முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோப்பென்ஹேகன் பல்லைக்கழகம் வழங்கிய கீர்க்கெகாட் கோர்ஸரா வகுப்பில் தேர்வானேன்

நான் மிகவும் ரசித்துப் படித்த கோர்சரா வகுப்பு இது. வகுப்பை நடத்திய ஜான் ஸ்டுவர்ட் உலகளவில் மதிக்கப்படுகிற கீர்க்கெகாட் அறிஞர். Kierkegaard’s Relations to Hegel Reconsidered (Cambridge) மற்றும் Idealism and Existentialism (Continuum) ஆகிய நூல்களை எழுதியவர். Kierkegaard Research: Sources, Reception and Resources எனும் ஆய்விதழின் தலைமை ஆசிரியர்.
இவ்வகுப்பின் ஒவ்வொரு தலைப்புக்கும் மூன்று, நான்கு காணொளிகள் இருக்கும். ஆனால் அவற்றைக் கேட்டுப் புரிந்துகொள்ள கீர்க்கெகாட்டின் நூல்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட அத்தியாயங்களைப் படிக்க வேண்டும். நான் ஏற்கனவே கீர்க்கெட்காட்டை ஓரளவுக்கு வாசித்திருந்ததால் இது சற்று எளிதாக இருந்தது. எனக்குச் சற்று சவாலாக இருந்தது தேர்வுகளே. ஒவ்வொரு தலைப்பை முடித்ததும் பத்து பன்முகத் தெரிவு வினாக்கள் வரும். அவற்றில் 90% எடுக்காவிட்டால் திரும்பவும் முயல வேண்டியிருக்கும். கடைசியாக 2000 வார்த்தைகளுக்கு ஒரு கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும். அதில் 15 மதிப்பெண்களுக்கு 13வது வாங்க வேண்டும். இல்லாவிட்டால் தோல்வி அடைய வேண்டி வரும். அடுத்து நம் கட்டுரையை சக-மாணவர்கள் மதிப்பிட அனுப்புவார்கள். அதற்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டி வரும். இன்று முழுக்க அதையே எழுதினேன். நிறைய மேற்கோள்களைச் சேர்த்து கருத்துக்களை நிரூபிக்க விரிவாகப் படிக்க வேண்டியிருந்தது. கடைசி சமர்ப்பிப்பில் என்னால் 15/15 எடுக்க முடிந்தது.

இதற்குப் படிக்கும்போது எழுதிய குறிப்புகளை அவ்வப்போது இங்கு முகநூலிலும் எழுதி வந்தேன். இனியும் அவ்வப்போது எழுதுவேன். கீர்க்கெகாட்டை தமிழில் சுருக்கமாக எளிமையாக அறிமுகப்படுத்துவது அவசியமானது. 

கோர்ஸரா வகுப்புத் தேர்வு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...