முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தன் தலையைத் தானே துண்டிக்கும் ஈ

Found a decapitated fly on my windowsill : r/mildlyinteresting 

நேற்று ஒரு காணொளித் துணுக்கைக் கண்டுகொண்டிருந்தேன் - ஒரு ஈ தன்னுடைய உடலைச் கால்களால் சுத்தப்படுத்துகிறது. அது ஆவேசமாகத் தலையில் இருந்து அழுக்கை நீக்கி அதை சீர்படுத்தும்போது அது எதிர்பாராமல் துண்டிக்கப்பட்டு விடுகிறது. அதன் சுவாச உறுப்பு தலையில் இல்லையென்பதால் அதனால் சற்று நேரம் உயிருடன் இருக்க இயலும், அதன் மூளையை அது இழந்தாலும் மார் நரம்புகளைக் கொண்டு அதனால் தன் இயக்கத்தை ஒருங்கிணைக்க முடியும். ஆனாலும் விரைவில் உணவும் நீரும் இன்றி அது இறந்து போகும் என ஆய்வாளர் சொல்கிறார். குறிப்பாக ஈயின் தலை ஏற்கனவே காயப்பட்டிருக்கும்போதோ கழுத்து பலவீனமாக உள்ளபோதோ இப்படியான விபத்து நடக்க வாய்ப்பதிகம்.
ஈ தான் வேகமாகப் பறக்கவும் தன் உடலில் உள்ள வாசனைகளை அகற்றவும் சுத்தப்படுத்துவது அவசியம், அதே நேரம் அது மிகவும் தொந்தரவுக்கு உள்ளாகும்போது அது மிகை சுத்தப்படுத்துதலில் ஈடுபடக் கூடும் என்றும் ஆய்வாளர் சொல்கிறார். எனக்கு அப்போது மனித மனம் குறித்த உன்னத உண்மையை அவர் சொலவதாகத் தோன்றியது.
நாமும் இதையே கடும் நெருக்கடியின்போது, அழுத்தத்தின் போது பண்ணுகிறோம். சில நேரங்களில் நமது உடலை வருத்துகிறோம், அதைத் துன்புறுத்தி அழித்து ஒழுங்குபடுத்த விழைகிறோம் (அதிகமான போதை வஸ்துக்களை பாவிப்பது, உறவுகளைச் சீர்கெடுத்துவது, உடலை மோசமாக்குவது, தூக்கத்தைக் கெடுப்பது, விபத்தில் சென்று சிக்குவதில் இருந்து தேவையில்லாமல் பயந்தும் கற்பனை செய்தும் எண்ணச் சுழலில் சிக்குவது, உடலை நேரடியாக அறுத்துக் காயப்படுத்துவதில் இருந்து மயிரைக் கத்தரிப்பது வரை) இது ஆபத்து நம்மைச் சூழும்போது தப்பிப்பதற்கான உபமனத்தின் உத்தியே. சிலநேரங்களில் நாம் பாலியலில் ஈடுபடாமல் இருப்பது கூட நம்மைத் தப்பிக்கும் நிலையில் வைத்திருக்கவே (சிலர் நேரெதிராகவும் இருக்கக் கூடும்).

வேலை குறித்த பாதுகாப்பின்மை, சமூக ஏற்பின்மை, அவமானம் இப்படி எதுவாக வேண்டுமெனிலும் ஆபத்தாக நம் மனதுக்குத் தோன்றலாம். ஆனால் இவை நிஜமான ஆபத்துக்களா என்றால் இல்லை. ஒரு ஈயின் தலையில் ஒட்டியிருக்கும் மைக்ரோ அளவிலான தூசோ அழுக்கோ அதன் பறத்தலைத் தடை பண்ணப் போவதில்லை. நிதானமாக அது தன்னைச் சுத்தமாக்கியிருக்கலாம். அல்லது செய்யாமல் பறந்து கொண்டும் இருக்கலாம். ஆனால் எது அந்த கண்ணுக்கே புலப்படாத அழுக்கைக் குறித்து அவ்வளவு கவலைப்பட வைக்கிறது?

தன் தலையைத் தானே தற்செயலாகத் துண்டிக்கும் ஈயின் படிமம் எனக்குள் தோன்றியபடியே இருக்கிறது. அதுதான் செய்த தவறைத் தாமதமாக உணரும்போது நேரம் கடந்திருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...