்லிக்குப் போற வழியில ஏன் பக்கத்து வீட்டைத் திருத்துவேன்னு உளர்றீங்க? சம்மந்தமில்லாத ரெண்டு விசயங்களை ஏன் கோர்த்து விடுறீங்க?
கருத்துகள்