முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாலும் தெரிந்தவன் நல்ல வழியில் போவான் - தமிழ்ப்பிரபா

 நாவல் எழுதுவது பற்றி நண்பர் அபிலாஷ் சந்திரன் ஆன்லைன் வகுப்பு எடுக்கிறார். இப்போதெல்லாம் கவிதை, கதை எழுதுவது குறித்து கலைநிபுணர்கள் வகுப்பெடுக்கும் காலமாக இது இருக்கிறது. நல்லதுதான். ஆனால் படைப்பு மனங்கள் ஒர்க்‌ஷாப்புகளில் உருவாகாது என்பது என் அபிப்ராயம். அது அந்தரங்கமாக மெல்ல படரும் தீ!

ஆனால் படைப்பாளியாக முனையும்
ஒருவருக்கு ஒரு பாதையையும், வரைபடத்தையும்,இவை அளிக்கும்.
அந்த வழிதான் போக வேண்டுமென அவசியமில்லை. அவரவர் கைமணல். எனினும் ‘நாலுவழி தெரிஞ்சவன் நல்ல வழில போவான்’ என நம்பலாம்.
நாவல் ஒர்க்‌ஷாப்புகளில் நான் விரும்புவது, நாவல் எழுதுவது எப்படி என்பதை விட நாவலை எடிட் செய்வது எப்படி என்கிற ஒர்க்‌ஷாப்புகள்தான் இன்று பெரும் தேவையாய் இருக்கிறது.
ஒருவர் தன் புனைவின் சாத்தியத்தை கண்டறிந்து சன்னதத்துடன் எழுதி முடித்த பிறகு, அதிலிருக்கும் நிதானமின்மையை சீர்செய்யும் கட்டமைப்பையும், வாக்கியச் சிடுக்குகளை நீவிவிடும் லாகவத்தையும், சேகரித்த தகவல்களை கதையினுள் சொருகாமல் இயல்பாக வெளிப்படுத்த வேண்டிய இடங்களை கண்டடைதலையும் என Novel editing’ல் பல்வேறு நுட்பங்கள் இருக்கின்றன. இவைகளை நாவல் எழுதுபவரே அறிந்து கொள்ளும்போது மேலும் செறிவான படைப்பை அவர் அளிக்க முடியும்.
நண்பர் அபிலாஷ் அதையும் செய்வார் என்று நம்புகிறேன். Abilash Chandran’க்கு என் வாழ்த்துக்கள். நேரம் அமைந்தால் நானும் கலந்து கொள்வேன். நண்பர்களின் கவனத்திற்கு..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...